தேனிப் பகுதியில் நிறம் மாறும் கிணறுகள் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

  தேனிப் பகுதியில் நிறம் மாறும் கிணறுகளினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி, எழுவனம்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளில் கிணறுகளில் உள்ள தண்ணீர் நிறம் மாறிவருகிறது. இப்பகுதியில் சாயத்தொழிற்சாலை, சருக்கரைத் தொழிற்சாலை,  காழிலை(காப்பி)த்தொழிற்சாலை எனப் பல தொழிற்சாலைகளும்  பாறைகளை உடைத்துத் தூசு எடுக்கும் தொழிற்சாலைகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதனால் சாயத்தொழிற்சாலையின் கழிவு நீர், சருக்கரைத்தொழிற்சாலையின் கழிவு நீர், இரவு நேரங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ச் சுமையுந்துகளிலும் இழுபொறிகளின் மூலமும் எடுத்துச்செல்லப்பட்டுக் கொட்டப்படுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் கழிவுநீர்கள் …

சிறுவர்கள் கலைச்சுவை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 2

நாள்: ஆவணி 22, 2045 / 07-09-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. இடம்: சாதனா அறிவுப்பூங்கா, தளம் எண் 367, 32 ஆவது தெரு, 6 ஆவது பகுப்பு, க.க. நகர், சென்னை தொடர்புக்கு: 72998 55111 & 98406 98236 திரையிடப்படும் படம்: The Way Home     நண்பர்களே, சிறுவர்களின் திரைப்படச்சுவையை வளர்க்கும் வகையில் தமிழ்ப்பட நிலையம், சாதனா அறிவுப்பூங்கா இணைந்து நடத்தும், சிறுவர்களுக்கான திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று சென்னை க.க….

தேனிப் பகுதியில் நீரின்றிக் கருகிய கரும்புகள் – துயரீட்டுத்தொகை வழங்குக!

தேனிப் பகுதியில் நீரின்றிக் கருகிய கரும்புகளால்  உழவர்கள் கவலை அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி பகுதி அருகே உள்ள  ஊர், தே.வாடிப்பட்டி. இப்பகுதியில் நெல்,  கரும்பு  ஆகிய பயிரிடல் முதன்மை உழவாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் மஞ்சள் ஆறு நீரை நம்பி  உழவுத்தொழில்  நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள கிணறுகள், கண்மாய்கள், குளங்கள் அனைத்தும் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. மேலும் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து விட்டது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள  உழவர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி இப்பகுதியில் உள்ள  பயிர்த்தொழிலைக் காப்பாற்றி வந்தனர். இப்பொழுது தண்ணீர்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 12 –பொறி.க.அருணபாரதி

(ஆவணி 15, 2045 /ஆகத்து 31, 2014 இதழின் தொடர்ச்சி) 12.        சியான் நகரின் ஆற்றில் நாகப்புள்(Dragons)!      பழங்காலக் கதை ஒன்றுடன் பிணைக்கப்பட்ட கட்டடங்களும், கலைச் சின்னங்களும் அனைத்து நாகரிகங்களிலும் இருக்கின்றன. சிலப்பதிகாரம் – தமிழர்களின் மரபுடன் இணைந்து வழங்கப்பட்ட அவ்வாறான இலக்கியமே! அதுபோலச் சீனாவிலும் பல இடங்கள் சீன இலக்கியங்களின் ஊடாக இன்றைக்கும் மதிக்கப்பட்டு வருகின்றன.      சியான் நகரின் மையப் பகுதியில் மணிக்கோபுரம் (Bell Tower) என்றொரு பகுதி உள்ளது. 1384ஆம் ஆண்டு மிங் மன்னராட்சியின் போது, இந்தக்…