வாழ்வியல் பயிற்சி, சென்னை

திருவள்ளுவர் வாழ்வியல் மன்றத்தின் வாழ்வியல் பயிற்சி தொடர்பொழிவு ஆனி – மார்கழி, 2045   25 தலைப்புகளில் துறைசார் அறிஞர்களின் சொற்பொழிவு, கலந்துரையாடல் இணைந்த கருத்தரங்காக ஒவ்வொரு ஞாயிறும் நடைபெறும். 15 அகவைக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்துத் துணை நில்லுங்கள். தொடக்க விழா: ஆனி 22, 2045 – 06.07.2014 ஞாயிறு பிற்பகல் 3 மணி முதல் 5:30 மணி வரை. தொடர்பொழிவு: நாட்கள் : 13.07.2014 முதல் 28.12.2014 வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும்.. நேரம்…

குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

குடந்தை மலையாள ஆலூக்காசு வழக்கு: குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை! முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து, கேரளாவில் தமிழர்களைத் தாக்கிய மலையாளிகளுக்கு   எதிரடி கொடுக்கும்வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு திசம்பர் மாதம், தமிழகமெங்கும் மலையாள நிறுவனங்களை முற்றுகையிட்டு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் (கார்த்திகை, 2045 /07-11-2011 அன்று) நடைபெற்ற மலையாள நிறுவனம் சோசு ஆலுக்காசு மறியல் போராட்டத்தின் போது, அக்கடை அடித்து நொறுக்கப்பட்டதாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச்…

இராணிப்பேட்டையில் வினைதீர்த்தான் நிகழ்த்திய பயிலரங்கம்

இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வைகாசி 23, 2045 / 6.6.2014 அன்று பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்களில் படிக்கும் 130 மாணவர்களுக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தப்பெற்றது. தன்னார்வப் பணியில் பெரிதும்ஆர்வம் மிக்க வினைதீர்த்தான் இப்பயிலரங்கத்தை நிகழ்த்தினார். மாணாக்கர்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்னார்வமும் ஏற்படுத்துவதில் பேரார்வம் மிக்க, தலைமை ஆசிரியை திருமதி சந்தானம்   பயிலரங்கத்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் முதுநிலை ஆங்கில ஆசிரியர் திரு சரவணன் ஒருங்கிணைத்தார். உயர்நிலைப் பள்ளி 1928ல் தொடங்கப்பட்ட சிறப்புடையது. இங்குள்ள காந்தியடிகள் சிலையின் பீடத்தில் இந்தியாவில் முதன்முதலாக…

தமிழ்க் கனடியருக்காக அமெரிக்கக் கருத்தரங்கு

கனடியத் தமிழர் பேரவை ஏற்பாட்டில் தமிழ்க் கனடியருக்காக அமெரிக்கா நடத்திய கருத்தரங்கு: அமெரிக்காவில் கல்வி கற்றல், வணிகம், முதலீடு செய்தல், பயணம் – வேலைக்கான  புகுவுச்சீட்டு பெறுதல் தொடர்பாக, கனடாவுக்கான அமெரிக்கத் தூதரகம் கனடியத் தமிழருக்காய் கருத்தரங்கொன்றை (ஆனி 2045 / சூன் 2014) நடத்தியது. கனடியத் தமிழர் வரலாற்றில் முதன்முறையாகக் கனடியத் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தகைய கருத்தரங்கு மிகவும் பயனுள்ள பல தகவல்களை பங்கேற்றோருக்கு வழங்கியது. மண்டபம் நிறைந்த பங்கேற்பாளரோடு ‘மார்க்கம் கொண்வென்சன்  நடுவத்தில்’ இடம்பெற்ற கருத்தரங்கில் அரசியல் – பொருளாதாரம்,…

சென்னையில் வாசு.அரங்கநாதன் ஆற்றிய திருமந்திர உரை

பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் வாசு.அரங்கநாதன் உத்தமம் என்னும் தகவல்தொழில்நுட்ப மன்றத்தின் தலைவராக உள்ளார். இதன் சார்பில் புதுச்சேரியில் வரும் புரட்டாசி 3-5, 2045 /செப்தம்பர் 10-21.2014 ஆகிய நாள்களில் 13 ஆவது தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக இவர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். வந்த இடத்தில் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் திருமந்திரத்தின் மொழிநடைகுறித்துச் சிறப்புரை ஆற்றினார். சிக்கலான தலைப்பைச்சிறப்பான முறையில் பேராசிரியர் வாசு.அரங்கநாதன் விளக்கியதாக வந்திருந்தோர் பாராட்டினர். செய்தியும் படங்களும்: முனைவர் மறைமலை இலக்குவனார்

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் – தொடக்க மாநாடு, 2014

  பெருந்தகையீர் அனைவரும் வருக! மதுரை மாநகரில் ஆகத்து 17-ல் ஒன்றுகூடுவோம்! தமிழ்நாட்டிற்கான கல்வியை உருவாக்குவோம்!  

சென்னைக் கம்பன் கழகத்தில் ‘கலம்பகம்’ உரை

     சென்னைக் கம்பன் கழகத்தின் சார்பில் ”கலம்பகம்”என்னும் தலைப்பில் பெரும்புலவர் வே.பதுமனார் உரையாற்றினார். தமது கல்வித்திறத்தாலும் சொல்வித்தகத்தாலும் அவையினரைக் கட்டிப்போட்டுவிட்டார்   இராம.வீரப்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.   பேரா.திருமதி.சாரதா நம்பி ஆரூரன் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்.  (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)   செய்தியும் படங்களும்: முனைவர் மறைமலை இலக்குவனார்

பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா

வாழ்த்துப் பேழை நூல் வெளியீடு   பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா ஆனி 1, 2045 / 15.06.2014 ஞாயிறு காலை பத்து மணிக்கு நெல்லை சானகிராம் உணவக மிதிலை அரங்கில் நடைபெற்றது. வழக்கறிஞர் ப.தி.சிதம்பரம் தலைமை தாங்கினார். தமிழ்மாமணி சிதம்பரப் பாண்டியன் வரவேற்றுப் பேசினார். மேனாள் மாவட்ட ஆட்சியர் மாட்சிமிகு இலட்சுமிகாந்தன் பாரதி ”வாழ்த்துப் பேழை” நூலை வெளியிட்டுப் பேசினார். தேசியப் பாவலர் த.மு.சா.காசாமைதீன் முதற் சுவடியைப் பெற்றுக் கொண்டார். தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் அருள்மிகு அந்தோணிராசு முதலிய…

அகதிகள் அனாதைகள் அல்லர்!

எதிர்வரும் சனி  ( 28.06.ஆனி 14, 2045 / 2014) மாலை 4:30 முதல் 8:30வரை பொதுக்கூட்டம் இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கி ஏதிலியர் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்! உலகம் முழுவதும் அவலத்துள்ளும் அச்சத்துள்ளும் வாழும் ஈழத் தமிழ் ஏதிலியர் திட்டமிட்டு இலங்கையை நோக்கிக் கடத்தப்படுகின்றனர். மலேசியாவிலிருந்து  ஏதிலியராக ஏற்கப்பட்ட தமிழர்கள் கடத்தப்பட்டனர். பிரித்தானியா,பிரான்சு, செருமனி,கனடா போன்ற நாடுகளிலிருந்து ஆப்பிரிக்க நாடுகள் உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழ்  ஏதிலியரின்  நிலை கேள்விகுறியாகியுள்ளது. இவற்றைக் கண்டித்து தமிழ்  ஏதிலியருக்கான போராட்டக்குழு ஐக்கிய நாடுகளுக்கான ஏதிலியர்…

உத்தமம் தலைவர் முனைவர் வாசு ரெங்கநாதன் தமிழகத்தில்

உத்தமம்(INFITT) எனச் சுருக்கமாக அழைக்கப் பெறும் உலகத்தமிழ்த்தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் 13 ஆவது தமிழ் இணைய மாநாடு வரும் புரட்டாசி 3-5, 2045 /செப்தம்பர் 10-21.2014 ஆகிய நாள்களில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இது குறித்து முன்னேற்பாடுகளைப் பார்க்கவும் உத்தம உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் இதன்தலைவர் முனைவர் வாசுரெங்கநாதன் தமிழ்நாடு வந்துள்ளார். புதுச்சேரிக்கும் செல்கிறார். ஆனி 07, 2045  / 21.06.14 அன்று சென்னையில் அவர் கருத்தறிவு நிகழ்ச்சி நடந்த பொழுது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்கள். இதில் மலேசியாவில் இருந்து – 12 ஆவது…