இரசினி குழுவினரின் சிறந்த நடிப்பு!

  இரசினிகாந்து தன் ஒப்பனைத் தோற்றத்தை நம்பாமல் தன் நடிப்பு முறையை நம்பும் தன்னம்பிக்கை உள்ளவர். ஆனால், இப்பொழுது அவருக்குத் தன்னம்பிக்கை குறைந்துவிட்டது போலும்! திரைக்கு வெளியேயும் தன் குழுவினருடன் சேர்ந்து நடித்து வருகிறார். இரசினி நடிக்கும் (இ)லிங்கா என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் கருநாடகா மாநிலத்தில் நடைபெற்றது. கத்தூரி கருநாடக சனபர வேதிகே என்னும் அமைப்பின் சார்பில் இராம்நகரில் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அவரது உருவப் பொம்மையை எதிர்த்தனர். ஏனெனில் அவர் காவிரியாற்றுச்சிக்கலில் தமிழர் பக்கம் உள்ளாராம். கேழ்வரகில் நெய்வடிகின்றது என்றால்…

சங்கர மடம் வழியில் தமிழக அரசா?

   தமிழக முதல்வரின் நலத்திட்டங்களில் பாராட்டக்கூடிய ஒன்றாக அண்மையில் (ஆனி 16, 2045 / சூன் 30, 2014) திருவரங்கத்தில் திறந்த இறையன்பர்களுக்கான தங்கும் விடுதியைக் குறிப்பிடலாம். பயணச் செலவைவிடத் தங்குமிடச் செலவு மிகுதியாவதால் ஏற்படும் இடர்ப்பபாடுகளிலிலிருந்து மீள நல் வாய்ப்பாக இவ் வுறைவகம் அமைகின்றது.   இத்திட்டம் தொடங்கப்பட்டபொழுதே ஒரு சாராரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இப்பொழுது அனைத்துச் சாராரின் கசப்பை இத் திட்டம் கொண்டுள்ளது.   கட்டடம் கட்டும் பொழுது, 140ஆண்டுகால வரலாறு உடைய மதுரகவி நந்தவனத்திற்குரிய நிலத்தில் கட்டப்படுவதால் அவ் வறக்கட்டளையினர்…

தனித்தமிழ் இயக்கம் – சிலப்பதிகார விழா

  தனித்தமிழ் இயக்கம் ஆனி 16, 2045 – 30.6.2014 அன்று மாலை சிலப்பதிகார விழா ஒன்றை அதன் தலைவர் தனித்தமிழறிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடத்தியது. தமிழ்த்தென்றல் வரவேற்புரை வழங்கினார். திருவாட்டி த.தமிழ்இசைவாணி செயல்அறிக்கை படித்தார்.   தூ.சடகோபன், நா.அப்பாத்துரை, முதலியோர் முன்னிலையில் அவ்விழா புதுவை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்றது.   திருவள்ளுவர் படத்தையும் மறைமலையடிகள் படத்தையும் கடலூர் மாவட்ட நூலகஅலுவலர் திருவாட்டி பெ.விசயலட்சுமி அவர்கள் திறந்துவைத்துப் பேசினார்.   சட்டமன்ற உறுப்பினர் ஆ.அசோக்ஆனந்து, வாழ்த்துரை வழங்கினார்.   ‘கற்பைப் போற்றிய…

அங்கே இந்தி இங்கே சமற்கிருதம் ஒற்றை ஆயுதத்தின் இரு முனைகள்

  –          அண்ணா விருதாளர் இரா.உமா   பிற மொழி ஆதிக்கத்திற்குச் சிறிதும் இடம் கொடுக்காத மண் தமிழ்நாடு. மொழியை உயிராகக் கருதி, மொழிக்காக உயிரையும் துறக்கத் துணிந்தவர்கள் தமிழர்கள். இந்தித் திணிப்பை, தமிழ்நாடு எதிர்த்த எழுச்சி மிகு வரலாற்றை, வடநாடுகள் வாய்பிளந்து பார்த்தன. இப்போதுதான் அவை சற்றே உறக்கம் கலைத்திருக்கின்றன. இன்றைக்கும் மோடி தலைமையிலான பா.ச.க. அரசு இந்தியின் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட முயலும்போது, இந்தியாவில் தமிழ்நாட்டின் குரலே ஓங்கி ஒலிக்கிறது.   1938, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதியாக,…

தனித்தமிழ் இயக்கம் நடத்திய இலக்கிய விருந்தரங்கம்

ஆனி 17, 2045 / 1.7.2014 செவ்வாய் மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இலக்கிய விருந்தரங்கம் நடைபெற்றது. தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அவ்விழாவுக்கு ஆசிரியர் சோ.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். த. தமிழ்த்தென்றல் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறுமி சா.கலைமதி நடன மாடினார். த.தமிழ்நேயன் சிறுவர் பாடல்கள் பாடினார். புலவர் சிவ.இளங்கோவன்,புலவர் இ.பட்டாபிராமன் ஆகியோர் இலக்கியச்சுவைபற்றிப் பேசினர். சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன் தனித்தமிழ் அறிஞர் க.தமிழமல்லன் அவர்களைப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாவரங்கில் பாவலர்கள் தேவகிஆனந்து,…

இலக்கு – ஆனித்திங்கள் கூட்டம்

வணக்கம், நலம் வளம் சூழ வேண்டுகிறோம்..              ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாதக் கூட்டம், ஆனி 27, 2045 / 11.07.2014 அன்று மாலை 06.30 மணிக்கு,              மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது.. தலைமை : பள்ளத்தூர் பழ .பழநியப்பன் அவர்கள்..                                தலைவர், அம்பத்தூர் கம்பன் கழகம்..   சிறப்புரை: திரு சோம. வள்ளியப்பன் அவர்கள்..               விருதாளர்: விசால் ஆர்.சாபுரம். அழைப்பை இணைப்பில் காண கோருகிறோம்.. உறவும் நட்புமாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க…

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் : ச.பாலமுருகன்

 அறிமுகம்    உலகில் உள்ள தொன்மைச் சமூகங்களில் ஒன்றாகவும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் இயங்கிவரும் தமிழ் மன்பதையினர் தலைசிறந்த இலக்கியம், கலை, பண்பாட்டு, கோயில் கட்டடக்கலை, வானவியல் துறைகளில் அறிவு பெற்றவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தமிழர்களின் சிறப்பு உலகத்திற்கு தெரிவித்து நிற்பன செல்வியல் தன்மை வாய்ந்த இலக்கியங்களும் வரலாற்று நினைவுச்சின்னங்களும் ஆகும். ஆயிரக்கணக்கான வரலாற்று நினைவுச்சின்னங்கள் நம் தமிழ்நாட்டில் விரவிக்கிடக்கின்றன. அவை ஒரு சில மட்டுமே அரசாலும் ஆர்வலர்களாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நடுகற்களும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவிக்கிடக்கின்றன. வரலாற்று ஆர்வலர்கள் தற்போது நடுகற்கள்…

மாமூலனார் பாடல்கள் 25: சி.இலக்குவனார்

உரு. எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! – தலைவி –சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (ஆனி 15, 2045 / சூன் 29, 2014 இதழின் தொடர்ச்சி) திருமணம் நிகழ்ந்தபின் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளான். பண்டைத் தமிழ்நாட்டில் திருமணம் நிகழ்ந்த சின்னாட்களில் தலைவன் தலைவியைப் பிரிதல் சிறப்புக்கல்வி பெறும்பொருட்டும், அரசியல் அலுவல் பொருட்டும். பொருளீட்டும் பொருட்டும் நிகழ்ந்தது. இப் பிரிவுகளைப்பற்றிய விரிவுகளைத் தொல்காப்பியர் இலக்கண நூலில் தெளிவுற அறியலாம். இப்பாடலில் வருகின்ற தலைவனும் அவ்வாறே பிரிந்து சென்றுள்ளான். தலைவனைப்பிரிந்த தலைவி வருந்துகின்றாள்….

செஞ்சீனா சென்றுவந்தேன் 3 – – பொறி.க.அருணபாரதி

(ஆனி 15, 2045 / சூன் 29, 2014 இதழின் தொடர்ச்சி) 3. இந்தியப்பணத்தாளில் காந்தி … சீனப் பணத்தாளில் மாவோ!   சீனாவுக்குள் நுழைந்தவுடன் சிகப்பு நிறத்தில் மாவோ – இலெனின் படங்கள் என்னை வரவேற்கும் என நினைத்திருந்தேன். ஆனால், நுழைந்தவுடன் சிவப்பு நிறப்பின்னணியுடன் வட அமெரிக்க நிறுவனமான கே.எப்.சி. நிறுவன முதலாளி சாண்டர்சு படத்துடன்கூடிய வணிகச்சின்னம்தான் என்னை வரவேற்றது! ஒரு சில இடங்களில் டெங் சியோ பிங்கின் படங்களைக் கொண்ட பதாகைகளில் சீன எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. நம்மூரில், எப்படி மகிழுந்துகளின் முன்புற…