தமிழ்ச்சோலை மெய்வல்லுநர் போட்டி 2014

பிரான்சு – வில்நியூவு தூயசியார்சு தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை மாணவர்களிடையேயான இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014   ஆனி 8, 2045 / 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை வில்நியூவு தூயசியார்சு நகரத் திடலில் தமிழ்ச்சங்க உறுப்பினர், பொதுச்சுடரினை, காலை 10.00 மணிக்கு ஏற்றி வைத்தார்; சங்கத் தலைவர் பிரெஞ்சு தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்; தமிழீழத் தேசியக்கொடியினை மக்கள் பேரவைச் செயலாளரும் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது;   தமிழ்ச்சோலை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்; எல்லாளன் சங்கிலியன் இல்லங்களின் வீரர்கள் அணிவகுப்பு செய்தனர்…

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 83-100: இலக்குவனார் திருவள்ளுவன்

  (வைகாசி 25, 2045 / சூன் 08, 2014 இதழின் தொடர்ச்சி)   83. தமிழியல் வழக்கினன் றணப்புமிகப் பெருக்கி – பெருங்கதை: 4. வத்தவ காண்டம்: 17. விரிசிகை வதுவை : 67   84. எடுக்கும் மாக் கதை இன் தமிழ்ச் செய்யுள் ஆய் நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திட(த்) – பெரியபுராணம்: பாயிரம் 3     85. பாட்டு இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள், கோட்டு உயர் பனிவரைக் குன்றின் உச்சியில் – பெரியபுராணம்: 1….

9- ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, கோலாலம்பூர்

9- ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தை 2046 -/ 29 சனவரி – 1 பிப்ரவரி 2015 மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூர் 9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2046, தைத்திங்கள் (சனவரி 29 முதல் பிப்ரவரி 1, 2015 வரையிலும்) கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இம்மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க –…

ஊடகர் மீது கை வைக்காதீர்! ஊடகங்கள் மீது கண் வையுங்கள்!

  தினமலர் நாளிதழ்ச் செய்தியாளர் அருள்செல்வனைத் தாக்கியது அருளற்ற செயல்!   கிளர்ச்சிகள் என்பன மக்கள் குறைகளைத் தெரிவிக்கும் வாயில்கள் எனவும் அரசு அவற்றை அடக்கித் துன்புறுத்தாமல் மென்மையாகக் கையாண்டு குறைகளைப் போக்க வேண்டும் என்றும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுவார். ஆனால், கிளர்ச்சிகள் என்றாலே அரசை அழிக்கும் ஆயுதமாகவும் கிளர்ச்சியாளர்கள் என்றாலே நாட்டின் பகைவர்கள் என்றும் கருதும் போக்கு எல்லா நாட்டிலும் உள்ளது வருந்தத்தக்கதே! இதனால், மக்களின் உற்ற தோழனாக இருக்க வேண்டிய காவல்துறை ஆளும்கட்சியின் அடிவருடிபோல் நடந்துகொண்டு மக்களுக்குத் தீங்கிழைத்து, அரசிற்கும்…

பொன் சிவகுமாரன் நினைவுக்கிண்ணச் சுற்றுப் போட்டிகள்

  தமிழர் பண்பாட்டுக் கழகம், முன்சன்-யேர்மனி தியாகி பொன் சிவகுமாரன் நினைவுக்கிண்ணச் சுற்றுப் போட்டிகள் யேர்மன் தேசியக்கொடி, தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன்தொடங்கியது.உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டப் போட்டிகளில் நியூரென்பர்கு, ஆலென், மூன்சென்(Nürenburg, Alen, München) நகரங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டு கடும் போட்டிகளுக்கு மத்தியில்தங்களின் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தினார்கள். பார்வையாளர்களின் ஆரவாரமான ஊக்கமும், உற்சாகமும் விளையாட்டு வீரர்களை மேலும்சிறப்பாக ஆடவைத்ததால், அவர்கள் வெற்றி மகிழ்ச்சியில் திளைத்தார்கள். இறுதியில்பரிசளிப்பில் முன்சன்-தமிழாலய நிருவாகி, ஆசிரியைகள், தமிழர் பண்பாட்டுக்கழகத்தவர்கள் வெற்றி வீரர்களுக்கு, பதக்கங்கள், கிண்ணங்களை வழங்கிமதிப்பளிப்பு செய்தார்கள் இவ்வண்ணம் நிகழ்வுகள் இனிதே…

மாமூலனார் பாடல்கள் 24: சி.இலக்குவனார்

  (ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி) “கண்பனி நிறுத்தல் எளிதோ” – தலைவி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   உச பாடல். அகநானூறு 97    பாலை கள்ளி அம்காட்ட புள்ளி அம் பொறிக்கலை வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து புலவுப்புலி துறந்த கலவுக்குழி கடுமுடை இரவுக் குறும்பு அலற நூறி நிரைபகுத்து   இருங்கல் முடுக்கர்த் திற்றிகொண்டும் கொலையில் ஆடவர் போலப் பலவுடன் பெருந்தலை எருவையொடு பருந்து…

செஞ்சீனா சென்றுவந்தேன் 2– பொறி.க.அருணபாரதி

(ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி) 2. சியான் நகரம் பண்டைத் தமிழகத்தில், மதுரை, தஞ்சாவூர் முதலானஉள்ளிட்ட நகரங்கள் எப்படி முதன்மைத் தலைநகரங்களாக விளங்கினவோ, அதே போல சீனாவிற்கு 4 பண்டையத் தலைநகரங்கள் இருந்தன. அவை, பெய்சிங்(கு), நான்சிங்(கு), (தெற்கு சீனா), (உ)லோயங்(கு), சங்கன் ஆகிய நகரங்களாகும். மேலுள்ள நான்கு நகரங்களில் சங்கன் என வழங்கப்பட்ட அவ்விடம்தான் இன்று சியான் என அழைக்கப்படுகிறது. இன்றைக்கும் சீனத் தலைநகரமாக உள்ள பெய்சிங்(கு)/(பீகிங்கு) நகரம், நவீன சீனாவின் அடையாளமாக உள்ளதைப் போல்,…

உலகெங்கிலும் தூய தமிழ் பரவட்டும்! – யாழ்ப் பாவாணன்

    வானில் இருந்து இறங்கிய மழையோடு வந்து வீழ்ந்தவன் நான் அல்லன் பெற்றவர்கள் ஈன்ற பின்னர் தெருவெளி அங்காடியில் விற்ற நூல்களை வேண்டிப் படித்துப் பொறுக்கிய அறிவைப் பிறருக்கு வழங்குவதே என் பணி! “பிறமொழிச் சொல் அகராதி” என்ற நூலைப் படித்துப் பொறுக்கியதில் இருந்து: ஆங்கிலத்தில் “சுகர்ட்” என்பது தமிழில் அரைப் பாவாடையே..!. இந்தியில் “சோடி” என்பது தமிழில் ‘இணை’ என்பதையே! பாரசீக மொழியில் “லுங்கி” என்பது தமிழில் மூட்டுவேட்டியே! உருது மொழியில் “தமாசு” என்பது தமிழில் வேடிக்கையே! அரபி மொழியில் “சாமீன்”…

ப.அ.வைத்தியலிங்கம் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அழகியநாயகிபுரம் தோழர் ப.அ.வைத்தியலிங்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடை பெற்றது.   தஞ்சை மாவட்ட சேதுபாவாசத்திர ஒன்றிய திராவிடர் விடுதலைக்கழக தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அழகியநாயகிபுரம் தோழர் ப.அ.வைத்தியலிங்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழாஆனி 8, 2045 / 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை அழகியநாயகிபுரத்தில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக்கழக, சேதுபாவாசத்திர ஒன்றியச் செயவலர் சீனிகண்ணன் வரவேற்புரையாற்றினார். அறிவுலக ஆசான் தந்தை…

1 2 10