யாழில் காவல்துறையினர் கொடூரமான தாக்குதல்: உலகத் தலைவர்கள் அதிர்ச்சி

  காணாமல் போனவர்களுடைய உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைப்  பொறுத்துக் கொள்ள இயலாத சிங்களக்காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக பெண்கள் என்று பாராமல் எம்மையும் பாதிரியார்களையும் தாக்கினர். கவனயீர்ப்புப் போராட்டத்தில் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சரவணபவன்,

இசை அமைப்பாளர் பரத்வாசின் திருக்குறள் பாடல் பேழை

இசை அமைப்பாளர் பரத்வாசு. 1330 திருக்குறள்களையும் 500 பாடகர்களைக் கொண்டு பாட வைத்துத் திருக்குறள் பாடற்பேழை உருவாக்குகிறார்.  திரையிசையால் பணம் கிடைத்தாலும் மன நிறைவிற்காகத் திருக்குறள் பாடலிசை முயற்சியில் ஈடுபட்டுவருவதாக இசைஅமைப்பாளர் பரத்வாசு கூறுகிறார்.

முள்ளிவாய்க்கால் முற்றம்: தமிழக அரசு கட்டித்தர வேண்டும்

-திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை அருகே விளார்  என்னும் ஊரில் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எனும் நினைவிடத்தின் சுற்றுச்சுவரினை தமிழக அரசு திடீரென இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. மேலும், அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் சிதைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான

அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

  சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் நாள் விழாவும் சிறந்த நூலகர்களுக்கான  எசு.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழாவும் 14.11.13 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த விழாவில்   பேசிய பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்

திருக்குறள் வாழ்வியல் நூல்!

  – சுப.வீரபாண்டியன் ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், தாய் மொழியை மறந்துவிடாதீர்கள்! எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழுங்கள்.. ஆனால், சொந்த நாட்டை மறந்து விடாதீர்கள்!

தமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்!

முந்தைய செய்தி இலங்கை பொதுவள ஆய மாநாட்டை இந்திய அரசு, முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்! தமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்!   இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களைக் கொன்று குவித்துப் போர்க்குற்றத்திலும் இனப்படுகொலைகளிலும் 

பிரித்தானியத் தமிழர் பேரவை அறிக்கை

முந்தைய செய்தி சட்ட மன்றத் தீர்மானம் அவலப்பட்ட ஈழத்தமிழ் மக்களிற்குப் புதிய நம்பிக்கையை ஊட்டுகின்றது: பிரித்தானியத் தமிழர் பேரவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் செயலலிதா அம்மையார் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அறிவித்துள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை, இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தமிழ்

காணிக்கை

விடுதலைப்பூ ஒரு நாளில் மலர்ந்திடாது – என்றாலும் என்றேனும் ஒரு நாள் மலர்ந்தே தீரும் என்ற நம்பிக்கையில் தாய் மண் காக்க உயிர் நீத்த உறுப்புகள் இழந்த உறவுகள் பிரிந்த உடைமைகள் பறிகொடுத்த ஈழத்தமிழ் மாவீரர்களுக்கும் தாய்மண்காக்கப் போராடிய, போராடும் மண்ணின் மைந்தர்களுக்கும்

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப் பள்ளிகள்

  – வெற்றிச்செழியன் செயலர், தமிழ்வழிக்கல்வி இயக்கம் தமிழ்வழிக் கல்வி        “தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது, சரியானது”, என நாம் அனைவரும் அறிவோம்.  உலகெங்கும் வாழும் அறிஞர்கள் இதையே வலியுறுத்தி வருகின்றனர்.  தமிழ் நமது தாய்மொழி; எனவே, தமிழே நமது கல்வி மொழியாக இருக்க முடியும்; இருக்க வேண்டும்.

அனைவரும் பார்க்க வேண்டிய முள்ளிவாய்க்கால் முற்றம்

 – வழக்கறிஞர் இரா.இராசேந்திரன், கரூர்.  தஞ்சை விளார் சாலையில் 2009 மே 17,18,19 நாள்களில் இலங்கை அரசபடையினர் தமிழ்ஈழ முள்ளிவாய்க்காலில் 1,50,000 தமிழர்களை கொன்று ஒழித்த இனஅழிப்பு போரில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவிடமாக உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முயற்சியால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம்

காலத்தால் அழியாத தமிழ்நாடன்

கவிஞர் சேலம் தமிழ்நாடன் [மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர்,] தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. அவரின் இலக்கியப் பணிகள் காலத்தால் அழியாதவை. சேலம் மாவட்டம் ஏர்வாடியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த தமிழ்நாடனின் இயற்பெயர் சுப்பிரமணியன். திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்திருக்கும் அவ்வூரின் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் இருசாயம்மாள் இணையர்,

தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் !

– கவிஞர் இரா .இரவி எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! ‘கனியிருப்பக்  காய்கவர்ந் தற்று ‘  திருவள்ளுவர் கற்கண்டாய் வடித்த குறள் இதற்கும் பொருந்தும் ! கனியாக நல்ல தமிழ் எழுத்துககள் இருக்கையில் !