தேவதானப்பட்டி பகுதியில் இறக்குமதி செய்யப்படும் இளநீர்கள்

தேவதானப்பட்டி பகுதியில் இளநீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இறக்குமதி செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் பல காணி(ஏக்கர்) பரப்பளவில் தென்னை மரம் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதியில்விளையும் தென்னங்காய்கள் காங்கேயம், மும்பை, கேரளா என ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இப்பொழுது கடந்த சில வருடங்களாகப் போதிய மழை இல்லாததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் இப்பகுதியில் தென்னை மரம் பயிரிடலின் பரப்பளவு சுருங்கிவருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் தண்ணீர் குறைந்ததால் தேங்காய், இளநீர் ஆகியன பெரிதாக இல்லாமல் சிறிய அளவில் இளநீர், தேங்காய்கள் காணப்படுகின்றன. இதனால்…

தனியார் பிடியில் இராணிமங்கம்மாள் உருவாக்கிய மத்துவார் குளம்

தேவதானப்பட்டி பகுதியில் இராணிமங்கம்மாள் காலத்தில் உருவாக்கப்பட்ட மத்துவார் குளம் கேட்பாரன்றிக் கிடக்கிறது. 1689 முதல் 1706 ஆம் ஆண்டு வரை சார்பரசியாக மதுரையை ஆண்டவர் இராணிமங்கம்மாள். அவர் காலத்தில் மதுரையிலிருந்து ஆவியூர், காரியாபட்டி வழியாக அருப்புக்கோட்டைக்கும் திருச்சுழியலுக்கும் பெரியகுளத்திலிருந்து கெங்குவார்பட்டி வழியாக மதுரைக்கும் சாலைகள் அமைக்கப்பட்டன. அச்சாலைகள் இன்று வரை மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது. இராணிமங்கம்மாள் காலத்தில் பல்வேறு குளங்கள், சத்திரங்கள், சாவடிகள், அன்னதான மண்டபங்கள் என ஏராளமாகக் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட குளங்களில் ஒன்று கெங்குவார்பட்டியில் உள்ள மத்துவார்குளம். இக்குளத்தை பொதுமக்களுக்காகக்…

“வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” மாநாடு தள்ளிவைப்பு!

இன்று நடைபெற இருந்த “வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” மாநாடு தள்ளிவைப்பு!   தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் சென்னையில் ‘வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்’ என்ற தலைப்பிலான தமிழகம் தழுவிய சிறப்பு மாநாடு, இன்று (புரட்டாசி 12, 2045 / 28.09.2014), நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தன.   இந்நிலையில், முதலமைச்சர் செயலலிதா வழக்குத் தொடர்பானத் தீர்ப்பால் தமிழகமெங்கும் பதற்றச்சூழல் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, மாநாடு வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கப்படுகின்றது. மாநாடு நடைபெறும் நாள், பின்னர் அறிவிக்கப்படும்.   மாநாடு…

உத்தமம் தமிழ்க்கணிமைப் பரிசு பெறும் த.சீனிவாசன்

செல்வா-குமரி அறக்கட்டளை வழங்கும் 2014 ஆம் ஆண்டிற்கான உத்தமம் தமிழ்க்கணிமைப் பரிசை திறமூல ஆர்வலர் திரு. த. சீனிவாசன் வென்றுள்ளார்.   இளைஞரான இவருக்கு நல்ல கணிநிரல்அறிவும் பட்டறிவும் இருப்பதுடன், நல்லஉள்ளமும், தமிழார்வமும், தன்னறிவைப் பகிரும் பேருள்ளமும் கொண்டுள்ளார். பல இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியாகவும்விளங்குகின்றார்.  ‘கணியம்’ என்னும் மின்னிதழில் ஏறத்தாழ இரண்டாண்டுகளாக நல்ல பங்களிப்புகள் செய்து வருகின்றார். இவையனைத்தும்   படைப்புப்பொதுமை (‘கிரியேட்டிவ் காமன்சு’) பகிர்வுரிமத்தின்கீழ் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளத்தக்கவை.  பார்க்கவும்: http://www.kaniyam.com/  இந்திய இலினக்ஃசு (Linux) பயனர் குழுவின் சென்னைக்கிளையின்தலைவராகவும் திரு த.சீனிவாசன் இருக்கின்றார். இவரது…

புதுச்சேரியில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்தக்திற்கான ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம், கலைஇலக்கியப் பெருமன்றம்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து  புரட்டாசி 4, 2045 / 20.09.2014புதுச்சேரியில் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியும் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டியும் ஆர்ப்பாட்டம் செய்தன.  கவிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் திரளான தமிழார்வலர்கள் பங்கேற்றனர்.    

திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கப் படங்கள்

திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கம் கோவை இந்துத்தான் கல்லூரியில் புரட்டாசி 5, 2015 / 21.09.2014 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் “கல்வெட்டில் திருக்குறள்” என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. (பெரிய அளவில் காண ஒளிப்படங்களைச் சொடுக்கிக் காணவும்)

நாளும் வளர்வாய் நல்ல படி! – கு.ந.தங்கராசு

அம்மா, அப்பா என்ற படி, அங்கும் இங்கும் நடந்த படி, அழகுத் தமிழில் பாட்டுப் படி, அம்மா சொல்லித் தந்த படி! ஆசை முத்தம் கொடுத்த படி, அப்பா மகிழ்வு கொள்ளும் படி, அன்னைத் தமிழில் பாட்டுப் படி, அப்பா கற்றுக் கொடுத்த படி! அண்ணன் அக்கா சிரிக்கும் படி, அத்தை மாமா மகிழும் படி, மழலைத் தமிழில் பாட்டுப் படி, மனம்போல் குறும்பு செய்த படி! நடைவண்டி பிடித்து நடந்த படி, ஙஞண நமன என்ற படி, நாளும் வளர்வாய் நல்ல படி!…

உ.த.ப.இயக்கம் – நினைவேந்தலும் கலந்தாய்வும்

உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இந்திய ஒன்றியம் தொல்காப்பிய அறிஞர் மலேசியா ‘உங்கள் குரல்’ இதழாசிரியர் சீனி நைனா முகம்மது நினைவேந்தல் உலகத் தமிழ்க்கவிதைப்பெருவிழா – கலந்தாய்வு புரட்டாசி 8, 2045 / 24.09.2014 சென்னை    

பாரதியார் வாழ்ந்த வீட்டை நினைவகமாக அறிவிக்க தருண் விசய் முயற்சி

பாரதியார் வாழ்ந்த வாரணாசி வீட்டை விடுதலைப் போராட்ட நினைவகமாக அறிவிக்க வலியுறுத்துவேன்! – தருண் விசய்     பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டுக் கடந்த ஆவணி 26, / செப்.11 அன்று தில்லித்தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதியார் உருவச்சிலைக்குத் தமிழார்வலரான உத்தரகண்டு நா.உ. தருண்விசய் மாலை அணிவித்தார். “தமிழ் மொழிக்குத் தேசிய அளவில் முழுமையான அறிந்தேற்பு கிடைக்க வேண்டும்.” என்று அவர் அப்பொழுது தெரிவித்தார். மேலும்,   பாரதியார் வசித்த வாரணாசி வீடு மத்திய, மாநில அரசுகளால் கண்டுகொள்ளப் படாமல் இருப்பதை அறிய வந்ததாகத் தெரிவித்தார்….

திலீபன் – உயிர்க்கொடைஞர்களின் குறியீடு.

திலீபனைப் போற்றி விடுதலையை மீட்டெடுப்போம்!   காந்தி வழியில் நடந்ததால், காந்தியம் பேசும் இந்தியத்தால் பறிக்கப்பட்டது திலீபனின் உயிர். இந்தியம் என்பது என்றென்றைக்கும் தமிழ்ப்பகையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் தயங்காது என்பதை உறுதிப்படுத்திக் காட்ட விரும்பியதால் திலீபனின் அறப்போர், உயிர்ப் பறிப்பில் முடிந்தது.   இராசையா பார்த்தீபன் என்னும் திலீபன், கார்த்திகை 12, 1994 / 27.11.1963 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஊரெழு என்னும் ஊரில் பிறந்து ஊரெழும் வண்ணம் உலகு தொழும் வண்ணம் வீரனாய் மலர்ந்து வீரனாய்ப் புகழுடல் பெற்றார்.ஆவணி 30, 2018 /…