“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) -ஙா

(ஆவணி 08, 2045 / ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி) “தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” – இனித் “தமிழ்த் தேசியப் பேரியக்கம்”   சிறப்புப் பொதுக்குழு தீர்மானங்கள் (தொடர்ச்சி) -ஙா 2.1. நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வெளிமாநிலத்தவர் வந்து குடியேறுவதை அனுமதிப்பதற்கு அல்லது மறுப்பதற்கு அந்தந்தமாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்திற்குஉள்நாட்டு அனுமதி உரிமம் (Inner line permit) என்று பெயர். அதே அதிகாரத்தை, தமிழக அரசுக்கு இந்திய அரசு வழங்க வேண்டும். 2.2. தமிழ் பேசும்…

தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் – ஙா : இலக்குவனார் திருவள்ளுவன்

       (ஆவணி 15, 2045 / 24 ஆகத்து 31, 2014 இதழின் தொடர்ச்சி) 2. உலகத் தமிழ்ப் பரப்பு மையம் நிறுவிடுக!   பிழையற்ற தமிழில் பேசவும் எழுதவும் அனைவரும் பயிற்சி பெறும் வகையில் உலகத் தமிழ்ப் பரப்புக் கழகம் நிறுவ வேண்டும். அந்தந்த நாட்டு மொழிகளின் வாயிலாகத் தமிழ்க் கற்றுத் தரப்பட வேண்டும். வெவ்வேறு நிலைகளுக்கான தேர்வுத் திட்டங்களை வகுத்து, கால வேறுபாடின்றியும் அகவை வேறுபாடின்றியும் ஒருவர் ஒரு நிலையிலான தேர்வில் வெற்றி பெற்றார் என்றால் அடுத்த நிலையிலான தேர்விற்குத்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 11 – பொறி.க.அருணபாரதி

(ஆவணி 8, 2045 /ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி) 11. சியான் – தமிழ்நாடு – வரலாற்று உறவு     சங்கக் காலம் தொட்டே, சீனாவிற்கும் தமிழகத்திற்கும் உறவுகள் உண்டு. சீனாவிலிருந்து வந்த பயணிகள் சிலர் தமிழகத்தில் தங்கியிருந்து, தமிழகத்தின் பண்பாடு – வரலாறு ஆகியவற்றைத் தங்களுடைய சீன மொழியில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.   அவ்வாறு, தமிழகம் வந்த முதலாவது சீனப்பயணி பாகி யான் என்பவர், சீனாவின் நான் சிங் பகுதியிலிருந்து வந்தவர். இரண்டாவது வந்த சீனப்பயணி யுவான் சுவாங்கு,…

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – (இ)லீ குவான் (இ)யூ

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – சிங்கப்பூர் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ உணர்ச்சிப்பெருக்கம்!     “சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்” எனக் குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ, “தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்!” எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிபர் மகிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்….

மோடி சொல்லிவிட்டார் – கட்டியிருக்கும் கோவணத்தையும் உருவிப்போட்டுஇருங்கள்!

“ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ள நிலையில், நாட்டைப் பிரித்துத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோர முடியாது.” இது எப்படி இருக்கிறது? சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் சம்பந்தன் தெரிவித்த கருத்து இது உங்கள் எல்லோருக்கும் இதில் உடன்பாடு தானா? இப்போது விளங்குகிறதா ஏன் ஈழத்தின் உணர்ச்சிக் கவிஞர் அண்ணன் காசி ஆனந்தன் அவர்கள் ”சுத்த வீணான மனுசர் சம்பந்தன்” என்று ஒருமுறை வெளிப்படையாக மதிப்பிட்டார் என்று? இந்தியா சொல்லும்,” கட்டியிருக்கிற கோவணத்தையும் உருவிப்…

கமலைகள் உறுபயனிழந்து கோழிகள் அடைக்கப் பயன்படல்

தேனிப் பகுதியில் நீர்இறைக்கப் பயன்பட்ட கமலைகள் தற்பொழுது கோழிகள் அடைத்து வைக்கப் பயன்பட்டு வருகிறது.   தேவதானப்பட்டி பகுதி வேளாண்மை சார்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தோட்டங்கள், வயல்கள், தோப்புகள் என ஏராளமாக இருந்தன. இவைதவிர தேவதானப்பட்டி பகுதியை வளம் சேர்க்க மஞ்சள் ஆறு, வைகை ஆறு, பச்சிலைநாச்சியம்மன், ஆறு எனப் பல ஆறுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய்கள், நூறாயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள் என இருந்தன. இதன் மூலம் இப்பகுதியில் வேளாண்மை செழித்து வந்தது. கடந்த பத்தாண்டுகளாக மும்மாரி மழை பொழிந்த இப்பகுதி தற்பொழுது…

பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை: ஊக்கத்தொகை வழங்கும் விழா

பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா    சீர்காழியில் பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் காமராசரின் பிறந்த நாள் விழாவைக் கல்வி விழாவாகக் கொண்டாடுவது வழக்கம்.   அதில் மாநில அளவில் 12 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்து அருவினை படைத்தவர்களையும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களையும் அழைத்து வந்து பரிசுத்தொகை கொடுத்தும் சான்றிதழ் கொடுத்தும் மாணவ, மாணவிகளைப் பாராட்டுவது வழக்கம்.   மேலும் பால்சாமி (நாடார்)…

‘கல்லும் வெல்லும்’ – இலக்கிய மாத இதழ் வெளியீட்டு விழா

     திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு  நகரில் ‘கல்லும் வெல்லும்’ என்ற இலக்கிய மாத இதழ் தனியார் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. முதல் படியைக் கவிஞர் கி.சாந்தகுமார் வெளியிட்டார்; தொழில் அதிபர் மை.வீரர் அப்துல்லா பெற்றுக்கொண்டார்.   இவ்விழாவில் பேசிய கவிஞர் கி.சாந்தகுமர் மக்கள்நாயகத்தின் நான்காவது தூண்களில் ஒன்று இதழ்த்துறை. இதழ்த் துறையில் நாளிதழ், இலக்கியம், குற்றம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தமிழ் வளர்ச்சிக்குச் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நமது பரம்பரை,. பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவற்றில் ஒன்றான கல்வெட்டு தொடர்பான நூல்கள்…

நீர்நிரம்பி வரும் மஞ்சளாறு அணை! நீரைச் சேமிக்குமா மாவட்ட நிருவாகம்?

  மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் கனமழையால் நிரம்பி வரும் மஞ்சளாறு அணை     தேவதானப்பட்டி அருகே உள்ள மேற்குமலைத்தொடர்ச்சியில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பொழிந்து வருவதால் மஞ்சளாறு அணை நிரம்பி வருகிறது.   மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பொழிந்து வருவதால் மஞ்சளாறு அணை நிரம்பி வருகிறது.   கொடைக்கானல் பகுதியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் மழை பொழிவதால் மஞ்சளாறு அணை, மருதாநதி அணை, பேரிசம் ஏரி, சண்முகா அணை முதலான பல்வேறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கொடைக்கானல்…

தமிழுக்காகக் குரல் கொடுக்கும் தருண் விசய்க்குப் பாராட்டுகள்!

  தமிழ் நாட்டிற்கு வெளியே உள்ள இந்தியத்துணைக்கண்டத்தினர் தமிழின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் தமிழைப் புறக்கணிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கு மாறாக மாநிலங்களவையில் தமிழுக்காகக் கொடி தூக்கினார் ஒருவர்.அவர், தமிழ் நாட்டவர் அல்லர். உத்தரகண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர். அதுவும் சமய(மத)வெறிபிடித்த ‘இராசுட்ரிய சுயம்சேவக்கு சங்கம்’ என்ற நாட்டுத்தற்தொண்டுக் கழகத்தின் பல பொறுப்புகளில் இருந்தவர். இவ்வமைப்பு நடத்தும் பாஞ்சசன்யா’ என்னும் இதழின் ஆசிரியராக 20 ஆண்டுகள் இருந்தவர்.ஊடகவியலாளராகவும் மக்கள் நலத் தொண்டராகவும் நன்கறியப்பெற்றவர். பழங்குடி மக்களின் நலனுக்காகப்பாடுபட்டு வருபவர்.படக்கலைஞர், கட்டுரையாளர், படைப்பாளர் எனப் பல வகைகளில்…

குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள் 2/5 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆவணி 08, 2045 / ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி) 21. கள்ளி இதன் முள் பிளவு பட்டதாய் இருக்கும். இதன் காய் வெடிக்கும் பொழுது மிகுந்த ஒலி உண்டாகும்.  ‘கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடி’ வெண்பூதியார்: குறுந்தொகை:174:2 (நொடி – ஒலி) கள்ளிமரத்தின் காய்கள் வெயிலில் வெடிக்கும்.  ‘பொரிகால் கள்ளி விரிகாய் அம்கவட்டு’ மருத்துவன் சீத்தலைச் சாத்தனார்: குறுந்தொகை: 154:5  22. காஞ்சி காஞ்சி மரம் மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் பசிய  பூந்தாதுக்கள் உடையனவாய் நறுமணம் கமழும். பயற்றங் கொத்துகள்…

1 2 10