ஏ…இறையே- துரை. ந. உ

    ஏ….இறையே…! – இருவரியில் சொல்வேன் நல்லவற்றைக் கிள்ளித் தருகிறாய்!; அல்லவற்றைஅள்ளித் தருகிறாய்! ஏன்? ​வாழும் வழிகேட்டு நிற்பவரை வீழ்த்தி வலிகூட்டிச் செல்கிறாய் ஏன்​ ? துதித்தவரைத் துன்பத்துள் தள்ளும் தவறு; மதிதெளிந்த செய்கையா கூறு சோதனைமேல் சோதனைதந்து உம்குடியை வேதனைக்குள்தள்ளுவதா சாதனை?​ சொல்மெய்தானோ! “இல்லையென்று சொல்லவில்லை; நல்லது தான்இருந்தால்” என்போரின் கூற்று ​ஏன் இப்படி ? ​ பிடியும்…என் சாபம் படியும் : துதிப்பவரை எற்றி மிதிப்பவரை, போற்றிஇறை என்பவரைத் தூற்றும் உலகு இரைஞ்சும் அடியவரைக் கைவிடு வோரை இறையல்ல என்று விடு…

தேனிப் பகுதியில் கிணறுகள் தூர்வாரும் பணி தீவிரம்

  தேனிப் பகுதியில் கிணறுகள் தூர்வாரும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.   தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பொழியவில்லை. இதனால் நீர்நிலைகள் கிணறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் என அனைத்தும் காய்ந்து கிடந்தன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் மளமளவென சரியத்துவங்கியது. இதனால் பல கிணறுகள் நீரின்றி காய்ந்து போயின. சில கிணறுகள் மூடப்பட்டுவிட்டன.   தேவதானப்பட்டி பகுதியில் 10 அடி முதல் 20 அடிவரை தண்ணீர் தாராளமாக கிடைக்கும். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் ஆழ்துளைக்கிணறுகள் 200 அடிவரை…

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை மீறும் மக்கள்

    தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணைப்பகுதில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை மீறி இப்பகுதி மக்கள் செயல்படுகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை உள்ளது. மூலையாறு, தலையாறு, வறட்டாறு ஆகிய ஆறுகளில் இருந்து வரும் நீரைத்தேக்கி மஞ்சளாறு அணையாகக் கட்டப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணையின் கொள்ளளவு 57 அடியாகும். தற்பொழுது மேற்குமலைத்தொடர்ச்சியில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் மஞ்சளாறு அணை திண்டுக்கல், தேனி மாவட்ட மக்களுக்குக் குடிநீர் தேவைக்காகவும், பாசனவசதிக்காகவும் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தண்ணீர் வரத்து அதிகமாக…

ஆரியக் கூத்தாடுகிறார் சோழவந்தான் சுப்பிரமணியன் சுவாமி!- பழ. கருப்பையா

வேத நாகரிகம் அணிந்து வருகின்ற முகமூடிதானே இந்து நாகரிகம்     “திராவிடத்தைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்; “திராவிடன்” என்று எவனாவது இருக்கிறானா என்று மரபியல் சோதனை (genetic test ) செய்து பார்த்தும் எந்தத் திராவிடனும் இல்லை என்ற முடிவுதான் எட்டப்பட்டிருக்கிறது.” ”ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. எல்லா இந்தியர்களும் ஒரே வகையான மரபணுக்களைத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே உள்ள வரலாற்று நூல்கள் மட்டும், ‘இந்தியா பல இனங்களை உள்ளடக்கிய (multi-ethnic) ஒரு நாடு” என்று பேசுகின்றன. ஆகவே, நேரு காலத்து வரலாற்று…

சிறுநண்டு – உருத்திரமூர்த்தியின் தமிழிசைப்பாடல்

சிறுநண்டு – தமிழிசைப்பாடல் சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சிலவேளை இதை வந்து கடல் கொண்டு போகும். கறிசோறு பொதியோடு தருகின்ற போதும் கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும். வெறுவான வெளி மீது மழை வந்து சீறும் வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும். நெறி மாறுபட நூறு சுழி வந்து சூழும் நிலையான தரை நீரில் இலை போல் ஈடாடும். இருளோடு வெளியேறி வலை வீசினாலும் இயலாது தர வென்று கடல் கூறல் ஆகும்….