பூக்காரி – பாவேந்தர் பாரதிதாசன்

சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன்-நல்ல சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்! பார்த்துப் பறித்த தாமரைப்பூத் தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன் பூத்த முகத் தாமரையாள் புதுமை காட்டி மயங்கி நின்றாள் சேர்த்து….. தேவையடி தாமரை இதழ் என்றேன் தேனொழுகும் வாயிதழ்மலர் ஆகின்றாள்-ஒரு பூவைக் காட்டிப் சேர்சொல் என்றேன் பூவை “என்பேர் பூவை” என்றாள்! ஆவல் அற்றவன் போல் நடந்தேன் அவள் விழிதனில் அலரி கண்டேன் சேர்த்து…. காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து – பலர் கண்பட வாடிய மருக்கொழுந்து நீ…

மாமூலனார் பாடல்கள் – 17 : சி.இலக்குவனார்

 (சித்திரை 14, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 27, 2014 இதழின் தொடர்ச்சி) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்     கஎ. செய்வது என்ன என்று ஆராய்வாய்” – தலைவி   பிரிந்த தலைவன் வரவில்லையே என வருந்தினாள் தலைவி. தலைவியின் வருத்தம்கண்ட தோழியும் மிகவும் வருந்தினாள். அத்தோழியை நோக்கித் தலைவி கூறுகின்றாள்.    அன்புள்ள தோழியே! அவர் (தலைவர்) பிரிவேன் என்றார் அன்று கூறிய  மொழி – ஓயாது கூறிய உறுதிமொழி – “நின்னை விட்டுப் பிரியேன்;…

கூடைமுறம் கட்டுவோர் – பாவேந்தர் பாரதிதாசன்

கசங்கு சீவடி பரம்பு சொற்றடி கைவேளை முடித் திடலாம்-நம் பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால் பழயபைக் கொடுத் திடலாம் பிசைந்து வைத்துள மாவும்தேனும் பீரக்கங் கொடியின் ஓரம்-அந்த உசந்த பானை திறந்து கரடி உருட்டிடும் இந்த நேரம் கூடைமுறங்கள் முடித்து விட்டேன் காடை இறக்கை போலே-இனி மூடுதட்டும் குழந்தை மூச்சிலும் முடிப்பதுதான் வேலை காடுவெட்டவும் உதவி யில்லாக் கழிப்புக் கத்தியைத் தீட்டி-நீ ஏடுபத்தாய் மூங்கில் பிளக்க எழுந்திரு கண்ணாட்டி சோடியாக நா மிருவர் கூடி உழைக்கும்போது-நம் ஓடும்நரம்பில் உயிர் நடப்பதை உரைத்திட முடியாது பாடி…

தொழிலாளர் விண்ணப்பம் – பாவேந்தர் பாரதிதாசன்

  காடு களைந்தோம் – நல்ல கழனி திருத்தியும் உழவு புரிந்தும் நாடுகள் செய்தோம்: – அங்கு நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம். வீடுகள் கண்டோம்: – அங்கு வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம். பாடுகள் பட்டோம் – புவி பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம். மலையைப் பிளந்தோம் – புவி வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம். அலைகடல் மீதில் – பல் லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம். பல தொல்லையுற்றோம் – யாம் பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம். உலையில் இரும்பை –…

ஆர்க்கிமிடிசு – தி.சி.கருப்பண்ணன், கலை.மு.

 (சித்திரை 14, 2045 / 27 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி)   விலக்கம் உற்ற தண்ணீரின் எடை எவ்வளவோ, அவ்வளவு குறைவு பொருளின் எடையிற் காணும். ஏனெனில் தண்ணீருள் அமிழும் பொருளை தண்ணீர் எப்போதும் மேல் நோக்கித் தள்ளுகிறது. இவ்வாறு கீழே அமிழும் பொருளை மேல் நோக்கித் தள்ளும் தண்ணீரின் ஆற்றல், பொருளால் விலக்கம் உற்ற தண்ணீரின் எடைக்கு ஒப்பாகும் எடுத்துக்காட்டாக, ஓர் இரும்புத் துண்டு 4 கிலோ கிராம் எடையுள்ளதாகக் கொள்வோம். இது தண்ணீருள் முழுதும் மூழ்கும்படி தொங்கவிடப்பட்டால் ஏறத்தாழ அரைகிலோகிராம்…

இரும்பாலைத் தொழிலாளி – பாவேந்தர் பாரதிதாசன்

அழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ள அவ்வுயிரே என்றன் ருயிராம்! பழுப்பேறக் காய்ச்சிய இரும்பினைத் துாக்கி உழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி-இவ் வழுக்கு துணிக்குள்ளே… பழக்காடும் கிளியும்போல் நானும் அத்தானும் பகற்போதைக் கழித்தபின் அவன் கொஞ்சமேனும் பிழைஇன்றி லைக்குச் சென்றுதன் மானம் பேண இராவேலையைக் காணாவிடிலோ ஊனம் தழற் காட்டிலே இரும்புச் சரக்கும் உருகக்கண்டு விழிப்போடிருந்து வேண்டும் உருப்படி செய்வதுண்டு அழுக்குத் துணிக்குள்ளே…. அறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம் அயலார்க்கு நலம்செய்யார் எய்துவார் துன்பம் இறந்து படும்உடலோ ஏகிடும் முன்பும் எழில் உள்ளம் நன்மைதீமை இனம்கண்ட…

தமிழர்களின் கல்லறைத் தோட்டம்

வாழ விடுதலை கேட்டோம். துரோகிகளால் இனப்படுகொலை செய்யப்பட்டோம். அன்றோ தமிழர்களின் தேசம்.. இன்றோ தமிழர்களின் கல்லறைத் தோட்டம். நன்றி :  பாண்டி சீமான் முகநூல்