சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன்

சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன்   அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய தமிழ் அறிஞர், தன்மானத் தமிழ் மறவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிட்டியது.   சான்றோர்களும், புலவர்களும், அறிஞர் பெருமக்களும் கலந்துகொண்ட அவ்விழாவில் நான் பகிர்ந்துகொண்ட என் உணர்வுகளை வாசகர்களுக்காக இங்கே தருகிறேன்.   அமெரிக்காவில் இருக்கின்ற உலகத் தமிழர் அமைப்பு இலக்குவனார் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை நடத்தினார்கள். அந்தச் செய்திகள் எனக்கு மின் அஞ்சலில் வந்து சேர, அதைப்…

கலைச்சொல் தெளிவோம் 52: மலைப்பாம்பு-boa ; மாசுணம்-python

 52. மலைப்பாம்பு-boa; மாசுணம்-python   மலைப்பாம்பு பைதான்(python) என்றாலும் போ (boa)என்றாலும் மலைப்பாம்பு என்றுதான் சொல்கின்றனர். களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம் (நற்றிணை 261.6) துஞ்சுமரம் கடுக்கும், மாசுணம் விலங்கி (மலைபடுகடாம் 261) ஆகியவற்றில் மாசுணம் என மலைப்பாம்பின் வகை குறிக்கப்பட்டுள்ளன. எனவே, மலைப்பாம்பு-boa மாசுணம்-python என வேறுபடுத்தலாம்.

உம் பேச்சு கா – பட்டு இளங்கதிரின் நூல் வெளியீடு

  தை 10, 2046 / சனவரி 24,2015 காலை 10.00 ஆனந்து திரையரங்க வளாகம்,  அண்ணாசாலை, சென்னை தலைமை : கவிஞர் விசயபாரதி நூல்  வெளியீடு :  இயக்குநர் இலிங்கசாமி நூல் பெறுநர்  : இயக்குநர் செல்வமணி நூலுரை : முனைவர் முகிலை இராசபாண்டியன் ஏற்புரை :  பட்டு இளங்கதிர் தொடர்பிற்கு  : சந்திரன் 97 900 100 94

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு)

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு) (மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) 10.5. இடைக்காடரது பாடற்கொடை — 54       கடுகைத் துளைத்[து]ஏழ் கடலைப் புகுத்திக்          குறுகத் தறித்த குறள்   பொருள் உரை      திருக்குறளின் சொற்சுருக்கத்தையும், பொருட்சுருக்கத்தையும் ஆய்ந்தால், கடுகின் நடுவே துளைபோட்டு, ஏழு கடல் நீரையும் அத் துளைவழி உட்செலுத்தி, அளவில் குறுகி இருக்கும்படித், தறித்து வைத்தது போன்ற வடிவினது திருக்குறள். நுட்பங்கள்      சொல்: கடுகு கடுகு =…

‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா? விளம்பரக்கூத்திற்கா?

‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா? விளம்பரக்கூத்திற்கா?   தூய்மையே நம் செல்வம். எனவே, இந்தியாவைத் தூய்மையாக்குவோம் என்னும் திட்டம் என்னும் எண்ணம் வரவேற்கத்தக்கது. ஆனால், நடைமுறையில் இத்திட்டம் கேலிக்கூத்தாகத்தான் உள்ளது.   அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகளால் இந்தியா தூய்மையாகிவிடுமா? ஆனால் அப்படித்தான் மத்திய அமைச்சர்கள் எண்ணுகிறார்கள்.   உழவாரப்பணி போன்று தூய்மைத் திட்டத்தில், தொண்டு மனப்பான்மையில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். அதற்கு முன்னதாக அரசுப் பணியாளர்கள் தத்தம் கடமையைஆற்றப் பணிக்க வேண்டும்.   மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் தூய்மை பேணப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்….

‘ஒளி எனும் மொழி’ – நூல் வெளியீட்டு விழா

‘ஒளி எனும் மொழி’ – நூல் வெளியீட்டு விழா நாள்:  தை 11, 2046 /25-01-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு. இடம்:  நூல்முனை(புக் பாய்ன்ட்டு) அரங்கம், அண்ணா சாலை,  சுபென்சர்அங்காடி(பிளாசா) எதிரில், அண்ணா சாலை காவல் நிலையம் அருகில். நண்பர்களே தமிழ்ப் படநிலையத்தின் பேசாமொழி பதிப்பகம் சார்பாக இந்த ஆண்டு ஒளிப்பதிவு துறை தொடர்பான ‘ஒளி எனும் மொழி’ என்கிற நூல் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு பற்றியும், அதன் தொழில்நுட்பம், அழகியல், காட்சியமைப்புகள் பற்றியும் எல்லாருக்கும் புரியும் வகையில், ஒளிப்பதிவாளர் விசய் ஆர்ம்சுட்ராங்கு இந்தப்…

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் – மு.வ.

  அன்புடையீர், வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘ வரிசையில் இந்த ஆண்டின் முதல் நிகழ்வு: தை 9, 20146 – 23.01.2015 –வெள்ளியன்று, ‘மறு வாசிப்பில் – மு.வ.‘ பற்றிச் சிறப்புரை ஆற்ற இருப்பவர் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்.. தலைமை : திரு பழ நெடுமாறன் அவர்கள், முன்னிலை : மருத்துவர் மு.வ, நம்பி அவர்கள், விருதாளர் : எழுத்தாளர் சுந்தரபுத்தன் அவர்கள்  நேரம்           :  மாலை 6.30 – 8.30.. இடம்…

கலைச்சொல் தெளிவோம் 51 : படப் பொறி- camera; காட்சிப்பொறி-video

 51 : படப் பொறி- camera;  காட்சிப்பொறி-video    படம் எடுக்கும் பொறியை நிழற்படக் கருவி (ஆட்.), புகைப்படக் கருவி (வேளா.,மனை.), ஒளிப்படக்கருவி(பொறி.), என்று சொல்கின்றனர். போட்டோ/photo என்பதற்குத் தொடக்கத்தில் புகைப்படம் என்றும் பின்னர் நிழற்படம் என்றும் சொல்லி இப்பொழுது ஒளிப்படம் என வந்தாலும் பழஞ் சொற்களையே சில துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படம் அல்லது நிழற்படம் அல்லது ஒளிப்படம் என்னும் கருவியின் அடிப்படையில் படமெடுக்கும் கருவியைக் குறிப்பிடுகின்றனர். போட்டோ/ போட்டோகிராபிக்(கு) என்றால் ஒளிப்படம் என்று சொல்லி அதனை எடுக்கும் கருவியை – ஒளிப்படக்…

கலைச்சொல் தெளிவோம் 50 பிடரென்பு – atlas (உடற்கூறு); திணைப்படம்- atlas (புவியியல்)

           50. பிடரென்பு – atlas (உடற்கூறு)      முதுகெலும்பில் முதல் எலும்பு அட்லாசு எனப்படுகிறது. இதனை முள்ளெலும்பு என்று சொல்வதைவிடப் பிடர்(௨)+என்பு(௧௧) > பிடரென்பு எனலாம்.    ஆனால் புவிப்பரப்பைக் காட்டும் நிலப்படம்-அட்லாசு/atlas நிலப்படத்தொகுதி [(ஆட்.), (புவி.), (மனை.)] எனக் குறிக்கப் பெறுகின்றன. ஐந்திணைப் பாகுபாட்டுச் சிறப்புடைய தமிழர் நிலவகைகளைத் திணை (௧௮)என்று சொல்வதுதான் எளிமையாயும் மரபாயும அமையும். ஐந்திணைப் படங்களைக் குறிப்பதால் திணைப்படம் என்பதே பொருத்தமாக அமையும். திணைப்படத்தைக் கோளவடிவில் காட்டும் கோள வடிவிலான குளோபு-globe…