தமிழ்மொழி பேசும் உலக உறவுகளே! நீங்களே சொல்லுங்களேன்?

  தமிழ் இனத்தின் தாய் – ஓர் உகத்தின் தாய், ஏன் தனிச்சிங்கள பெளத்த பேரினவாதியின் கால்களில் விழ வேண்டும்? அவன் சப்பாத்து கால்களுக்குள் ஏன் முகம் புதைத்து தன் குறைகள் சொல்லி அழ வேண்டும்?   இந்த ஒளிப்படத்தில் உள்ள சக்தியற்ற-பயனற்றவர்களால் தானே எமது இனத்துக்கு இந்த இழுக்கு! வெட்கம்! கேடு! அவமானம்! பழிப்புரை(சாபம்) எல்லாம்! எல்லாமே! ஒளிப்படத்தை நன்றே அவதானியுங்கள்.  ஈழத்தாயவள், சிங்களக் கொலைவெறி வண்கணாரின்(பாசிட்டுகளின் கால்களில் விழ முன்னே, பதறி ஓடோடிச்சென்று கைத்தாங்கலாகத் தூக்கி தாங்கிப்பிடித்துத் தேற்றாமல், நிகழ்கால நீலன்…

திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பு மறுபதிப்பு வெளியீட்டு விழா

   என் தாத்தா திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் 1958ஆம் ஆண்டு வெளியிட்ட திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பை மறுபதிப்பு செய்துள்ளனர். இன்று பங்குனி 14, 2046 / மார்ச்சு 29, 2015 வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. வருக! வருக! அன்புடன் புனிதா ஏகாம்பரம்

நிகழ்பதிவித் தகவலால் நீர்ப்பூசுணை(தர்ப்பூசணி) விற்பனை மந்தம்

நிகழ்பதிவித் தகவலால் நீர்ப்பூசுணை(தர்ப்பூசணி) விற்பனை மந்தம் தேவதானப்பட்டி பகுதியில் கோடைக் காலம் தொடங்கியவுடன் கம்பங்கூழ், இளநீர், மோர், நீர்ப்பூசுணை, நுங்கு போன்றவற்றை வாங்கிக் கோடைக்காலத்தைத் தாங்கத் தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் நிகழ்பதிவி(WhatsApp) மூலம் நீர்ப்பூசுணையில் கலப்படம் என்று வந்த செய்தியை அடுத்து இப்பொழுது நீர்ப்பூசுணை வாங்குவதைப் பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள். நீர்ப்பூசுணையில் எரித்ரோசின் பி எனும் சிவப்பு நிறமியை ஊசி வழியாக உட்செலுத்துவதன் மூலம் அதன் நிறம் மாறுகிறது. இதனை உண்பவர்களுக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. என்பதுதான் அந்தத் தகவல். வணிகர்கள் சிலர், நீர்ப்பூசுணைப்…

வெங்கதிர் நிலவும் வெள்நள் ஆறும் – உருத்ரா

சொல் காப்பியம் : அன்றும் இன்றும் “ஞெமலி மகிழ்தரு” என்ற சொல்லை ஆக்கி இச்செய்யுளை நான் எழுதியமைக்கு 01.12.2014 அன்று ஒரு நடு இரவில் படித்த “அகநானூற்றுப்பாடல்” (மணிமிடைபவளம்)தான் கரு. அதில் “மகிழ்” என்ற சொல் நாய் குரைத்தலை குறித்தது.கூரிய பற்களை உடைய நாய் “மகிழ”த் (குரைக்க) தொடங்கியதைப் புலவர் வெகு நுட்பத்துடன் எழுதியிருந்தார். அப்போது தான் என் ஐயம் கூட தீர்ந்தது.”கூரிய பற்கள் போல் இதழ்கள் கொண்ட பூவுக்கு “மகிழம்பூ” எனப் பெயர் ஏன் வந்தது என்று தெரிந்து கொண்டேன்.சொல் பூவிலிருந்து நாயின் பற்களுக்குத்…

நாவி சந்திப்பிழை திருத்தி

வணக்கம். நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் முதல் சொற்பிழை திருத்தி. ஊடகத்துறையில் இருக்கும் உங்களுக்குப் பயன்படலாம் என்று அறியத் தருகிறேன்.   வாணி – http://vaani.neechalkaran.com/ பயனர் கையேடு http://vaani.neechalkaran.com/help.aspx

தமிழ் அன்னை- – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

தமிழ் அன்னை அன்புருவான தமிழ் அன்னை – மொழி  அரசியான தமிழ் அன்னை  இன்பம் அளிக்கும் தமிழ் அன்னை – எங்கள் இன்னுயிரான தமிழ் அன்னை  ஆறுகள் ஊறும் மலை வளர்த்தாள் –  இயல்  அழகு சொட்டும் பசு வளர்த்தாள்  வீறுய் மிகுந்த படை வளர்த்தாள்  – ஞான  வித்தகர் போற்றும் கலை வளர்த்தாள்.   – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

இடித்தெழும் கவிதைக் கீற்று! – சந்தர் சுப்பிரமணியன்

உள்ள வெள்ளம்   ஊற்றென உளத்துள் தோன்றும் .. உணர்வுகள் தொண்டை சேருங் காற்றினை உதறச் செய்து .. கவிதையாய் உதட்டுக் கீனும்; ஏற்புடைத் தரத்தில் உண்டா .. இலக்கணம் சரியா என்று சாற்றிடும் போதென் நெஞ்சம் .. சரிவரப் பார்ப்ப தில்லை (1) மீட்டிடின் நீளும் நாதம் .. முதற்செவி சேரும் முன்னர் ஊட்டிடும் விரலி னூடே .. உணர்வினால் உள்ளம் சேர்ந்து காட்டுமோர் மோக மாயை, .. காண்கையில் மயங்கும் போது கூட்டியோ குறைத்தோ பாட்டைக் .. கொன்றிடல் இயல்பு தானோ?…

செந்தமிழ்தான் என் உயிர் மூச்சு! – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்

செந்தமிழ்தான் என் உயிர் மூச்சு! முத்தமிழ்ச் சங்கம் வளர்த்த மொழி முப்பெரு  வேந்தர் வளர்த்த மொழி மூப்பே இல்லா இளமை மொழி காப்பியமைந்து கொண்ட மொழி – தொல் காப்பியம்  கண்ட தொன்மை மொழி பரணி பாடிய பண்டை மொழி தரணி போற்றும்  தண்மொழி அகநானூறு தந்த அருமொழி புறநானூறு தந்த புனித மொழி வள்ளுவன் கம்பன் வளர்த்த மொழி  உள்ளம் கவர்ந்த உயர்ந்த மொழி வல்லினம் ,மெல்லினம் இடையினமும் இயல், இசை, நாடக முத்தமிழும் முதல், இடை, கடை என முச்சங்கம் உயிரெழுத்து , மெய்யெழுத்து…

கருகும் தென்னை மரங்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் மீண்டும் கருகும் தென்னை மரங்கள்  தேவதானப்பட்டிப் பகுதியில் மீண்டும் தென்னை மரங்கள் கருகுவதால் உழவர்கள் வேதனை அடைகின்றனர்.  தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டி, செங்குளத்துப்பட்டி, மஞ்சளாறு அணை, சில்வார்பட்டி, குள்ளப்புரம், கெங்குவார்பட்டி   முதலான பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழையின்மையால் அரசின் புள்ளிவிவரப்படி ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் கருகின. இதனால் உழவர்கள் தென்னை மரத்தை வெட்டி விட்டு அதனை வீட்டடி மனைகளாக மாற்றிவிட்டனர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் ஆறு, ஏரிகள், கிணறுகள்…

மாம்பூவில் நோய் தாக்குதல்- உழவர்கள் கவலை

      இந்தியாவின் தேசியப் பழமான மாம்பழம் தன்னுடைய மணத்தாலும் சுவையாலும் நம்மை மயக்க வல்லது. மாம்பழ உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் இந்தியா கிட்டத்தட்ட உலக உற்பத்தியில் பாதியை நிறைவு செய்கிறது.      சேலத்திற்கு அடுத்தபடியாகப் பெரியகுளம், போடி, தேவதானப்பட்டி பகுதியில் பல காணி பரப்பளவில் மாம்பழங்கள் பயிரிட்டு வருகின்றனர். மாங்காயிலிருந்து வடு, மாங்காய் வற்றல், மாம்பழம் எனப் பலவகை கிடைக்கிறது. தற்பொழுது பெய்த மழையால் மாந்தளிரில் பலவகையான பூச்சிகள் தாக்கியுள்ளன. தத்துப்பூச்சிகள், மாங்கொட்டைக் கூண்வண்டு, அசுவினி, செதில் பூச்சி, பூங்கொத்துப்…

சங்கரமூர்த்திபட்டியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு

சங்கரமூர்த்திபட்டிப் பகுதியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு   தேவதானப்பட்டி அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி பகுதியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது.   முதலக்கம்பட்டி அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி, குள்ளப்புரம், வைகைப்புதூர் பகுதிகளில் வைகை ஆற்றில் இருந்து ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட மின்பொறிகள் மூலம் தண்ணீரைத் திருடுகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் உடந்தையுடன் ஆற்றின் அருகே மின்இணைப்பு பெற்றுத் தண்ணீரை மின்பொறி மூலம் எடுக்கின்றனர். இவ்வாறாக எடுக்கப்படும் தண்ணீரை நீரூர்திகள், உழுவைகளில் நிரப்பி உணவகங்கள், வீடுகள். விடுதிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.   அரசு உழவர்களுக்கு விலையின்றி…

எழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க!

எழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க!     காலங்கள்தோறும் தமிழுக்குக் கேடு செய்வோர் இருந்துகொண்டுதான் உள்ளனர். ஆனால், இப்பொழுது இணைய வசதிகளையும் ஊடக வாய்ப்புகளையும்கொண்டு அழிப்புப்பணிகளை விரைவாகச் செய்து வருகின்றனர். தமிழ்க்காப்பு உணர்வாளர்களில் ஒரு சாரார் இவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைதி காக்கின்றனர். மற்றொரு சாரார் இதைப்பற்றிக் கவலைப்படாமல் வீர உரையாற்றினால் போதும் என வாளாஉள்ளனர். சிலரே எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு உலகத் தமிழன்பர்கள் அனைவரும் கிளர்ந்து எழுந்து உரிய நடவடிக்கைகள் எடுத்தாக…