தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது!   தமிழை இறைமொழி என்கின்றனர். ஆனால் இறைமொழியில் இறைவனைத் தமிழில்வணங்க வகையில்லை. இறைவனின் தமிழ்ப்பெயர்களும் மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் சிதைக்கப்பட்டும் ஆரியப் பெயர்களாகத் திகழ்கின்றன. இறைவனின் திருப்பெயர்களைத் தமிழில் குறிப்பிடாமல் தமிழில் வழிபடாமல் இருப்பவர்க்கு இறையருள் எங்ஙனம் கிட்டும்?   கோவில் தொடர்பான துண்டறிக்கை கிடைத்தால் கோவிலில் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடக்க இருப்பதும் அதற்கு நம்மிடம் பணம் கேட்கிறார்கள் என்றும்தான் நமக்குப் புரியும். கிரந்த எழுத்துகளில் ஆரியமே அங்கே கோலோச்சும்! கோயிலை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு நம் செல்வம்தான் தேவை!…

தேனிப் பகுதியில் தொடர்மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேனிப்பகுதியில் பகுதியில் தொடர்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டிப் பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டும் சில இடங்களில் விடாமல் தொடர்ந்தும் மழை பெய்துவருகிறது. இதனால் சில்வார்பட்டி, குள்ளப்புரம், தேவதானப்பட்டி முதலான பகுதிகளில் உள்ள கண்மாய்கள், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்மழை காரணமாகப் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கின்றனர். மேலும் பண்டிகைக்காலத்தில் யாரும் வெளியே தலைகாட்டமுடியாத அளவிற்கு மழை பொழிவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

தேனிப் பகுதியில் என்புமுறிவுக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

  தேவதானப்பட்டிப் பகுதியில் என்புமுறிவுக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முன் எச்சரிக்கையாகச் செய்யப்பட்டு வருகின்றன.. தேவதானப்பட்டிப் பகுதியை இருபிரிவுகளாகப் பிரித்து மருத்துவக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட மருத்துவத் துணை இயக்குநர் காஞ்சனா உத்தரவின்பேரில் சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாகவும் செயமங்கலம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி   பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாகவும் இருந்து காற்பட்டைகள்(டயர்கள்), தேங்கியிருக்கும் கழிவுநீர்க் குட்டைகள், தண்ணீர்த்தொட்டிகள், பாத்திரங்களில் அபேட் மருந்துகளை ஊற்றியும்; திறந்து வைத்திருக்கும் பாத்திரங்களை மூடக்கோரி விழிப்புணர்வும் செய்து வருகின்றனர். மழைக் காலமாதலின் என்புமுறிவு நோய்…

தேனிப் பகுதியில் என்புமுறிவுக் காய்ச்சல் (டெங்கு) பரவும் பேரிடர்

தேனி அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சியில் என்புமுறிவுக் காய்ச்சல் பரவும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. குள்ளப்புரம், மருகால்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, புதூர் முதலான ஊர்களில் ஏறத்தாழ 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை. மேலும் குள்ளப்புரம் ஊராட்சியில் ஊராட்சிச் செயலாளர் இல்லை. ஏற்கெனவே இருந்த ஊராட்சிச்செயலாளர் பதவி உயர்வு பெற்று மாறுதலாகிவிட்டார். இதனால் ஊராட்சியில் எந்த வித மக்களின் அடிப்படைச்சிக்கல்களும் கவனிக்கப்படவில்லை. மேலும் குடிநீர், சாக்கடை வசதி, மின்வசதி எதுவும் நடைபெறவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்….

பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் என்புமுறிவு நோய் (Dengue fever) பரவும் பேரிடர்

தேனிஅருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் என்புமுறிவு நோய் (Dengue fever) பரவும்   பேரிடர் உள்ளது. பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஏறத்தாழ 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் வணிக நிமித்தம் காரணமாகப் பெங்களுர், மைசூர், மும்பை போன்ற இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள். அதே போல அண்டை மாநிலமான கேரளாவிற்கும் வேலைக்காகச் சென்றுவிடுவார்கள். வருடத்தில் பொங்கல், இரம்சான், ஈகைத்திருநாள் (பக்கிரீத்து), தீபாவளி முதலான பண்டிகையின்போது மட்டும் அனைவரும் ஒன்று கூடுவார்கள். இந்நிலையில் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறைவு உள்ளது. இதனால் பொதுமக்களின் அடிப்படைச்சிக்கல்களான குடிநீர், சாக்கடை வசதி,…

செஞ்சீனா சென்றுவந்தேன் 18 – பொறி.க.அருணபாரதி

 18. சீனாவில் ‘பயங்கரவாதம்’ அன்றைய ஞாயிற்றுக் கிழமை, சியான் நகரின் முதன்மை வணிகப்பகுதியான மணிக்கோபுரத்தை(பெல் டவரை)ச் சுற்றி கடுமையான காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. சீனப் படைத்துறையினரும் ஆங்காங்கு நின்று கொண்டிருந்தனர். சீன அரசுத் தலைவர்கள் யாரேனும் வந்திருப்பார்கள் போல என நினைத்தேன். பின்னர், அன்றிரவு வீடு திரும்பியதும் இணையத்தளத்தில் செய்தி பார்த்தேன். அன்றைய நாள் (மாசி 17, 2045 / மார்ச்சு1-2014) அன்று, சீனாவின் (உ)யுன்னன் (Yunnan) மாகாணத்தின், குன்மிங்கு(Kunming) நகரின் தொடர்வண்டி நிலையத்தில், கையில் கத்தியுடன் நுழைந்த ஒரு குழுவினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதில்…

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-2 : நாக.இளங்கோவன்

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்!  பகுதி-2 : நாக.இளங்கோவன்   (ஐப்பசி 2, 2045 / அக்.09, 2014 தொடர்ச்சி) வா.செ.குழந்தைசாமி இப்படிச் சொல்கிறார் என்றால், காலஞ்சென்ற முனைவர் கொடுமுடி சண்முகனார்ஒரு குறியீட்டை உகர ஊகார வரிசைகட்குச்சூட்டி விடுகிறார். இது வடமொழி அடியொற்றியது. மேற்கண்ட செய்யுளில் உள்ளது போல உகர ஊகாரஉயிர்மெய் எழுத்துகளை மாற்றி விட்டால்கணிக்கு ஏற்றதுபோலத் தமிழை மாற்றிவிடலாம்என்று பரிந்துரைக்கிறார் கொடுமுடியார். கணிக்குஎன்ன குறை அல்லது கணியில் தமிழுக்கு என்ன குறைஎன்பதை மட்டும் வசதியாக எல்லோரும் தவிர்த்துவிடுவது வியப்புக்களில் ஒன்று….

தொல்காப்பியம் – இயல் பகுப்பும் நூற்பா அளவும்

இயல் பகுப்பும் நூற்பா அளவும்      தொல்காப்பியர் நமக்கு அருளிய தொல்காப்பியம் எனும் நூலில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 9 இயல்கள் உள்ளன. இயல்களின் பெயர்களையும் நூற்பா எண்ணிக்கையையும் அறிவதற்குத்துணை செய்யும பாக்கள் வருமாறு:   எழுத்ததிகார இயல்கள்   நூலின் மரபு, மொழி மரபு, நுண் பிறப்பு, மேலைப்புணர்ச்சி, தொகை மரபு, பால் ஆம் உருபு இயலின் பின், உயிர், புள்ளி, மயக்கம், தெரிவுஅரிய குற்றுகரம் செப்பு.   1. நூல் மரபு, 2….

தேனிப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் சென்னைக்கண்நோய்

தேனிப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் சென்னைக்கண்நோய் தேனிப்பகுதியில் வேகமாக சென்னைக்கண்நோய் (madras-eye)   வேகமாகப் பரவி வருகிறது. தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, செயமங்கலம், போடி, கம்பம், காமயகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அண்டை மாநிலமான கேரளா, கருநாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். இதே போலத் தொழில் நகரங்களான திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை போன்ற நகரங்களுக்கு வேலைநிமிர்த்தம் காரணமாகச் சென்றுள்ளனர். பண்டிகைகளையொட்டி அனைவரும் தங்களுடைய ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கண்நோய் பாதிப்படைந்தவர்கள் இப்பகுதியில் வருகை…

1 2 8