இலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்!

மக்கள் உள்ளங்களில் வாழும் தலைவர் இலீ புகழ் ஓங்கட்டும்!   நம் நாட்டு அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கும் பொழுது அத் தொகுதியைச் சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகின்றேன் என்பார்கள். இவ்வாறு எடுத்துக்காட்டாகக் கூறும் அளவிற்குச் சிங்கப்பூரைச் செதுக்கியவர்தான் மக்கள் தலைவர் இலீ குவான் இயூ(lee-kuan-yew: 1923-2015). தமிழ், தமிழர், தமிழ் ஈழம் மீது பரிவு கொண்டு செயல்பட்ட மாபெரும் தலைவர் இலீ மறைந்தது உலகெங்கும் உள்ள தமிழர்க்கு அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவே உள்ளது. தமிழீழ விடுதலை நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடி மகிழும்வரை காலன் விட்டு வைத்திருக்கலாம்….

கலைச்சொல் தெளிவோம்! 128 : ஞாங்கர்-Lance/javelin

ஞாங்கர் (14) என்னும் சொல், ஞாங்கர் வினைப்பூண் டெண்மணி வீழ்ந்தன (நற்றிணை : 171.8) என்னும் அடியில் வேலாயுதத்தைக் குறிக்கிறது. மீனியலில் lance மீனெறிவேல் எனப்படுகிறது. அவ்வாறில்லாமல் ஞாங்கர் என ஒற்றைச் சொல்லில் குறிக்கலாம். ஞாங்கர்-Lance/javelin – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 127: ஞமன்-pointer

 பாயிண்ட்டர்/pointer என்பதற்குச் சுட்டுமுள், சுட்டிக்காட்டி, குறிமுள், காட்டி, சுட்டி, எனப் பலவாறாக ஆட்சியியல், வேதியியல், பொறிநுட்பவியல், மனையியல், தகவல் நுட்பவியல், கணக்கியல், இயற்பியல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.  தெரிகோன் ஞமன்போல (புறநானூறு 6. 9) எனத் துலாக் கோலின் முள்முனை கூறப்பட்டுள்ளது. மேலே குறித்தவற்றைவிடச் சங்கச்சொல் சிறப்பாகவே உள்ளது.   ஞமன்-pointer – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 126 : கொழு-awl

நாஞ்சில்ஆடிய கொழுவழிமருங்கின் (பதிற்றுப்பத்து 58.17) என வருவது போன்று கொழு(65) என்னும் சொல் கொழுப்பு, செழிப்பு, கலப்பையில் பதிக்கும் இரும்புஆணி, துளையிடும் பெரியஊசி முதலான பொருள்களில் கையாளப்பட்டுள்ளது. துளையிடும் பெரிய ஊசி என்னும் பொருளில், கொழுச்சென்ற வழித் துன்னூசி யினிது செல்லுமாறுபோல (தொல். பாயி. உரை). எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்பொழுது ஆ(வ்)ல்/ awl-தமரூசி (தொல்.,பொறி.,கல்.) என்றும் கூரூசி(தொல்.) என்றும் சொல்லப்படுகின்றது. சங்கச் சொல்லாகிய கொழு என்பதே பொருத்தமான சொல்லாக அமைகின்றது.  கொழு-awl – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 125 : இவரி/இவருநர்-jockey

சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் (நற்றிணை 67.1) குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல், உந்தி (மதுரைக்காஞ்சி 245) என்னும் இடங்களில் செல்லுதல், செலுத்துதல் என்னும் பொருள்களில் இவர்தல் கையாளப்பட்டுள்ளது. குதிரையேறிச் செலுத்துபவரை இவருநர் எனலாம். பொறியியல், இயற்பியல் முதலான அறிவியல் துறைகளில் இவரி எனச் சொல்லலாம். இவரி/இவருநர்-jockey – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 124 : அதரி-valve

 வால்வு (valve) என்பதற்குக் கால்நடையியலிலும் மீனியலிலும் தடுக்கிதழ் என்றும், வேளாணியலில் தடுக்கிதழ், ஒருபாற்கடத்தி என இருவகையாகவும், பொறிநுட்பவியலில் தடுக்கிதழ், அடைப்பிதழ், ஓரதர், கவாடம் என நால்வகையாகவும், மருத்துவயியலில் ஒருவழி மடல், கதவம் தடுக்கிதழ், கவாடம் என நால்வகையாகவும், மனையியலில் ஓரதர், வேதியியலில் கவாடம், வால்வு என இருவகையாகவும் பயன்படுத்துகின்றனர்.  அதர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 43 இடங்களில் வருகின்றது. பெரும்பாலும் வாயில் என்னும் பொருளே கையாளப்படுகின்றது. ஆனினம் கலித்த அதர்பல கடந்து (புறம் 138:1) மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் (நற்றிணை :…

செந்தமிழ்க்கோயில் அமைக்க உதவி வேண்டல்!

அன்புடையீர் வணக்கம்!!!  தமிழ்நாட்டில் தமிழ் தழைத்தோங்கி இருந்த நிலை மாறி இன்று தமிழ் தலை தொங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.   கண்ணுதற் பெருங்கடவுளும், மூவிரு முகங்கள் கொண்ட கந்தவேளும் தலைமை தாங்கி வளர்த்த தமிழுக்கு இந்த நிலை… அதிலும் அந்த பரம்பொருளை வழிபடும் கோயில்களில் தமிழுக்கு இடமில்லை… என்ன அவலம்!!!!  கேட்டால் நீங்கள் வேண்டுமானால் தமிழ் வழிபாட்டிற்கென்று தனியே ஒரு கோயில் கட்டிக்கொள்ளுங்கள் என்கிறது தமிழ் எதிர்பாளர்களின் குரல்…  அப்படிச் செய்தால்தான் என்ன? தமிழன் எழுச்சி கொண்டு இதனை செய்து முடித்தால் தமிழ் வழிபாட்டிற்கு எதிர்க்குரல்தான் இனியும் எழுந்திடுமோ??…

கலைச்சொல் தெளிவோம்! 123. தேரை வெருளி-Bufonophobia

தேரை(10) என்னும் உயிரினமும் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். தேரைஅல்லது தேரையினம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் தேரை வெருளி-Bufonophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

அடங்கா வெறி! – தங்கர்பச்சான்

 எங்கே போகிறது மன்பதை?   பெண்களை இழிவுப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. பண்பாட்டில் சிக்குண்டு எல்லா வற்றுக்கும் பலியாவது பெண்கள் சமுதாயம்தான். தவறுகளை யார் செய்தாலும் எல்லாமும் அவர்கள் தலையிலேயே விழும்.   செய்தித்தாள்களில் நாள்தோறும் தவறாமல் இடம்பெறும் ஒரே செய்தி பாலியல் குற்றங்களும், வன்முறைகளும்தான். படிக்கவே பதறுகிற செய்திகள், காதில் கேட்கவே பிடிக்காத அருவருப்பான செயல்பாடுகள். இவை எல்லாம் சமுதாயத்தை எதிர்காலத்தில் எங்கே போய்க் கொண்டுவிடும் எனத் தெரியவே இல்லை.   நகரம், சிற்றூர் என்றில்லாமல் தொடரும் இந்தக் கொடுஞ்செயல்கள்,…

கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் : Haptephobia, Aphephobia & Chiraptophobia

கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் தீண்ட(3), தீண்டல்(1), தீண்டலின்(4), தீண்டவர்(1), தீண்டற்கு(1), தீண்டா(1), தீண்டாது(1), தீண்டி(21), தீண்டிய(3), தீண்டு(1)தீண்டு்ம் (1), தொடு(10), தொடுதல்(2), எனப் பல சொற்கள் தொடுதலைக்குறிக்கும் வகையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. பிறரால் தொடப்படுவது குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் தீண்டுகை வெருளி-Haptophobia/Haphephobia/ Haptephobia அல்லது தொடுகை வெருளி–Aphephobia/ Aphenphosmphobia அல்லது தீண்டல் வெருளி-Chiraptophobia எனப்பெறும். [தீண்டு > தீண்டுகை+ வெருளி; தொடு> தொடுகை+ வெருளி] – இலக்குவனார் திருவள்ளுவன்

1 2 14