குறியேற்றத்தின் மூலம் தமிழுக்குக் கேடுசெய்வோருக்கு நாக.இளங்கோவன் கண்டனம்!

கணித்தமிழ் ஆர்வலரின் செவ்வி!  தமிழார்வம் மிக்க கணிப்பொறியாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் நாக.இளங்கோவன். கால்நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழ்நாட்டிலும் அயல்நாடுகளிலும் கணிணி வல்லுநராகப் பணியாற்றுபவர். 1995 முதல் தமிழ் இணையத்தில் கருத்து செலுத்தி வருபவர்.   2009-ல் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகள் நடைபெற்ற பொழுது பொங்கி எழுந்தவர்களுள் இவரும் ஒருவர். நடக்க இருந்த தமிழ்ச் சிதைப்பைக் கட்டுரை மூலமாக மட்டுமல்லாமல் தமிழ் எழுத்துக் காப்பியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகச் செயல்பட்டு அதன் எதிர்ப்புப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  ஒருங்குகுறியில் 2010 இல் நிகழ…

பேராசிரியர் இரா.இளவரசு நினைவேந்தல்

பேராசிரியர் இரா.இளவரசு  அவர்களின்  நினைவேந்தல் நிகழ்ச்சி தென்மொழி  இயக்கம் சார்பில் சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க் களத்தில் தி.பி.2046 கும்பம் 10 ஞாயிறு (22-02-2015)அன்று மாலை 3.00 மணியளவில்  நடைபெற்றது. முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையில் பேராசிரியர் பொற்கோ மறைந்த இளவரசு அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். பேராசிரியர் அரசேந்திரன், முனைவர் இரா .கு.ஆல்துரை, முனைவர் அரணமுறுவல், திருவினர் கி. குணத்தொகையன், அன்புவாணன் வெற்றிச்செல்வி, வைகறைவாணன், இரா.செம்மல், வழக்கறிஞர் பாவேந்தன், தமிழ் மண் பதிப்பகம் கோ.இளவழகன் ஆகியோரும் திருவாட்டியர் இறை.பொற்கொடி, தழல் தேன்மொழி, மரு. அன்பு (பேரா.இளவரசு…

இலக்கிய வீதியின் “மறுவாசிப்பில் ஆர்.வி.”

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இந்த மாதம் இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் , மாசி 15, 2046 / 27.02.2015  மாலை 06.30 மணிக்கு, “மறு வாசிப்பில் ஆர்.வி.” உறவும் , நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்..   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்  

கரும்பில் தொட்டில் கட்டும் விந்தையான பழக்கம்

கரும்பில் தொட்டில் கட்டும் விந்தையான பழக்கம்   தேவதானப்பட்டிப் பகுதியில் கரும்பில் தொட்டில் கட்டும் விந்தையான பழக்கம் உள்ளது.   மக்கட்பேறு இல்லை என்றால் நாட்டுப்புறத் தெய்வத்தினிடம் வேண்டிக்கொண்டு கோயிலுக்குச் சென்று தொட்டில் கட்டி வருவது வழக்கம். இப்பகுதியில் உள்ள அம்மன்கோயில், மதுரைவீரன், கருப்பராயன் போன்ற கோயில்களில் தொட்டில் கட்டுதல் போற்றுதலுக்குரிய வழிபாடாகக் கருதப்படுகிறது.   தொட்டில் கட்டுதல் என்பது வெள்ளைத்துணியில் மஞ்சள் தடவி, கல்லை உள்ளே வைத்துக் கோயிலில் உள்ள வேம்பு மற்றும் அரச மரத்தின் கிளையில் குழந்தைப்பேறு வேண்டிக் கட்டுதலாகும்.  …

காமாட்சியம்மன் கோவிலில் மின்திருட்டு

தேவதானப்பட்டி அருள்மிகு காமாட்சியம்மன்கோவிலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் திருட்டு! செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க இறையன்பர்கள் வலியுறுத்தல்    தேவதானப்பட்டி அருகே உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதற்குத் தனியாகச் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தேவதானப்பட்டி காமாட்சியம்மன்கோவிலில் தற்பொழுது திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் மின்அலங்காரம், கோயிலைச்சுற்றியுள்ள கடைகளுக்கு மின்சாரம் கொக்கி மூலம் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் கொக்கி போட்டுதிருடப்படுகிறது. மேலும் இவ்வாறு திருடப்படும் மின்சாரத்தில் இருந்து…

கலைச்சொல் தெளிவோம்! 77. கொண்மூ-Cirrus

77. கொண்மூ-Cirrus  கொண்மூ ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ (புறநானூறு : 35.17) நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, (குறிஞ்சிப்பாட்டு : 50) மா மலை அணைந்த கொண்மூப் போலவும், (பட்டினப்பாலை : 95) இமிழ் பெயல்தலைஇய இனப்பலக் கொண்மூ (அகநானூறு : 68.15) பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ (அகநானூறு : 125.9) உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல (கலித்தொகை : 104.16) முதலிய அடிகளில் வருவதுபோல் 17 இடங்களில் கொண்மூ குறிக்கப்படுகிறது. முதலில் இச்சொல் பொதுவான பெயராக…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 12– ஆ.வெ.முல்லை நிலவழகன்

  காட்சி – 12 அங்கம்    :     பூங்குயில்,  அருண் மொழி  இடம்      :     அருண்மொழி இல்லம்  நிலைமை  :     (துயிலும் கணவனின் பாதங்களைத் தொட்டுவணங்கி எழுப்பிய பின்) உயிரே! அவனென அவள் எண்ணி உணர்வுப் பொங்க அழைக்கின்றாள் பூங்:            காலைக் கதிரவனே! சோலைக் குழல் வண்டே! நாளை முடிப்பதென வேளை வோட்டாமல் தூயவண்ணனென நீயே எழுந்துவிடு! அருண்:    காலை அலர் மலரே சோலை மலர்த்தேனே! காலைநான் எழவோ காலைத் தட்டுகின்றாய்? கனியின் சுவையாகக் கனிந்தே அழைக்கின்றாய்! மணியின் ஒலியாக இனிதே மொழிகின்றாய்! கட்டாய்…

1 2 10