தேனி மாவட்டத்தில் ஆறு ஓடையாகிறது – வைகை அனிசு

தேனி மாவட்டத்தில் ஆறு ஓடையாகிறது தேனிமாவட்டத்தில் பெரும்பாலான ஆறுகள் வன்கவர்வினால்(ஆக்கிரமிப்பினால்) ஓடையாகி வருகிறது. தேனி மாவட்டத்தில் மேல்மங்கலம் பகுதியில் பன்றியாறு(வராகநதி) ஓடுகிறது. இந்தஆறு மேற்குமலைத்தொடர்ச்சியில் உற்பத்தி ஆகிப் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம் வழியாக குள்ளப்புரம் வரை செல்கிறது. இந்த ஆற்றை நம்பி ஏராளமான தென்னந்தோப்புகளும் வயல்களும் உள்ளன. மேலும் மேல்மங்கலம். செயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் ஊராட்சிகள் தங்கள் குடிநீர்த் தேவைக்காக இந்த ஆற்றில் தொட்டி கட்டி அதன் மூலம் நீரை எடுத்துத் தூய்மை செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றன. அண்மைக்காலமாக பன்றியாற்றின்(வராகநதியின்) இருபுறமும் தோப்புகளும்…

எஃகுத்தமிழர் இலக்குவனார் – பொன்.செல்வகணபதி

எஃகுத்தமிழர் இலக்குவனார்   இயற்பெயரிலேயே இலக்கு உடைய எஃகுத் தமிழர் இலக்குவனார்! அன்னைத் தமிழ்மீது ஆசை வைத்தவர் அதைக் காப்பதற்கென்றே மீசை வைத்தார்! பாவின் திறத்தாலே பைந்தமிழ் காத்தவர் பாவேந்தர்! இவரோ நாவின் திறத்தாலே நற்றமிழ் காத்த நாவேந்தர்! · * * * * * பிழைக்கத் தமிழ் படித்தோர் உண்டு தமிழ் படித்துப் பிழைப்பவரும் உண்டு! இவரோ தமிழ் தழைக்கத் தமிழ் படித்த தமிழர்! தமிழ் தழைக்கவே தலை நிமிர்ந்த தலைவர்! வேலை செய்யாமலிருக்க வேலை தேடுவோர் உண்டு! இவரோ வேலை…

கல்வியும் மருத்துவமும் மாணவர்களின் இரு கண்கள்

கல்வியும் மருத்துவமும் மாணவர்களின் இரு கண்கள்    தேசிய நூலக விழாவில் முன்னாள் மருத்துவத் துணை இயக்குநர் பேச்சு                வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம்,சிரீகிருட்டிணா பயிற்சி மையம், எசு.ஆர்.எம்.இன்போடெக் கணிணிப் பயிற்சி நிறுவனமும் இணைந்து கார்த்திகை 7, 2045 / நவம்பர் 23 அன்று நடத்திய தேசிய நூலக வார விழாவின் பரிசளிப்பு நிகழ்வில், இன்றைய அவசரமான உலகில் கல்வியும் மருத்துவமும் குழந்தைகளுக்கு இரு கண்களைப்போல் கட்டாயம் கிடைத்திட செய்திட வேண்டும் என்று முன்னாள் மண்டல மருத்துவத் துணை…

பேராசிரியர் நமக்கு வழங்கும் நெறியுரைகள்

பேராசிரியர் நமக்கு வழங்கும் நெறியுரைகள் நாம் பேராசிரியர்போல் போராளியாகத் திகழாவிட்டாலும் உரிமையுள்ள தமிழ் மாந்தராகவாவது வாழ வேண்டுமல்லவா? அதற்குப் பேராசிரியரின் பின்வரும் அறிவுரை களை அவர் நமக்கு இட்ட கட்டளைகளாகக் கொண்டு ஒழுக வேண்டும்: மொழியைக்காத்தவர்விழியைக்காத்தவர்! மொழியைச்சிதைத்தவர்விழியைச்சிதைத்தவர்! மொழிக்கும்விழிக்கும்வேற்றுமைஇல்லை! மொழியே விழி விழியே மொழி என்று கிளர்ச்சி கொள்ளுங்கள். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று அறைகூவுங்கள். தமிழ்வாழ்க!தமிழ்வாழ்க! தமிழ்ஓங்குக!தமிழ்உயர்க! என்றுவாழ்த்துங்கள் தமிழில்எழுதுக!தமிழில்பேசுக! தமிழில்பெயரிடுக!தமிழில்பயில்க! என்றுமுழங்குங்கள். மொழிவாழ்வுக்குமுயற்சிசெய்யுங்கள்… உங்கள்முயற்சிவாழ்க! தமிழ்வாழ்ந்தால்தமிழர்வாழ்வர்! தமிழர்வாழ்ந்தால்தமிழ்நாடுவாழும்! தமிழ்வாழ்வேதமிழர்வாழ்வு! (தரவு : புலவர்மணி இரா.இளங்குமரன்: பக்கம் 37: செந்தமிழ்க்காவலர்சி.இலக்குவனார்)

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட 50 ஆண்டு கடைப்பிடிப்பு: சென்னைக் கலந்தாய்வு – விவரங்கள் இந்தித் திணிப்புக்கு எதிரான 1965 மாணவர் போராட்டத்தின் 50 ஆம் நினைவு ஆண்டை ஒரு மொழி உரிமை ஆண்டாக அறிவித்துத், தொடர்ச்சியாகப் பல கோரிக்கை நிகழ்வுகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும் என்று மொழி உரிமைச் செயல்பாட்டாளர்களும் இயக்கங்களும் நவம்பர் 30, 2015 ஞாயிறு அன்று ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளன. மக்கள் இணையம் மற்றும் பன்மொழி இந்தியாவுக்கான இயக்கம் ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் முதன்மை அமைப்புகளும் மொழி…

இன்றும் இருக்கிறார் இலக்குவனார் – ஈரோடு தமிழன்பன்

இன்றும் இருக்கிறார் இலக்குவனார்   வைகை இலக்குவனார் வாழ்ந்தவரை தட்டுப்பாடில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது தமிழ் வெள்ளத்தால் மதுரைத் தென்றல் அவரிடம் மாணவராய் இருந்து புயலாவ தெப்படி என்று பயின்று கொண்டது கண்ணகி எரித்த நெருப்பின் மிச்சத்தில் இந்தித் திணிப்புக்கு எரியூட்டியவர் இலக்குவனார் இயற்றமிழ்மேல் இசைத்தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் பொறாமை ஏற்பட்டதுண்டு! இயலுக்குக் கிடைத்ததுபோல் ஓர் இலக்குவனார் கிடைக்கவில்லையே என்று! ஏகபோகம் எங்குமே எதிர்க்கப்பட வேண்டியதுதான்! ஆனால் புலமை ஏகபோகத்தை எப்படி எதிர்ப்பது? பொழிப்புரை பதவுரைப் புலவரல்லர் அவர், விழிப்புரை உணர்வுரைப் புலவர்! சங்கப் புலவர்…