ஐரோப்பிய பண்டுவ மருத்துவக் கழகத்தின் விருது பெறும் முதல் ஆசியர் – தமிழர் மரு. வீரப்பன்

விருதாளர் மரு.சி.வீரப்பனைப் பாராட்டிய பொறி.இ.திருவேலன் அறிமுக உரை!   தலைமை விருந்தினர் மாண்பமை நீதிபதி இராசேசுவரன் அவர்களே! சுழற்கழக மாவட்டம் 3230-இன் மேனாள் ஆளுநரும், இந்நாள் உறுப்பினர் சேர்க்கைக் குழுவின் அறிவுரைஞருமான, சிறப்பு விருந்தினர், சுழலர்(ரோட்டேரியன்) ஏ.பி. கண்ணா அவர்களே! இவ்விழாவை நடத்தும் தலைவர் திரு கணேசன், செயலாளர் திரு வெங்கடேசன், திரு இராமநாதன், திரு இளங்கோ, பிற பொறுப்பாளர்களே!! எனது கெழுதகை நண்பரான, மருத்துவத்துறையில் சீர்மையாளர் (Vocational Excellence Award) என விருது பெறவிருக்கும் தகைமையாளர் மருத்துவமணி சிதம்பரம் வீரப்பன் அவர்களே! அவர்கள்தம்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 10 – பொறி.க.அருணபாரதி

(ஆவணி 1, 2045 /ஆகத்து 17, 2014 இதழின் தொடர்ச்சி) மன்னராட்சி ஒழிந்தது.. மன்னர் இன்னும் வாழ்கிறார்.. சியான்(Xi’an) என்றழைக்கப்படும் இந்நகரம் முன்பு சங்கன்(Chang’an) என அழைக்கப்பட்டுவந்துள்ளது. கி.பி. 618இலிருந்து 904 வரை (இ)டாங்குஅரசகுடும்பத்தினர், சங்கன்பகுதியைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சிபுரிந்துள்ளனர். முந்தைய மன்னராட்சிக் காலங்களைவிட, (இ)டாங்கு மன்னராட்சிக் காலத்தில்தான் சீனாவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதெனப் பலவரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மன்னராட்சி கோலோச்சிய இந்நகரத்தில், மன்னராட்சி மரபின் அடையாளமாகக் காணப்படும் சில இடங்களைச் சுற்றிப் பார்க்கும் ஆவலுடன் நகரப் பேருந்துக்காக நின்றோம். பேருந்துக்காகக் காத்திருப்போர் வரிசையாக…

அ.வாடிப்பட்டியில் பரிசுகள் வழங்கும் விழா

விடுதலை நாளை முன்னிட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் விடுதலை நாளை முன்னிட்டுப் பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, நடனப்போட்டி முதலான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமாலா பிச்சைமணி தலைமை தாங்கினார். ஒன்றியப்பெருந்தலைவர் செல்லமுத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளும் சுழற்கேடயங்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர், முன்னாள் கெங்குவார்பட்டிப் பெருந்தலைவர் காட்டுராசா, தேவதானப்பட்டிமன்ற…

குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள்: 1/5 -இலக்குவனார்திருவள்ளுவன்

           பழந்தமிழர்கள் அறிவியலிலும் சிறந்து விளங்கியுள்ளார்கள் என்பது நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களில் இருந்தே நன்கு புலனாகின்றது. சங்கஇலக்கியங்களில் உள்ள சில வானியல் செய்திகளையும் அறிவியல் விதிகளையும் வேளாண்மைச் செய்திகளையும் திரும்பத்திரும்பக் கூறுகிறோமே தவிர, சங்கக்கடலில் புதைந்துள்ள அறிவியல் வளங்களை முழுமையாக இன்னும் வெளிக்கொணரவில்லை. அறிவியல்தமிழ்க் கருத்தரங்கங்கள் இத்தகைய முயற்சிகளுக்குத் துணைநிற்பது பாராட்டிற்குரியது.           சங்கஇலக்கியங்களில் உயிரியல்செய்திகள் மிகுதியாக உள்ளன. பொதுவாகப் பயிரியல் விலங்கியல்களில் தோற்றம், வகை, வண்ணம், செயல்பாடுகள், பயன், ஒப்புமை அல்லது வேறுபாடு, வளரிடம், சூழ்நிலை, உறுப்புகள், இனப்பெருக்கமுறை, இடப்பெயர்ச்சி முதலானவைபற்றித்தான் படிக்கிறோம்….

உலகுக்கு வழிகாட்டும் தமிழ்ப்பண்பாடு – பேரா. மறைமலை உரை

ஆவணி 11, 2045 / ஆக.27, 2014 இராசபாளையம் தருமாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றம்  

புதுச்சேரி அரசிடம் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க வேண்டுகோள்!

 புதுச்சேரி அரசு தமிழ் வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்னும் வேண்டுகோள் ஒன்றைத் தனித்தமிழ் இயக்கம் முதலமைச்சர் அரங்கசாமி அவர்களிடம் நேரில் அளித்தது. தனித்தமிழ்இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தமிழறிஞர்களுடன் சென்று அளித்தார். தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டும் என்னும் வேண்டுகோள் 32ஆண்டுகளுக்கும் மேல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் தமிழ் மொழி மேம்பாட்டுக்காகவும் இலக்கிய மொழிபெயர்ப்புப் பணிகளுக்காகவும் தமிழ் வளர்ச்சித் துறை ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் தனித்தமிழ் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வேண்டுகோளில் பல கட்சிகளைச்சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களும்…

மறுவாசிப்பில் நா.பார்த்தசாரதி – இலக்கிய வீதி

  ஆவணி12, 2045 / ஆக.28,2014 இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் தீபம் நா.பார்த்தசாரதி சிறப்புரை திருப்பூர் கிருட்டிணன் அன்னம் விருது பெறுபவர் ஆர்.வெங்கடேசு

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல் , இசுக்கார்பரோ

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல் ஆவணி 14, 2045 / 30-08-2014 நிகழ்ச்சி நிரல் கிறித்தவமும் தமிழ்ப் பண்பாடும் உரை: பேராசிரியர் அ.சோ.சந்திரகாந்தன் சிறப்பு விருந்தினர்கள் உரை “தமிழ்ப்பண்பாடு எனும் கருத்துருவாக்கத்தில் கிறித்தவப் பரப்புரையாளர்களின் பங்களிப்பு” – கலாநிதி மைதிலி தயாநிதி வீரமாமுனிவரின் தமிழ் இலக்கியப்பணி – யூட்டு பெனடிக்ட்டு, ஆடி மாத இலக்கிய நிகழ்வுகள் தொகுப்புரை: திருமதி செயகௌரி சுந்தரம் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: ஆவணி 14, 2045 / 30-08-2014 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: மெய்யகம், இசுக்கார்பரோ…

அயல் எழுத்து அகற்று! – இலக்குவனார் திருவள்ளுவன்,

  ஓர் இனம் என்றும் வாழ அதன் மொழி நிலைத்து நிற்க வேண்டும். அம் மொழி நிலைத்து நிற்க அதன் எழுத்து சிதைக்கப்படாமல் அயல் உரு கலக்கப்படாமல் தூய்மை போற்றப்பட வேண்டும். எனவே, எழுத்தைக் காத்து, மொழியைக் காத்து, இனத்தைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இனத்தைக் காக்கும் கடமைகளில் இன்றியமையாத முதன்மைக் கடமையாக நம் மொழிப் பயன்பாட்டில் அயல் எழுத்தை அகற்ற வேண்டும் என்பதை நாம் உள்ளத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு மொழி பேச்சிலும் எழுத்திலும் பயன்பாடின்றிப் போகும்போது அழிகின்றது….

“தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” – இனித் “தமிழ்த் தேசியப் பேரியக்கம்”

  திருச்சி ஏழாவது சிறப்புப் பொதுக்குழுவில்   ஒருமனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!      தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், ஆகத்து 15, 16 நாட்களில் திருச்சி, இரவி சிற்றரங்கில் நிறுவப்பட்ட பாவலர்மு.வ.பரணர் அரங்கில் நடைபெற்றது. ஆகத்து 15 – வெள்ளி அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இச்சிறப்புப் பொதுக்குழுவை, தலைமைச் செயற்குழுஉறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் மேரி, சென்னை,தாம்பரம் தோழர் இரா.இளங்குமரன் ஆகியோரைக் கொண்ட தலைமைக்குழுவழிநடத்தியது. தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர்கி.வெங்கட்ராமன்…

தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா

அன்புடையீர், வணக்கம். தி.இரா.நி.பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆவணி 9. 2045 /ஆக.25-ஆம் நாள், திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது. தமிழ்ப் படைப்பாளிகளையும், தமிழறிஞர்களையும் விருதளித்துச் சிறப்பிக்கும்  இவ் விழாவில் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி.. முனைவர் இல. சுந்தரம் : +91-98423 74750