செஞ்சீனா சென்றுவந்தேன் 6 – பொறி.க.அருணபாரதி

    (ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) 6.சீன ‘வளர்ச்சி’யின் உண்மை நிலை என்ன?   சீனாவிற்குள் நுழைந்தவுடன் என்னிடம் எனது அலுவலகப் பணியாளர்கள் கடவுச்சீட்டைக் கேட்டார்கள். அதை அருகிலுள்ள காவல் நிலையத்தில் அளித்து, தற்காலிக குடியிருப்பு அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்றார்கள். அதற்கென உள்ள விண்ணப்பப் படிவத்தில், சீன மொழியில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு சீன மொழியிலேயே என்னிடம் கேட்டு விடை எழுதினர். தங்குமிடம், எவ்வளவு நாள் வரை தங்குவோம் முதலான தகவல்கள் அதில் கேட்கப்பட்டிருந்தன….

அறவாணர் அருவினை விருதாளர் அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லன் வாழ்கவே!

    அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் தலைமையில்   இயங்கும் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை இவ்வாண்டு ‘அறவாணர் சாதனை விருதினை’, அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு வழங்குகிறது. புதுவைக்குயில் வழியிலான தனித்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு இவ்விருது வழங்குவது பெரிதும் பொருத்தமுடைத்து. ஆடி 24, 2045/9.8.2014 காலையில் சென்னைத் தமிழ்க் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் அனைத்திந்திய இவ் விருது வழங்கப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னைத்துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு முனைவர் க.தமிழமல்லன் அவர்களுக்கு விருது வழங்கி வாழ்த்துகிறார். பிறப்பு   புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திரு.பொ.கண்ணையன், திருவாட்டி க.தனலட்சுமி ஆகியோரின் அருந்தவப்புதல்வராக ஆனி…

மாமூலனார் பாடல்கள் 28: சி.இலக்குவனார்

(ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) உஅ. முன்னே புறப்படு என்நெஞ்சே! -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்     தலைவன் திருமணத்தை நடத்திக்கொள்ளாது வேற்றுநாட்டிற்குச் சென்றுவிட்டான். தலைவி முதலில் ஆற்றி இருந்தாளேனும், நாள் ஆக, நாள் ஆக உடல் இளைத்தது; கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று கழன்று விழுந்தன உறக்கம் என்பது இல்லாது கண்களினின்றும் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. ஆற்ற முடியாத துன்பம்! இதைப் போக்கி கொள்வதற்கு வழிதேடுதல் வேண்டும். வழி என்ன?…

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென வலியுறுத்தி இன்று (ஆடி 5, 2045 -21.07.2014), காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரிப் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் இயங்கும் இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும், சென்னை முதலான பிற மாவட்டங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களும் எழுச்சியுடன் நடைபெற்றன. தஞ்சை மாவட்டத்தில் வணிகர்களின் ஆதரவோடு முழுமையான கடையடைப்பு நடைபெற்றது. தஞ்சை தஞ்சையில், மருத்துவக் கல்லூரி சாலை – பாலாசி நகரில் இயங்கும் இந்திய அரசின்…

தமிழகமெங்கும் சமற்கிருத எதிர்ப்பு வாரம்! – த.தே.பொ.க.

இந்திய அரசின் சமற்கிருதத் திணிப்பைக் கண்டித்து, தமிழகமெங்கும் சமற்கிருத எதிர்ப்பு வாரம்! தமிழ்த்தேசப்பொதுவுடைமைக்கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!   நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எசு.இ) இயக்குநர் அண்மையில்இந்தியா முழுதும் உள்ள சி.பி.எசு.இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும்  ஆகசுட்டு 7 முதல் 13 முடிய சமற்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது மொழி – வகுப்பு மேலாண்மையை வலியுறுத்துவதாகவும், தமிழையும் தமிழினத்தையும் மற்ற பிற மொழிகளையும் இரண்டாம் நிலைக்குத்…

தமிழ்மணம் வீசிய புழுதிவாக்கம்!

புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் ‘சங்க இலக்கிய அறிமுகம்’ என்னும் நூல் வெளியீட்டையும் பரிசளிப்பையும் மிகச்சிறப்பாகச் செய்திருந்தது. இதன் அமைப்பாளர் திரு த.மகாராசன், பிற பொறுப்பாளர்கள் நன் முயற்சியால் தமிழ் மணம் வீசிய அரங்கு நிறைந்தவிழாவாக நடைபெற்றது. கடந்த 16.09.2012 அன்று இம்மன்றத்தின் சார்பில் நடத்தப் பெற்ற சங்க இலக்கியப் பெருவிழாவில் அறிஞர்கள் ஆற்றிய உரையையே இப்பொழுது நூல் தொகுப்பாக்கி உள்ளனர். சங்க இலக்கியக் களஞ்சியம் – ந.முத்து(ரெட்டி) சங்க இலக்கியக் கட்டுரைகள்: ஓர் அறிமுகம் – புலவர் கோ.பார்த்தசாரதி ஆற்றுப்படை நூல்கள் –…

சமற்கிருதமா? மீண்டும் ஒரு சண்டமாருதம்! – நக்கீரனில் தமிழ்க்கனல்

மீண்டும் தமிழுக்கு அவமதிப்பா எனக் கொதிக்கிறார்கள், தமிழ் அறிஞர்களும் கல்வியாளர்களும்! சமூக ஊடகங்களில் இந்தியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டு.. தமிழகமே எதிர்க்க.. அது நீக்கப்பட்டது. அந்தச் சூடு ஆறாதநிலையில், சமற்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டு உசுப்பிவிட்டிருக்கிறது, தில்லி. நாடு முழுவதும் உள்ள மத்திய பள்ளிக்கல்வி வாரியப் (சி.பி.எசு.இ) பள்ளிகளில், வரும் ஆகசுட்டு 7-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள்வரை, ’சமற்கிருத வாரம் கொண்டாடுமாறு வாரியத்தின் இயக்குநர் சாதனா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சூன் 30-ஆம் நாளிடப்பட்ட அந்த சுற்றறிக்கையில், அப்படி…

இலக்கிய-இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 51 – திருவாரூர்

இலக்கிய-இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 51 இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் தலைமை: பாவலர் காசி வீரசேகரன் சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழன்என்பதில் என்ன பெருமை இருக்கிறது?“ அனைவரும் வருக! நல்லாசிரியர் புலவர் எண்கண்சா.மணி

தமிழ்க் கலைகள் பாதுகாப்புப் போராட்டம்.

இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு அழிக்கப்படும் தமிழ்க் கலைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம்!   இலங்கையில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தேசிய இனத்தின் புலம்பெயர் கூறுகள் நாங்கள். சிங்கள பௌத்த இனவெறியர்களாலும் ஏகபோக அரசுகளாலும் சூறையாடப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்கள் கூட வணிகமாக்கப்படும் அவமானகரமான சூழலில் நாங்கள் வாழ்கிறோம். அபகரிக்கப்படும் தமிழ் மண்ணில் உலகின் பல்தேசிய நிறுவனங்கள் தமது பேரரசை நிறுவிக்கொள்கின்றன. ஒருபுறத்தில் சிங்கள-பௌத்தக் குடியேற்றங்களும், மறுபுறத்தில் பல்தேசிய வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்பும் தமிழ் அடையாளத்தை அழித்து வருகின்றன.   இவையெல்லாம் இனச்சுத்திகரிப்பைப் படம்போட்டுக் காட்டுகின்ன்றன. கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மை…

அசோகர் காலத்திற்குப் பிற்பட்டதே சமற்கிருதம் – வழிப்போக்கன்

‘சமசுகிருதம் முதலில் தோன்றியதா…அல்லது தமிழ் முதலில் தோன்றியதா’ – நீண்ட காலமாக நீண்டுக் கொண்டு இருக்கும் ஒரு விவாதம்.இதனை நாம் இப்பொழுது பார்க்க வேண்டியதன் காரணம் இம்மொழிகளைப் பற்றி அறியாமல் இந்தியாவின் அரசியல் வரலாற்றினையோ ஆன்மீக வரலாற்றினையோ நாம் இன்று நிச்சயம் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது. சரி…இப்பொழுது பதிவுக்குச் செல்வோம்.    இன்று பெரும்பாலான மக்கள் சமசுகிருதத்தினையே முதல் மொழி என்று கருதிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு முழு முதற்க் காரணம் நாம் முதல் பதிவில் கண்ட சர் வில்லியம் சோன்சும் மாக்சு…