அறிஞர் ஆனந்தகிருட்டிணன் ஆண்டுநூறு கடந்து வாழிய வாழியவே!

முனைவர் மு.ஆனந்தகிருட்டிணன், பொறியாளர்கள், கணித்தமிழாளர்கள், கல்வியாளர்கள் எனப் பல்வகையினராலும் உலக அளவில் நன்கு அறியப்பெற்ற ஆன்றோர் ஆவார். கட்டடப் பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், தொலை உணரியல், தகவல் தொழில் நுட்பம், அறிவியல் தொழில்நுட்பக் கொள்கை பகுப்பாய்வு, மேம்பாட்டு குறிகாட்டிகள், தொழில்நுட்பப் பன்னாட்டு மாற்றங்கள், சிறு, குறு தொழிலகங்கள், கல்வியகங்களின் மேலாண்மை, சிறார் அறிவியல் கல்வி எனப் பல்வேறு துறைகளில் விரிந்து பரந்த அறிவு கொண்ட அறிஞர் முனைவர் மு. ஆனந்தகிருட்டிணன் 1952 ஆம் ஆண்டு, கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் (அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகம்)…

எம்.பி.நிர்மல் அவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையின் பாராட்டு!

  செவ்வை நேர்த்தி அமைப்பின் மூலம் சுற்றுப்புறத் தூய்மைக்குத் தொண்டாற்றி உலகப்புகழ் பெற்றுள்ள எக்சுநோரா நிர்மல் அவர்களுக்கு வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2014 தமிழ் விழாவில் பாராட்டினர். தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்து தமிழ் ஈழ விடுதலைக்கான கருத்தாக்கத்தைப் பல தரப்பாரிடமும் ஏற்படுத்தி வரும்  அவரது தொண்டினை விழாவில் பாராட்டினர். பேரவையின் முன்னாள் தலைவரும் 2008 பேரவைத் தமிழ்விழா ஒருங்கிணைப்பாளரருமான முனைவர் தனிக்குமார் சேரன் பாராட்டுப் பட்டயம் வழங்கினார்.  வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கச் செயலாளர் முனைவர் விசயகுமார் முத்துசாமி.பொன்னாடை  அணிவத்து வாழத்தினார். சமயங்களுக்கு…

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 101-125

   – இலக்குவனார் திருவள்ளுவன்   101. இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ? தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல் – பெரியபுராணம்: 2. தில்லை வாழ் அந்தணர் சருக்கம்: 2. தில்லை வாழ் அந்தணர் நாயனார் புராணம்: 9 102. ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழும் தரும். – பெரியபுராணம்: 4. மும்மையால் உலகாண்ட சருக்கம் : 16. மூர்த்தி…

மாமூலனார் பாடல்கள் 26: சி.இலக்குவனார்

26. நீ செயலற்றது எதனால்? -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (ஆனி 22, 2045 / சூலை 06, 2014 இதழின் தொடர்ச்சி) 26 பாடல் அகநானூறு 359 பாலை பனிவார் உண்கணும் பசந்ததோளும் நனிபிறர் அறியச்சாஅய நாளும். கரந்தனம் உறையும் நம்பண்பு அறியார் நீடினர் மன்னோ காதலர் என நீ எவன் கையற்றனை இகுளை! அவரே வான வரம்பன் வெளியத்து அன்னநம் மாண்நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது அருஞ்சுரக்கவலை அசைஇய கோடியர் பெருங்கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு வீழ்பிடி…

தமிழீழ விளையாட்டு விழா-2014, முன்சன்

முன்சன்-தமிழர் பண்பாட்டுக் கழகம் நடாத்திய தமிழீழ விளையாட்டு விழா-2014 ஆனி 21, 2045 சூலை 05, 2014 சனிக்கிழமை 11:00 மணியளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கியது. சிறுவர் சிறுமிகளின் ஓட்டப்போட்டிகள், நீளம் பாய்தல், சாக்கோட்டம், பந்தெறிதல் கயிறடித்தல் பெற்றோர்களுக்கு ஓட்டப்போட்டிகள், இசைநாற்காலி(சங்கீதக்கதிரை) இடம்பெற்றன தமிழீழ விளையாட்டான நாயும் முயலும் விளையாட்டை இளையோர்கள் விரும்பி மகிழ்வுறும் முறையில் விளையாடினார்கள். வெற்றி வீரர்களுக்கு தமிழாலய ஆசிரியைகள், சிறப்புப்பணியாளர்கள் பதக்கங்கள்,கிண்ணங்களை வழங்கிப் பாராடடினர். தமிழீழ விளையாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் திடலில் பணியாற்றியவர்களுக்கும், சிற்றுண்டி உணவைச்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 4 – பொறி.க.அருணபாரதி

(ஆனி 22 , 2045 /சூலை 06, 2014 இதழின் தொடர்ச்சி) சீன வரலாற்றுக் குறிப்புகள்   தமிழர்களைப் போலவே நாகரிகத்தில் சிறந்து விளங்கியசீனர்கள். தமக்கென தனித்த பல அரச மரபினரால் ஆளப்பட்டு வந்தவர்கள். சீனாவில், 1912ஆம் ஆண்டு மக்களாட்சி அரசு வேண்டி, கலகம் நடைபெற்றது. சன் யாட் சென் என்ற குடியரசுவாதியின் தலைமையில் நடைபெற்ற அக்கலகம், சீன மக்கள் குடியரசை நிறுவியது. இதே காலக்கட்டத்தில் இரசியாவில் புரட்சியாளர் இலெனின் தலைமையில் நடைபெற்ற சமவுடைமை(சோசலிச)ப் புரட்சி உலகையே உலுக்கிபோட்டது போல சீனாவையும் உலுக்கியது. சீனாவில்,…

வவுனியா மன்னகுளத்தில் வள்ளுவர் முன்பள்ளி

புலம் பெயர் உறவுகளுக்குப் பாராட்டுகள்!   புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் ஊரில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் ஊரில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்விழாவல கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, தொடக்கநிலை கற்றல் தான் ஒரு மனிதனுக்கு எழுத்தறிவிக்கிறது. வாழ்வதற்கு மிகவும் தேவையான எழுத்தறிவையும், வாசிப்பறிவையும் கற்பிக்கும் முன்பள்ளி ஒன்று…

காரைக்குடியில் வினைதீர்த்தானின் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

ஆனி 25 , 2045 / சூலை 9, 2014 அன்று காரைக்குடி இராம.சு.இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 80 மாணவ மாணவியருக்குத் தன்முன்னேற்றப் பயிலரங்கம் நடைபெற்றது. தன்னார்வத் தொண்டு ஆர்வலர் திரு சொ.வினைதீர்த்தான் இதனைச் சிறப்பாக நடத்தினார். பரம்பரைச்சிறப்புடைய இந்நகராட்சிப்பள்ளி 1938 இல் தொடங்கப்பட்டு நடுநிலைப்பள்ளியாகச் செயல்பட்டு வந்தது. சென்ற ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு ஆற்றல்மிகு தலைமை ஆசிரியர் திரு ஆ.பீட்டர் இராசா வழிநடத்தலில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. திரு பீட்டர் இராசா பயிலரங்கு நடத்த…

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 2 : ச.பாலமுருகன்

  (ஆனி 22, 2045 / சூலை 06, 2014 இதழின் தொடர்ச்சி)       நடுகற்கள் முதலான மரபுச்சின்னங்களைப் பாதுகாப்பதும் அவற்றை முறையே பேணுவதும் அரசாங்கத்தின் கடமை என்றாலும் அரசாங்கமே அனைத்தையும் பேண முடியாது என்பதே உண்மை. எனவே, வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்க முடியும்.     வரலாற்று ஆர்வலர்கள் செய்யவேண்டியன:   மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் ஏற்படுத்துதல்.          ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மாவட்டத்தில் உள்ள…

தமிழிய வரலாற்றில் திருநங்கைகளின் தொன்மங்கள்

உரை: எழுத்தாளர் பிரியாபாபு திருநங்கைகளின் இன்றைய தடைகள் உரை: சொப்ணா & சிரீநிதி இடம்: காந்தி அருங்காட்சியகம், மதுரை 20. நாள்:ஆனி 29, 2045 / 13.07.2014, ஞாயிறு நேரம்: மாலை 4:30 மணி அனைவரும் வருக…. ஒருங்கிணைப்பு: நாணல் நண்பர்கள் குழு & நேயா நற்பணி மன்றம் 9629127102, 9944061111 https://www.facebook.com/nammavaralaaru