மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி

வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் – மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி..  ஆடி 9, 2045 / சூலை 25, 2014 கிருட்டிணகான சபை,  சென்னை 600 017 தலைமை:   திரு விசய திருவேங்கடம்.. முன்னிலை: திருமதி சீதாலட்சுமி அழகிரிசாமி..  சிறப்புரை:     திரு பழ. கருப்பையா..  விருதாளர்:     திரு தமிழ்மகன்..  நிரலுரை:       முனைவர். ப. சரவணன்..  உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்…   என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்..

செஞ்சீனா சென்றுவந்தேன் 5 – பொறி.க.அருணபாரதி

(ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி) 5.   சீனப் பொருளியலின் “வளர்ச்சி”    ஏற்றுமதிசார்ந்த உற்பத்தியைமட்டும் அதிகரிக்கும்நாடுதான், ‘வளர்ச்சி’ பெறும்நாடு என உலகமயப்பொருளியல் உருவாக்கியிருக்கும் கருத்து நிலையை, அப்படியே உள் வாங்கிக்கொண்டுவிட்டதுசீனப் பொதுவுடைமைக் கட்சி. இதன் விளைவாக, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி அதன் உபரியைக் கொண்டு மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தவேண்டிய சீனப் “பொதுவுடைமை” அரசு, ஏற்றுமதிசார்ந்த உற்பத்தியிலும், அதன் ‘வளர்ச்சி’ விகிதத்திலும்தான் அதிகம் கவனம் செலுத்துகின்றது.     உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக, 1991ஆம்ஆண்டு, நான் வந்திறங்கியுள்ள சியான்நகரில்…

தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

தனித்தமிழ்இயக்கம், புதுச்சேரி   தனித்தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி  பரிசு 3000.00 உருவா   கதைகள்வந்துசேரவேண்டியகடைசிநாள்: 31.7.2014 முகவரி : முனைவர்க.தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ்இயக்கம், 66,மாரியம்மன்கோயில்தெரு,தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009 தொ:0413-2247072   நெறிமுறைகள்:    1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள் பிறமொழிப்பெயர்கள்கலவாதநடையில்எழுதப்படல்வேண்டும். 2. கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும். ஒருபடியில்மட்டும்பெயர், முகவரிகளைத்தனித்தாளில்இணைத்துஅனுப்புக. கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர்இருக்கக்கூடாது. 3. மொழிபெயர்ப்பு, முன்னரேவெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா 4. தேர்தெடுக்கப்பட்டகதைகள்‘வெல்லும்தூயதமிழ்’மாதஇதழில்வெளியிடப்படும். விருப்பம்உள்ளவர்கள்அதற்கானவிலைஉருவா 20.00 இணைத்துஅனுப்பவேண்டும் 5. நடுவர்தீர்ப்பேஇறுதியானது . 6. சிறுகதைப்படைப்பாளர்உறுதிமொழிஇணைக்கவேண்டும் பொறிஞர்இரா.தேவதாசுஇவ்வாண்டு  பரிசுகள்வழங்குகிறார். இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500 இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000 இரண்டுமூன்றாம்பரிசுகள்…

பள்ளுபாடலுக்குத் துள்ளியாடுவோம்! – சொ.வினைதீர்த்தான்

  சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க சிறப்பு கொண்டது பள்ளு இலக்கியம். 18 ஆம் நூற்றாண்டு மக்கள் வாழ்க்கையைக் கம்பனின் கவிநயம்போல் இனிய கூறும் இலக்கியம் முக்கூடற்பள்ளு. இதன் சிறப்பு குறித்துத் திரு சொ.வினைதீர்த்தான் “பள்ளு இலக்கியம்-முக்கூடற்பள்ளு” என்னும் தலைப்பில், ஆனி 28, 2045 / 12.07.2014 சனிக்கிழமையன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க இலக்கியக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். காரைக்குடியில் ஒவ்வொரு திங்களும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாலை, சங்கத்தின் சார்ப்பாக இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2004 தொடங்கி நடக்கிற நிகழ்வில் எழுபத்து நான்காவது…

மாமூலனார் பாடல்கள் 27: சி.இலக்குவனார்

(ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி) உஎ. “ஆண்டு அவர் நீடலர்” – தோழி சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   “சென்றவர் என்று வருவரோ” என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்கின்றாள் தலைவி, உயிர் அனையதோழி வாளாய் இருப்பாளா? ஆறுதல் கூறுகின்றாள்.   “தோழி! வருந்தேல், ஏதேனும் தொழில் செய்தல் வேண்டும். சோம்பி இருத்தல் ஆகாது.’ என்ற நினைப்பு அவரை வேற்று நாட்டுக்குச் செல்லவிடுத்தது. அவர் சென்ற இடத்தின் தன்மையைக் கேள். மலைமேடுகளில் காடுகளைத் திருத்தி விதைத்து…

அலைமகள் தந்ததைக் கலைமகளுக்குத் தந்த கலசலிங்கமே! – முனைவர் ச .சந்திரா

      எளிய குடும்பத்தில் பிறந்து, ஏற்றமிகு வாழ்க்கை பெற்று, பிறரை வாழ்வில் உயர்த்தும் ஏணியாகத் திகழ்ந்தவர் தி.கலசலிங்கம் அவர்கள். 1940 இல் இந்திய விடுதலைப்போரில் சிறை சென்ற விடுதலைப்போராட்ட ஈகியர் இவர். தொடக்கத்தில்அஞ்சல்துறை, கைந்நூல்(கதர்)வாரியம் ஆகியவற்றில் பணியாற்றியவர், கட்டடப்பணிகளில் ஈடுபட்டார். இதில் பெற்ற வருமானம் கொண்டு திருவில்லிபுபத்தூரில் 1984 ஆம் ஆண்டு கலசலிங்கம் பல்தொழில்நுட்பக் கல்லூரியைத் தொடங்கினார்.      பின், 1986இல் கலசலிங்கம் பொறியியல் கல்லுாரியையும், படிப்படியாக மருந்தியல் கல்லுாரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கலை…

ஆவணப்படங்கள் திரையிடல் – சாகித்ய அகாதெமி

சிறப்பு மிக்க எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் திரையிடல் – சாகித்ய அகாதெமி நாள் :ஆடி 11, 2045 / சூலை 27, 2014 காலை 10.30, முற்பகல் 11.30, பிற்பகல் 2.00 மணி இடம் : நூல்முனை அரங்கம், 160, அண்ணாசாலை, சென்னை    

இணையவழியில் சித்த மருத்துவப் பயிலரங்கம்

நண்பர்களே, வணக்கம்.   ஞாயிறு காலை 10:00 மணிமுதல் 12:00 மணிவரை (EST) (இந்திய நேரம் இரவு 7:30) நம் தமிழர்களின் பரம்பரை மருத்துவ முறையான சித்தமருத்துவம் குறித்து “ஆரோக்கிய வாழ்விற்கு சித்தமருத்துவம்” என்னும் கருத்தரங்கம்-கலந்துரையாடல் இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதை, சித்த மருத்துவர்   முனைவர் செல்வசண்முகம், அவர்கள் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் இருந்து வழங்குகிறார்கள்.   இவர் அண்மையில் நடைபெற்ற “அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை”-யின் அழைப்பின்பேரில் அமெரிக்கா வந்து பேரவை விழாவில் தமிழர்களுக்கு மூன்று மணி நேரம் “சித்த…

சுந்தரராமசுவாமி தமிழ்க் கணிமை விருதாளர் மணி மு. மணிவண்ணன்

   கனடாவில் உள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு 2013ஆம் ஆண்டிற்கான சுந்தரராமசுவாமி தமிழ்க் கணிமை விருது மணி மு. மணிவண்ணனனுக்கு வழங்கியுள்ளது. இதற்கான விழா கனடாவில் அன்று நடைபெற்றது.   முத்து நெடுமாறன், கல்யாணசுந்தரம், முகுந்து சுப்பிரமணியன், வாசுஅரங்கநாதன் ஆகியோர் வரிசையில் கடந்த ஆண்டிற்கான விருதினை மணி மு. மணிவண்ணன் பெற்றுள்ளார்.    புழைக்கடைப் பக்கம்    சொல்வளம் – உங்கள் தமிழ்ச் சொல் திறனறிதல்    தமிழ் எழுத்துச் சீர்மை முதலான இவரின் வலைத்தளங்களும் இவரின் முகநூல் பக்கங்களும் இவரது…

‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழா,

‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழா, அரவணைப்பு நிதி வழங்கும் விழா   கோயம்புத்தூர் திவ்யோதயா அரங்கில் (கோவை  தொடரி நிலையம் எதிரில்)  ஆடி11, 2045 / 27. 07. 2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழாவும் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு வருகைதரும் அன்பர்களை அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் நிறுவுநர் முனைவர் சி. கொ. இளங்கோவன் அவர்கள் வரவேற்று உரை நிகழ்த்துவார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள்…

சமற்கிருத வாரக் கொண்டாட்டங்கள் கூடா:இராமதாசு எதிர்ப்பு

  தமிழகத்தில் உள்ள சி.பி.எசு.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எசு.இ. நிருவாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் மரு.இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எசு.இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் வரும் ஆகத்து 7 முதல் 13 ஆம் நாள் வரை சமற்கிருத வாரம் கொண்டாடப் பட வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும்…