கலைச்சொல் தெளிவோம் 20: அடுமகள் -female cook; அடுமகன் -male cook

   20:அடுமகள் -female cook ; அடுமகன் -male cook     அடு என்பதன் அடிப்படையில் சமையல் செய்யும் பெண் அடுமகள் எனப்படுகின்றாள். அடுமகள் முகந்த அளவா வெண்ணெல் – புறநானூறு399.1 நாம் இப்பொழுது female cook—சமைப்பவள்/பெண்சமையலர் எனப் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக அடுமகள் என்றே குறிக்கலாம். male cook-சமைப்பவன், ஆண் சமையலர் எனப் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக அடுமகன் என்றே குறிக்கலாம். அடுமகள் -female cook அடுமகன் -male cook – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழே இலக்குவனாரின் மூச்சு!

  தமிழே இலக்குவனாரின் மூச்சு!     “பேராசிரியர் இலக்குவனார் கூர்த்த அறிவு படைத்தவர்; முறையாக நூல்களைக் கற்றவர்; சிறந்த ஆராய்ச்சியாளர்; சிந்தனையாளர்; கருத்துக் களஞ்சியம் என்றால் மிகையாகாது. தமிழுக்காக எத்தகைய தியாகமும் அவர் செய்யத் தயங்காதவர். சிறந்த தமிழ்க் காவலர். அவர் குறிக்கோள் கொள்கை எல்லாம் தமிழ் வளர்ச்சியே! தமிழே! ஆயுள் முழுவதுமே சிறப்பாகத் தொண்டாற்றியவர்.’’ _ அண்ணலார் பு.அ. சுப்பிரமணியன் – புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம்44 தரவு : பாபு கண்ணன்

இணைய மாநாடு :ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான கடைசி நாள் நீட்டிப்பு

 ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான  கடைசி நாள் நீட்டிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது மாநாட்டில் பங்கு பெறுவதற்கான சுருக்கக் கட்டுரையை அனுப்பும் நாள் தை 1, 2046 /  15.01.2015 என நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கட்டுரையாளர்கள் தத்தம் கட்டுரையை அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றனர்.

பாலச்சந்தர் – ஒரு சகாப்தம் : நினைவேந்தல்

    அடையாறு கலை இலக்கியச் சங்கம் பாலச்சந்தர் – ஒரு காலக்கட்டம்: நினைவேந்தல் தமிழ்மணம் இலக்கிய மனை, கோட்டூர் தோட்டம் (துரைமுருகன் இல்லம் அருகில்), சென்னை மார்கழி 23, 2045 / சனவரி 7. 2015 மாலை 4.30   அன்புடையீர், தாதாசாகேப் விருதாளர் இயக்குநர் பாலச்சந்தர் நினைவேந்தல் மேற்குறிப்பிட்டவாறு நடைபெற உள்ளது. நடிகர் சாருகாசன், இயக்குநர் இலெனின், இயக்குநர் தமிரா (பாலச்சந்தர் நடித்த இரட்டைச்சுழி படத்தை இயக்கியவர்), (அப்படத்தின் உரையாடலாசிரியர்) தமிழ், எழுத்தாளர் முனைவர் பாரதிபாலன், கல்விக்கடல் முனைவர் ஆனந்த மூர்த்தி…

உள்ளத்தை வெளிப்படுத்து – சுமதி சுடர்

உள்ளத்தை வெளிப்படுத்து வாழ்க வளமுடன் நாள்தோறும் நினைவில் உள்ளத்தை வெளிப்படுத்து கதை சொல் கவிதை இயற்று கட்டுரை வரை பேசிப் பழகு நடித்து மகிழ் நாட்டியம் ஆடு ஓவியம் தீட்டு சிலை வடி பாட்டுப் பாடு கடிதம் எழுது  – சுமதி சுடர், பூனா http://sudarwords.blogspot.in/

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – உரையாடல்

      மார்கழி 16, 2045 / திசம்பர் 31 மாலை 4.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை இடம் :  பனுவல், 112, திருவள்ளுவர் சாலை,              திருவான்மியூர்,சென்னை 41. படைப்பு உரிமையைப் பாதுகாக்க.. பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ புதினச் சிக்கல் குறித்து உரையாடல் கலந்துகொள்பவர்கள் : பேராசிரியர் அ.மார்க்சு எழுத்தாளர் வ.கீதா பேராசிரியர் வீ.அரசு நாடகக்கலைஞர் பிரளயன் எழுத்தாளர் பாரவி தோழர் விடுதலை இராசேந்திரன் ஓவியர் மருது பேராசிரியர் இலட்சுமணன் எழுத்தாளர் வெளி இரங்கராசன் எழுத்தாளர் சுப…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 4 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி -4 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குருவிக் கூடு நிலைமை  :     (நாடகம் காண வந்தோரைப் பேடது கண்டு திகைக்கின்றது) பெண்   :           இன்றென்ன! வருவோர்! போவோருமாக                    நன்றே! தெருவினில் மக்கள் கூட்டம்? ஆண்     :        பொங்கல் திருநாள் நாடகமன்றோ? எங்கும் அதுதான்; இத்தனைக் கூட்டம்!                 “தமிழ்த்தாய்’ என்பது நாடகப் பெயராம்?                         அமிழ்தாய் இங்கு உரைத்தார்!…

சிறந்த காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு

ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதே    சிறந்த காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு – காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு –          அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் நடைபெற்ற ‘காதல் கவிதை’ நூல் வெளியீட்டு விழாவில், வெறும் உடல் கவர்ச்சிக்கான ஈர்ப்பாக இல்லாமல், ஒருவரையொருவர் மனத்தாலும் புரிந்துகொண்டு வாழ்வதே முன்னெடுத்துக்காட்டான காதல் வாழ்க்கையாகும் என்று கவிஞர் மு.முருகேசு பேசினார்.      இவ்விழாவிற்குத் தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மா.குமரன் அனைவரையும் வரவேற்றார்.    கள்ளக்குறிச்சி கவிஞர் வீ.சிவசங்கர் எழுதிய…

“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார்

“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார்   பேராசிரியரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும் “தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும் இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர். எம் போன்றோரை எள்ளியே தள்ளினர்” எனப் பேராசிரியர் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப் பங்கேற்றுத்…

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்!

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்! சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரேசமயம், ஒரேமொழி, ஒரே இனம்முதலான ஒற்றையாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார். “பரதகண்ட முழுவதும் ஒரேஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ள வைத்துப் பல மொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது. இந்துமதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக் காக்க எந்த நிலையில் உள்ள பிராமணரும் பின்வாங்கார் என்பதும் என்றும் நினைவில்கொள்ள…

கலைச்சொல் தெளிவோம் 15 – நெறியுரை: சில குறிப்புகள்

கலைச்சொல் ஆர்வலர் மிகுதியாக இருப்பினும் கலைச்சொற்கள் கண்டறியுநரும் புதியன புனையுநரும் ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் உள்ளனர். நான் மாணவப்பருவத்திலிருந்தே கலைச்சொற்களில் ஆர்வம் காட்டி வருகின்றேன். நான் ஆட்சித்துறையில் இருந்தமையால்   தமிழ்க்கலைச்சொற்களையும் புதிய கலைச்சொற்களையும் பயன்பாட்டிற்குக் கொணரும் வாய்ப்பு கிடைத்தது. அறிவியல் கலைச்சொற்களைப் பொருத்தவரை கட்டுரையாளர்களும் நூலாசிரியர்களும் பயன்படுத்தினால்தான் நிலைப்புத்தன்மை கிட்டும். வெறும் அ்கராதியாக இல்லாமல் சொல் விளக்கமாக இருந்தால்தான் புரிந்து கொண்டு பயன்படுத்த இயலும் என்பதால்தான் கலைச்சொல் விளக்கங்கள் அளித்து வருகின்றேன்.ஒரு சொல்லுக்கான பொருளையோ விளக்கத்தையோ தருவதுடன் நில்லாமல் அச்சொல் பயன்பாட்டில் உள்ள பிற இடங்களுக்கும்…

கலைச்சொல் தெளிவோம் -17 : சுரியலும் செதுவும்–Curl and Shrink

  17 சுரியலும் செதுவும்–Curl and Shrink சுரியல்(௫): சுரியலம் சென்னிப் பூஞ்செய் கண்ணி (பதிற்றுப்பத்து ௨௭.௪)  அரியல் வான்குழல் சுரியல் தங்க (புறநானூறு ௩௦௭.௬) இவற்றுள் சுரியல் என முடிச் சுருள் குறிக்கப் பெறுகின்றது. இலைச்சுருளைக் குறிக்க leaf curl – இலைச் சுருக்கு (வேளா.) என்கின்றனர். சுருக்கு என்று சொல்வதைவிடச் சுரியல் என்பது மிகப் பொருத்தமாக அமைகிறது. இலைச்சுரியல் – leaf curl shrink என்பதும் சுருக்கு (வேளா., பொறி., மனை., கால்.) என்றே சொல்லப்படுகின்றது. கூர்மை, ஒளி முதலியன மழுங்குவதும்  …