புதிய அரசிற்கு வாழ்த்துகள்!

  எளிமையின் காரணமாக, இரண்டாம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசிற்கு வாழ்த்துகள்! தங்கள் தலைவியின் நிழலவையாகத்தான் இந்த அரசை நடத்துவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! எனினும் தங்கள் தலைவி, தமிழ்நலச்செயல்களில் ஈடுபட்டதை நிறுத்தாமல் தொடர வேண்டும். தமிழ் ஈழம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் முன்னிலும் ஈடுபாடு காட்ட வேண்டும். இத்தகைய செயல்கள்தாம் அவருக்கு உலக அளவில் பரிவான போக்கை அமைத்துத்தந்ததை உணர வேண்டும். அதே நேரம் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறைக் கொட்டடியிலும் கொடுமையாக ஈழத்தமிழர்கள்…

முதல்வருக்குத் தண்டனை – எண்ண ஓட்டங்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்

  ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது செய்த தவறுகளுக்காகப் பதவிப் பொறுப்பில் இல்லாத பொழுது தண்டிக்கப் பெறும் பொழுது பதவிக்கு இழுக்குவராது. இப்பொழுது புரட்சித்தலைவி செல்வி செயலலிதா முந்தைய முதல்வர் நிலையில்(ஆனி 17, 2012 / சூலை 1, 1991 முதல் பங்குனி 22, 2017 / ஏப்பிரல் 4, 1996 வரை) இருந்த பொழுது வருவாய்க்கு மீறி உரூபாய் 66 கோடி சொத்து வைத்து இருந்தமையால் (புரட்டாசி 11, 2045 / செப். 27, 2014 அன்று)4 ஆண்டுக்காலம் சிறைத்தண்டனையும் உரூபாய் 100…

தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் ஙு – இலக்குவனார் திருவள்ளுவன்

           (புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி)   எல்லாக் கோயில்களிலும் தமிழிலும் அருச்சனை செய்யலாம் என இருந்து, இப்பொழுது தமிழில் அருச்சனை செய்யப்படும் என அறிவிப்பு உள்ளதும் சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடலாம் என்பது நடைமுறைக்கு வந்தபின்பும் தமிழ் வழிபாட்டைப்பற்றிப் பெருமை கொள்ளாமல் இருக்கலாமா எனச் சிலர் எண்ணலாம். சிதம்பரம் கோயிலில் ஆரியவழிபாடு முடிந்தபின்பு வெளி மேடையில் சிறிது நேரம் தேவாரம் பாடத்தான் இசைவே அன்றி, தெய்வப் படிமம் உள்ள கருவறையில் தேவாரம் பாட…

“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙு

       (புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி)   தீர்மானம் – 7: தமிழ்நாட்டை கதிர்வீச்சு நோயாளியாக, வேதியக் குப்பை மேடாக மாற்றாதே!   இந்திய அரசு, தனது பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை ஆதாயத்திற்காகவும் தனது ஆதாயங்களுக்காகவும் மனித குல அழிவுத் தொழில்நுட்பமான அணுப்பிளப்புத் தொழிற்சாலைகளை மேலும் மேலும் தமிழ்நாட்டில் நிறுவி வருகிறது. மற்ற மாநிலங்கள் மறுத்துவிட்ட நிலையில், தமிழகக் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டியது. அணுக்கதிர் வீச்சினால் உலகின் பல பகுதிகளில் மனிதப் பேரழிவு நேர்ந்ததை அறிந்து…

செஞ்சீனா சென்றுவந்தேன் 14 –பொறி.க.அருணபாரதி

       (புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 14. போக்குவரத்துத் தீரச்யெல்கள்   சீன வாடகைஊர்திகளைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நம்முடைய ஊரில் உள்ள அழைப்பூர்தி(கால் டாக்சி)களைப் போலவே அவை இயங்குகின்றன. எனினும், நடுவழியில் பலரையும் ஏற்றிச் சென்று இறக்குகின்றனர். சீன அரசு, மிதிவண்டிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதன்மைச் சாலைகளில் மிதிவண்டிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதற்குப் பதிவு செய்ய வேண்டும். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவ்வாறு…

குப்பைகளைப் பிரித்துக் கொட்டவேண்டும்- தேவதானப்பட்டிப் பேரூராட்சி

தேவதானப்பட்டிப் பகுதியில் வணிக நிறுவனங்கள் குப்பைகளைப் பிரித்துக் கொட்டவேண்டும் -பேரூராட்சி அறிவிப்பு தேவதானப்பட்டிப் பகுதியில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்து கொட்டவேண்டும் எனப் பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்துக் கொட்டவேண்டும் எனவும் வணிக நிறுவனங்கள், திருமணம் முதலான சிறப்பு நிகழ்வுகள் நடத்துபவர்கள் குப்பைகளை வெளியே கொட்டாமல் தங்கள் செலவிலேயே மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தரம்பிரித்து…

கற்பூரம் – வைகை அனிசு

  கோவில்களில் இறைவனுக்குப் பயன்படுத்தப்படும் கற்பூரத்திற்குப் பின்னால் சுவையான தகவல் உண்டு. ஆங்கில மொழியில் ‘கம்போர்’ என்று அழைக்கப்படும் கற்பூரத்தின் பின்னால் பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. ‘கம்போர்’ என்ற ஆங்கிலச்சொல் ‘கோம்ப்ர்’ எனும் பிரஞ்சுச் சொல்லிருந்துதான் தான் உருவானது. ‘கோம்ப்ர்’ எனும் இச்சொல் ‘கம்ப்போரா’ எனும் இலத்தீன் சொல்லிருந்து உருவானது. இச்சொல் ‘கபூர்’ எனும் அரபு மொழிச் சொல்லிருந்து உருவானது. இச்சொல் ‘கபூத் பராசு’ எனும் மலாய் மொழிச் சொல்லிருந்து வந்ததாகும். தென்கிழக்காசியாவின் தீபகற்பமான மலாய்ப் பகுதியிலிருந்து இங்கிலாந்து காட்டிற்கு ஒரு நேர்க்கோட்டில்…

அழிக்கப்பட்டு வரும் நீர்நிலைக்கல்வெட்டுகள்

  மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரும் என ஆரூடம் கூறிக்கொண்டிருக்கிறோம். அதே வேளையில் நீர்ப் பேணுகை, நீர் மேலாண்மையில் முன்னோடியாகத் தமிழன் இருந்தான் என்பதற்கு ஆதாரமாகச் செப்பேடுகள், கல்வெட்டுகள் மிகுதியாக உள்ளன.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தண்ணீரின் இன்றியமையாமையை உணர்ந்து ஏரிகள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு ஏரிகள் உருவாக்கிய பின்னர் ஏரிகளில் உள்ள கல்வெட்டு ஆவணப் பொறிப்புகளையும், அரசர்களின் ஆணைகளையும் இன்றும் காணலாம்.   அரசனின் எந்த ஆணைப்படி அது அமையப்பெற்றது, அதைப் பேணுவதற்கு அளிக்கப்பட்ட கொடைகள், அந்த அரசனின் அரச முத்திரை ஆகியவை…

1 2 9