இலக்குவனார் நடுநிலைப்பள்ளியின் விளையாட்டு விழா

    தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பிறந்த  ஊர் [இப்போதைய நாகப்பட்டினம் மாவட்டம்,  திருமரைக்காடு(வேதாரண்யம்) வட்டம்,] வாய்மைமேடு என்னும் ஊராகும்.  இங்குள்ள இலக்குவனார் நடுநிலைப்பள்ளியில் பங்குனி 17, 2045 / 31.03.14 அன்று விளையாட்டு விழா நடந்தது. விழா தொடர்பான  ஒளிப்படக்காட்சிகள் :       நன்றி : – வாய்மைமேடு மணிமொழி முகநூல் பக்கம்

இனம் … ஈனம் : ‘தின இதழின்’ சரியான கணிப்பு

இட்லரால் யூதர்கள் அநியாயமாக அழிக்கப்பட்ட காலக்கட்டத்தின் அடிப்படையில்  அந்த யூத மக்களை வைத்தே மூளை வளர்ச்சி இல்லாத ஒரு யூத இனக் கதாபாத்திரம்,  ஆட்டம் பாட்டம் கூத்து, மற்றும் போர்க் காலத்திலும் கூட அவர்கள்  மகிழ்ச்சியாகவே  இருந்தார்கள் என்று  இன்று கூட யாராவது  நகைச்சுவையாக ஒரு படம் எடுக்க முடியுமா? சும்மா விடமாட்டார்கள் யூதர்கள். ஆனால் ஈழத்தமிழர்களை வைத்து அப்படி ஒரு படம் எடுத்து, இதிலிருக்கும் உள்வஞ்சகம் தெரியாத நம்மில் சிலரையே,   அதைப் பார்த்துச் சிரிக்கவும் வைக்கும் தந்திரத்தை செய்கிறது இந்தப் படம்.  …

திருக்குறளில் உருவகம் 3 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி

(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)   இவ்வாறு முட்களும், அடிமரத்தை வெட்டி வீழ்த்தும் கோடரியும் துன்பத்தில் உருவாகின்றன. மரத்தை வெட்டுதலும், வீழ்த்துதலும் அழிவின் சின்னமாகின்றன. இவ்வாறே பிணக்கினால் வாடிய காதலி வாடிய கொடியாகிறாள்; அவளது ஊடலை நீக்காது, கூடாது செல்லும் காதலன் அக்கொடியை அறுக்கும் கொடியவனாகிறான். முள் மரம் இளையதாக இருக்கையிலே அழிக்கப்பட வேண்டும்; ஆனால் பழம் பெரும் அடிமரமும், வாடிய கொடியும் காக்கப்பட வேண்டும். பெருங்குடி காப்பவன் முதலில் இல்லாளின் வாட்டத்தை நீக்கிக் காப்பவனாக இருக்க வேண்டுமல்லவா?   கயவரை எண்ணிய…

கணினித்தமிழ் வளர்ச்சி – இரண்டாம் மாநாடு

கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையும் மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து  நடத்திய மாநாடு 2014 மார்ச்சு 30 ஞாயிறு காலை 10.30 மணி முதல் மாலை 6 மணிவரை சென்னை மாநிலக் கல்லூரியின் புதிய தேர்வரங்க அறையில் நடைபெற்றது. தொடக்கவிழாவில்,பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தி, . மாநாட்டின் மையக் கருத்தை விளக்கினார். தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சி-செய்தித்துறைச் செயலர் முனைவர் மூ. இராசாராம்  இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கி கணினித்தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மேற்கொண்டுவருகிற பல்வேறு பணிகளை விளக்கிக் கூறினார்….

வள்ளுவரும் அரசியலும் 3 – முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,

(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) அரசு அமைப்பும் இயல்பும்:   வள்ளுவர் அரசின் உருவத்தைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை. அதன் உட்பொருளைப் பற்றியே எண்ணலானார். அரச அமைப்பைவிட ஆட்சி நலத்தையே ஆய்கின்றார். ஏனெனில் எந்த உருவத்தில் அரசிருந்தாலும் மக்கள் பொருளாதார வாழ்வு சிறப்பதற்கு, அந்த அரசின்பால் சிற்சில தகுதிகள் இருக்க வேண்டும். அத்தகுதிகள் இருக்குமானால் மக்களுக்கு இறுதியாக வேண்டும் இன்பவாழ்வு வந்தெய்தும் என்பதே அவர் கோட்பாடாக இருந்தது எனக் கொள்ள வேண்டியிருக்கிறது.   எந்த அரசியல் அமைப்பாயினும் என்ன, ஆட்சி ஆதிக்கம் ஒரு தலைவன்…

தமிழ்க்கணினி : பன்னாட்டுக் கருத்தரங்கம்

    திருச்சிராப்பள்ளியில், பாரதிதாசன் பல்கலைக்கழக கலை-அறிவியல் கல்லூரியில்(நவலூர் குட்டப்பட்டு) தமிழ்த்துறையின் சார்பாக தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்  இருநாள் நடைபெற்றது. முதல் நாளான 27-03-2014 அன்று காலையில் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர்(பொ.) முனைவர் உண்ணாமலை வரவேற்புரையாற்றினார். பாரதிதாசன்  பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் சுப்பையா தலைமை தாங்கினார்.  பாரதிதாசன் பல்கலைககழகப் பதிவாளர் முனைவர் இராம்கணேசு முன்னிலையுரையாற்றினார். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன் மையப்பொருளுரையாற்றினார்.  தமிழ்நாடு  தேசியச் சட்டப்பள்ளி துணைவேந்தர் முனைவர் ந.முருகவேல் வாழ்த்துரை வழங்கினார். …

குறள் நெறி வாழ்க – கவிஞர் கதி.சுந்தரம்

1. தமிழினமே! எழுந்தார்த்துக் குறளென்னும் கேடயத்தைத் தாங்கி நின்றே இமிழ்கடல்சூழ் உலகுய்ய வழிகாட்டு! கலையூட்டு! எழிலை ஈட்டு! குமிழியெனும் இளமைதனைக் கொழிதமிழின் குறள் நெறிக்கே கொடுத்து வாழ்வாய்! அமிழ்தனைய வளம்பலவும் நாடெய்தும்; ஆல்போலப் பெருகி வாழ்வாய்! 2. தூளாக்கு வஞ்சகத்தைத் தோள்தூக்கு முயற்சிக்கே என்று பாடி. ஆளாக்கும் குறள்நெறியை அவனியெலாம் பரப்பிடுவீர்! முழக்கம் செய்வீர்! தாளாற்றிப் பொருள் சேர்ப்பீர்! தருபுகழைப் பெற்றுவாழ்வீர்! வேற்று நாட்டார் கேளாத பழங்காலம் கிளைவிரித்தே அறமுரைத்த குறளே! வாழ்க!!  – குறள்நெறி தை 2, 1995 /15.01.1964

தமிழ் வாழ்க நாளும் – நாமக்கல் கவிஞர்வெ.இராமலிங்கம்(பிள்ளை)

தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில் அமிழ்தென்று வருகின்ற அதுவந்து சேரும். நமதிந்தப் பெயர்கொண்ட மொழியென்ற எண்ணம் தமிழர்க்குப் புகழ்மிக்கத் தருமென்றல் திண்ணம்.       1 பயிருக்கு நீர்என்ற பயன்மிக்க வழியே உயிருக்கு வெகுநல்ல உணர்வுள்ள மொழியே. துயருற்ற மனதிற்குத் துணைநின்றே உதவும்; அயர்வற்ற ஞானத்தை அடைவிக்கும் அதுவே.       2 அன்பென்று அதைமிக்க அறிவிக்க நின்று துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்; தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம்.       3 அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம் பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்; இருள்கொண்ட…

வெல்க குறள் நெறி – புலவர் வேலவன்

  1. கூடல் நகரில் குறள்நெறித் தென்பெருகி ஓடல் இனிதே உவந்தது. 2. குறள் நெறிப் பூங்குயிலே கொள்கைப் புரட்டர் குரல்நெறிக்க வந்தாயோ கூறு. 3. எழுதத் தெரிந்தோர் எழுத்தாள ராகுந் தொழுநோய் துடைப்பாய் துணிந்து. 4. பிறழ்நெறியே பேசுகின்ற பித்தருளும் மாற குறள்நெறியே கூவு குழைந்து. 5. அருள்நெறி பேச அவம் செய்து வாழும் இருள்நெறி யாளரை எற்று. 6. பாலில் நீர் பெய்துவிற்கும் பாவியரைப் போலெழுது நூலில்தீச் சொற்கலப்பின் நூறு. 7. குறுக்குவழி யோடுங் குறுமதியைக் கொட்டிப் பொறுப்பு வழிகாட்டிப் போற்று,…

தமிழுக்குத் தலைவணங்கிய மலையாளம்..! – கவிமணி

     எழுத்தாளனின் எழுத்துகளே வருங்கால மன்பதைக் கட்டமைப்பைத் தீர்மானிக்கின்றன. தரமான முற்போக்கான எழுத்துகள் மூலம் இந்த மன்பதையைச் சமன் செய்வது நல்ல எழுத்தளார்கள் கையில்தான் இருக்கிறது. இலக்கிய எழுத்தாளர் என்றால் பெரும் படிப்பறிவும் தொழில்நுட்ப அறிவும் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. இந்த மன்பதையைப்படித்து, அதனைத் திருத்தும் வகையில் எழுதும் இரண்டு கட்டுரைகள் போதும் ஒருவன் எழுத்தாளனாக ஏற்கப்படுவதற்கு!   ஆனால், இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் பெரும்பாலான எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதில்லை. ஆனால், கேரள மாநிலத்தைப் பொருத்தவரை, எழுத்தாளுமை உள்ள எழுத்தாளர்கள் மதிக்கப்படுகிறார்கள்….

மாமூலனார் பாடல்கள் – 12 : சி.இலக்குவனார்

     கஉ. “ஆண்டு அமைதியாகத் தங்கி இரார்”  – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (மார்ச்சு, 16, 2014 இதழ்த் தொடர்ச்சி) அகநானூறு  201  –  பாலை  அம்ம! வாழி தோழி! பொன்னின்  அவிர் எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை  வினை நவில் யானை விறல் போர்ப்பாண்டியன்  புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை  அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து  தழையணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்  பழையர் மகளிர் பனித்துறை பரவப்  பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை…

1 2 7