வாழ்த்திற்குரிய கலைஞரே! இனி என்ன செய்யப் போகிறீர்கள்?

    கலைஞர், வரலாற்றில் அருவினை பல  ஆற்றிய அருந்திறலாளர்! அவரது பகைவர்களும் அவரது உழைப்பை மதிக்கத் தவறுவதில்லை!  நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்தவர்;  மடல்களாகவும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தள்ளியவை மிகுதி. மொத்தத்தில் இருபதாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதிக் குவித்த  படைப்பாளர்;  ஏறத்தாழ 75 திரைப்படங்களுக்குக் கதை உரையாடல் எழுதி உள்ளார்; நேற்றுவரை திரை உலகில் நுழைந்தவர்கள் அவர் எழுதிய திரையாடலைப் பேசி நடித்துக் காட்டித்தான் வாய்ப்பு பெற்றனர் என்பது  அழிக்க முடியாத வரலாறு; பன்னிரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை…

மனத்தில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்) மின்னூல் வெளியீடு

  முகம்மது அலியின்   மனத்தில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்)   மின்னூல் வெளியீடு(FreeTamilEbooks.com) சென்னை   திரு முகம்மது அலி தன் வலைத்தளத்தில்(http://anbudanseasons.blogspot.in ) எழுதிய கட்டுரைகளையும கவிதைகளையும் மின்நூல்  வடிவில் கொண்டு வந்துள்ளார்.   கட்டணமின்றிப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்குப் பின்வரும் வலைவரியில் காண்க: http://freetamilebooks.com/ebooks/manadhil-tondriya-ennangal/

பாராட்டிற்குரிய மராத்தியத் திங்களிதழ் தமிழ் இலெமூரியா

தமிழ் இலெமூரியா – இந்தியாவில் தாய்த் தமிழ்நாட்டிற்கு வெளியில் மகாராட்டிரா மாநிலத்திலிருந்து தமிழ்மொழி, தமிழ் இனம் சார்ந்து அறிவார்ந்த செய்திகளைத் தாங்கி வரும் ஒரு சிறப்பான மாத இதழாகும். கடந்த ஏழு ஆண்டுகளாக,  தமிழினம், தமிழ் மொழி என்கிற இரு கரைகளுக்கிடையே பயணிக்கும் இவ்விதழில் தமிழ் மக்களிடையே மாந்த நேய உணர்வு, மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி, வரலாற்று துய்ப்புகள் போன்றவற்றை நல்ல தமிழில் எடுத்தியம்பும் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.   தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழ் இதழ்களிலிருந்து சற்று வேறுபட்ட கண்ணோட்டத்தில்…

மும்பையில் கூடுவோம்! – உலகத் தமிழர் பேரமைப்பு

  மும்பையில் உள்ள தமிழ் அமைப்புகளை உள்ளடக்கிய “உலகத் தமிழர் பேரமைப்பு ” சார்பாக மும்பை தாராவி இல் உள்ள காமராசர் ஆங்கிலப் பள்ளியில் வரும்  சூன் 15ஆம் நாள் மாலை 6 மணி முதல்  நூல் வெளியீட்டு விழாவும் ஆவணப்படம் திரையிடலும் நடக்க இருக்கிறது. இந் நிகழ்ச்சியில், பவா சமுத்துவன் எழுதிய  “மேதகு பிரபாகரன்- வாழ்வும் இயக்கமும்”  , தோழர் பொழிலன் எழுதிய “தமிழ்த்தேசம்” ஆகிய நூல்களின் வெளியிட்டு விழாவும்  ,செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன் இயக்கிய “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது…

செந்தமிழைப் போற்றுவோம்! அயல் மையலை விரட்டுவோம்!

  தாயுமானசுவாமி தமிழ் வளர்ச்சி மன்றம்   பெ. சிவசுப்பிரமணியன் ஆட்சி அலுவலர் (ஓய்வு) தலைவர் 25/47, இரண்டாவது தெரு, செரியன் நகர், புதுவண்ணையம்பதி, சென்னை – 81.   044 – 2591 0102 செந்தமிழைப் போற்றுவோம்!        அயல் மையலை விரட்டுவோம்! பேரன்புடையீர், வணக்கம். உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் தாய்மொழியைப் போற்றுகின்றன. ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பா, ஆசுதிரேலியா என ஆறு கண்டங்களிலும் அவரவர் தாய்மொழியே கோலோச்சுகின்றன. எந்த நாட்டிலும் அயல் மொழி மோகம் காணப்படவில்லை!…

மொழித்திற முட்டறுத்தல் 3 – பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர்

(சித்திரை 7, 2045 / 20 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) இறந்த மொழிகள் மேற்கூறிய இருவகை மொழிப் பாகுபட்டினையம் உளத்திற்கொண்டு ஒரு சேர ஆய்வோமாயின் ஒருண்மை புலனாகின்றது. முதற் பாகுபாட்டில் உள்ள 1. இந்திய ஐரோப்பிய மொழிகள், 2. செமிட்டிக்கம் என்ற இனத்தைச் சேர்ந்த மொழிகள் இவையிரண்டும் இரண்டாம் பாகுபாட்டில் உள்ள உட் பிணைப்பு மொழிகளாயுள்ளன. இவற்றிலேயே சிறந்த மொழிகள் நூற்றுக்கு ஐம்பது விழுக்காடு காணப்படுகின்றன. வேர்ச்சொற்கள் இன்னதென அறியமுடியாதவாறு சொற்கள் மாறுபாடடைதல் இம்மொழிகளிற் பல உலகவழக்கறுவதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். ஒரு காலத்தில்…

தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

  தமிழ்நாடெங்கும், தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்பிற்கு எதிராகப்போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இவைபோல் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்  நடத்தப்பெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 400 ஆக்கும் மேற்பட்டோர்  தளையிடப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். வைகாசி 14, 2045, மே 28, 2014 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தோழர் பெ.மணியரசன் தலைமை ஏற்க பல்வேறு காட்சித்தொடர்பியல் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்த்தேச மக்கள் கட்சி சார்பில் பொது செயலாளர் தமிழ்நேயன், அமைப்புச் செயலாளர், செந்தமிழ்க்குமரன்…

பூங்கோதை – 3 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,

(வைகாசி 11, 2045 / 25 மே 2014 இதழின் தொடர்ச்சி) ‘இப்படித் தவறாமல் அசை போட்டுக் கொண்டிருக்கிறாயே, அது தானே அம்மாள் உன்னை கடிந்து கொள்கிறார்கள் என்று காளியம்மை சலித்துக் கொண்டிருந்தாள். ஒருவாறாக உணவை முடித்துக் கொண்டு பூங்கோதை தாழ்வாரத்தை அடுத்துள்ள தன் அறையை நோக்கிப் புறப்பட்டாள்.   கூடத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஊசலில் செங்கமலம் காலைத் தொங்க விட்டு அமர்ந்திருந்தாள். காளையப்பன் எதிரே கிடந்த இருக்கையில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டிருந்தான். வண்ணக்கிளி தன் அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டிருந்தாள். இந்த இனிய…

இனப்படுகொலையாளன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

இனப்படுகொலைகாரன் பட்சேவை அழைப்பதற்காக, நரேந்திர(மோடி)  தென்ஆசியநாட்டுத் தலைவர்களை அழைத்துத் தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டு தமிழர்களைச் சிறுமைப்படுத்தி விட்டார். இதற்கு உலகெங்கும்  எதிர்ப்புகள் எழுந்தன. எடுத்துக்காட்டிற்காகச் சில ஆர்ப்பாட்டங்களின் ஒளிப்படங்கள்.

மாமூலனார் பாடல்கள் – 20 : சி.இலக்குவனார்

(வைகாசி 11, 2045 / 25 மே 2014 இதழின் தொடர்ச்சி) 20. சென்றோர் அன்பிலர் – தலைவி  தலைமகன் பிரிந்த பின்னர், தலைவியை நோக்கிக் கூறுகின்றாள். – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   தோழி! அவர் அன்பு அற்றவர் என்றுதான் நினைக்கிறேன். உயர்ந்து வளர்ந்துள்ள அடிமரங்களுடைய சிவந்த தளிர் பொருந்திய இருப்பை மரங்களிலிருந்து, தந்தத்தைக் கடைந்து செய்தால்போன்ற பூக்கள் உதிர்ந்துகிடக்கும் அவர் செல்லும் வழிகளில், அங்குக் கரடிக்கூட்டம் – குட்டிகளை ஈன்ற பெண் கரடிகள் –   ஆட்டு மந்தையைப்…

சதுரங்கத்தில்அருவினை புரிந்த மகாராசன்

சதுரங்கத்தில்அருவினை புரிந்த மகாராசன்  கண்களைக் கட்டிக்  கொண்டு விளையாடிய 10 ஆம் வகுப்பு மாணாக்கர்  29  நிமையத்தில் பதின்மரைத் தோற்கடித்தார்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  இமயம்(எவரெசுட்டு) மாரியப்ப (நாடார்) மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் மகாராசன்.  இவர் கண்ணை கட்டிக்கொண்டு சதுரங்கம்விளையாடுவதில் உலக அருவினை ஆற்றியுள்ளார். இவரது இரு கண்களிலும் பஞ்சுகள் வைத்து, கறுப்புத் துணியால் கட்டிவிட்டனர். பின், எதிரில் விளையாடு பவர் நகர்த்தும் காய்களுக்கு ‘ஏ’ முதல் ‘எச்’ வரையிலான ஆங்கில எழுத்துக்கள் மூலம் 8 எண்களில்  குறிச்சொற்கள் தரப்பட்டன….