எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! – கவிஞர் தணிகைச்செல்வன்

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! எங்கேயும் நான் தமிழனாக இல்லை! நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே உயர்ந்தோங்கிய தூணோரம் ஒதுங்கி நின்று உள்ளே வரலாமா? என்று “இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு ஐம்பதாண்டு காலமாக அடிதொழுது கிடக்கிறாள் என் தாய். பள்ளிகளின் வாயில்களுக்கு வெளியே வறியவள் போல் நின்று தான் பெற்ற குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்ட ஆங்கிலச் சீமாட்டியிடம் இசைவு கோரி கண்ணீரோடு காத்து நிற்கிறாள் என் தாய். ஆலயத்துக்குள்ளே நடக்கும் ஆறுகால பூசைகளில் ஒரு காலத்துக்கேனும் என்னை உள்ளே விடக்கூடாதா- என்று சமசுகிருத எசமானியிடம்…

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! – பெருஞ்சித்திரனார்

வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார்

பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார் மகன் என்னும் சொல்லைத் தெய்வப்புலவர்திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகளைப் புறக்கணித்து மகனைமட்டுமேஉயர்த்தும் வகையில் அவர் எழுதியுள்ளதாகப்  பலரும்தவறானவிளக்கங்கள்அளித்துள்ளனர். இவற்றை மறுத்து மகன் எனக் குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும்பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார். சான்றோன் எனக் கேட்ட தாய், தந்தைமகற்காற்றும் நன்றி,  மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன் தொழுதெழுவாள்முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச்சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கி யுள்ளார். இவ்வாறுபெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின்  விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும்…

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் – முனைவர் மறைமலை

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார்   எண்ணற்ற பேராசிரியர்கள் தமிழுக்குத்தொண்டாற்றியுள்ளனர். தமது ஆய்வு நூல்களின் வழியாகவும் உரைகளின் மூலமும்சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமையை எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் தமிழுக்குத் தீங்கென்று உரைக்கக் கேட்டமாத்திரத்திலே நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்த போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர் இலக்குவனார் மட்டுமேயாவர். தமிழ் வளர்த்த பேராசிரியராக மட்டுமின்றித் தமிழ் உரிமைப் போராசிரியராகவும் அவர் திகழ்ந்தமையாலேயே என்னைப் போன்ற அவருடைய மாணவர்கள் நெஞ்சிலே அவர் நிறைந்துள்ளார்.   அவருடைய புதல்வர்களில் ஒருவன் என்னும்…

கலைச்சொல் தெளிவோம் 19: காழ்நீர் –coffee

   19:   காழ்நீர் –coffee   தேயிலையிலிருந்து ஆக்கும் நீரைத் தேநீர் எனச் சுவையாகச் சொல்கிறோம். ஆனால் காப்பி(coffee) என்பதற்கான சரியான சொல் வழக்கில் வராமையால் காப்பி என்பதே நிலைக்கிறது. காப்பிக் கொட்டையில் இருந்து உருவாக்குவதால் கொட்டை வடிநீர் எனச் சொல்லப்பட்டது வேறு வகையாகத் தோன்றி மக்கள் நாவில் இடம்பெறவில்லை. கன்றின் குளம்படி போன்று உள்ளதால் காப்பி எனப் பெயர் பெற்ற மூலச் சொல் அடிப்படையில் குளம்பி எனச் சொல்லப்பட்டதும் இதனால் குழம்பிப் போவதாகக் கூறிப் பயன்பாட்டுத் தன்மையை இழந்துள்ளது. காழ் எனில் கொட்டை…

கலைச்சொல் தெளிவோம் 18: சூட்டடுப்பு–oven

  18:   சூட்டடுப்பு–oven அடுப்புஎன்னும் சொல்லைப் புலவர்கள்   பின்வரும் இடங்களில் கையாண்டுள்ளனர். முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி (பெரு 99) ஆண்தலை அணங்கு அடுப்பின் (மது 29) கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே! (பதி 18.6) அடைஅடுப்பு அறியா அருவி ஆம்பல் (பதி 63.19) உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில் (அக 119.8) தீஇல் அடுப்பின் அரங்கம் போல (அக 137.11) பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ (அக 141.15) உமண்உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின் (அக 159.4) களிபடு குழிசிக்கல் அடுப்பு ஏற்றி…

இலக்குவனார் குறள்நெறி நாளிதழ் தொடங்கியதன் காரணம்

 குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் வார இதழாக மாற்றக் கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா என்றெல்லாம் வேண்டினர். வாரஇதழாக மாற்றுவதைவிட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இதுகுறித்த நாளிதழ் ஆசிரிய உரை வருமாறு: “நற்றமிழில் உரையாட வேண்டும், எழுத வேண்டும் என்று கருதுபவர்களால்கூட நற்றமிழைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை…

வருகின்ற ஆண்டுகள் இன்பம் தருகின்ற ஆண்டுகளாகட்டும்!

வருகின்ற ஆண்டுகள் இன்பம் தருகின்ற ஆண்டுகளாகட்டும்!   வரும் தை முதல் நாள் திருவள்ளுவர் 2046 ஆம் ஆண்டுப்பிறப்பு வருகிறது. அதற்கு முன்னால் மார்கழி 17 அன்று 2015ஆம் ஆண்டு பிறக்கிறது.   ஒவ்வோர் ஆண்டையும் நாம் நம்பிக்கையோடுதான் எதிர்பார்க்கி்றோம்! ஆனால், எண்ணிய யாவும் எய்துவதில்லை. இருப்பினும் வரும் ஆண்டு தமிழர் உரிமை எய்தும் ஆண்டாக அமையும் என எதிர்பார்ப்போம்! வெறும் எதிர்பார்ப்பு பயனைத் தராது அல்லவா? எனவே, தமிழர்களின் தேசிய மொழி தமிழே என்பதையும் தமிழர்களின் இனமும் தமிழே என்பதையும் தமிழுக்குத் தலைமையும்…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி – முனைவர் க.இராமசாமி

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி     தமிழினத் தொன்மையையும் தனித்தன்மை யையும்நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள்தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல்மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கணநூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும் கூட இதற்குநிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்குமுன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய் தமிழ்இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நற்சான்றாய்த் திகழ்கிறது.   தமிழால் வாழ்ந்தோர் பலர். தமிழுக்காகவாழ்ந்தோர் மிகச்சிலர். அம் மிகச்…

கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker

21: அடுகலன்- cooker     சமைக்கப்பயன்படுத்தும் ஏனம் ஆங்கிலத்தில் குக்கர்/cookerஎனப்படுகிறது. அதனைப் பெரும்பான்மையர் அவ்வாறே கையாள்கின்றனர். வேளாணியலிலும் மீனியலிலும் cooker-சமையற்கலன் எனக் குறித்துள்ளனர். அடு என்பதன் அடிப்படையில் அடுகலன் என்பதே பொருத்தமாக இருக்கும். அடுகலன்- cooker/cooking vessel அடு என்பதன் அடிப்படையில் உருவாயுள்ள மற்றொரு சொல் அடுமனை-பேக்கரி (bakery), பேக்-அவுசு (bake-house). இவற்றின் அடிப்படையில் பின்வரும் சொல்லாக்கங்களை உருவாக்கலாம். அடுவப்பம் (உரொட்டி/bread), மெத்தப்பம்(bun)முதலானவை செய்யும் பணிகள் அடுபணி – பேக்கிங் (baking) இவற்றைச் செய்யும் பணியாளர், அடுநர்- பேக்கர் (baker)  – இலக்குவனார்…

இலக்குவனார் வணங்கும் கடவுள்

இலக்குவனார் வணங்கும் கடவுள்   சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்பேம்அல்லேம் மா(த்) தமிழுக்கே அன்பர் அல்லராகில்! எங்குமுள இடமெலாம் சுற்றிஓடி இரந்துண்ணும் இழிவாழ்க்கை உடைய ரேனும் தங்குபுகழ்ச் செந்தமிழ்க்கோர் அன்பராகில் அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவுளாரே! – பேராசிரியர் இலக்குவனார்! – புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 44 தரவு: பாபு கண்ணன்  

1 2 11