இனி முழுக்க முழுக்க, மான மீட்புப்பரப்புரைகளே! வீரமணி சூளுரை

  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், இரண்டாம் நாளாகச் சித்திரை 13, 2046 / 26.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.  முதல் நாள் நிகழ்வில் கருத்தரங்குடன், கலை நிகழ்ச்சியாக புரட்சிக் கவிஞர் பாடல் களுடன் குயில்மொழி குழுவினரின் நடனம் பார்வையாளர்களின் கருத்துகளைக் கவர்ந்தன.   இரண்டாம் நாள் நிகழ்வாக வாழ்வியல் பண்பாட்டு மீட்டுருவாக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் அ.இராமசாமி தலைமையில் புதுவை மாநிலப் பகுத்தறிவாளர்கழகத் துணைத்தலைவர் மு.ந. நடராசன் வரவேற்றார். எழுத்தாளர்…

பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும்

  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், சித்திரை 12, 2046 / 25.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.   தமிழர்தம் வாழ்வில் பல்வேறு நிலைகளிலும் சமக்கிருதம் நுழைந்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது குறித்தும், அதை அடையாளம்கண்டு தகர்ப்பதன் மூலமே தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டைக் காத்து, தன்மதிப்பு வாழ்வாக நல வாழ்வாக வாழ முடியும் என்று விளக்குகின்ற வகையிலும் அறிஞர்பெருமக்களின் உரைகள் அமைந்தன. சமக்கிருதத்திற்கு எதிராகப் பல்வேறு காலக்கட்டங்களில் களம் கண்டு…

தமிழுக்கு அமுது தந்தவர்! – முனைவர் ம. இராசேந்திரன்

 சொல்லும் எழுத்தும் மொழிக்குத் தேவைதான். ஆனால், மொழிவாழ்வைத் தீர்மானிப்பது அவை மட்டும் அல்ல. பேசுகிறவர்களின் அதிகாரம் பேசப்படுகிற மொழியை வாழ வைக்கலாம்; ஆனால், அதிகாரம் நிலையானதன்று. அதிகாரம் மாறுகிறபோது மொழியின் வாழ்நிலையும் கேள்விக்குறியாகலாம். அப்படியென்றால் ஒரு மொழி வாழவும் வளரவும் அமுதூட்டுபவர்கள் யார்? ஒவ்வொரு காலத்திலும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் அதிகார உதவியின்றியும் மொழிவாழ அமுதூட்டி வருகிறார்கள். ஆயுட்காலத்தை நீட்டித்துத் தருகிறார்கள். காலம்தோறும் மொழியை இனிது ஆக்குகிறார்கள். “”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதியார். “”தமிழுக்கும் அமுதென்றுபேர்” என்றார்…

கலைச்சொல் தெளிவோம்! 155. மாலைமாற்று வெருளி-Aibohphobia; 156. மாப்பொருள் வெருளி-Carbophobia

கலைச்சொல் தெளிவோம்! 155. மாலைமாற்று வெருளி-Aibohphobia  ஒரு சொல்லைத் திருப்பிக் கடைசி எழுத்தில் இருந்து வாசித்தாலும் அதே சொல் வருதலை இருவழிச் சொல் என்பர். இதனை அவ்வாறு சொல்வதைவிடத் தமிழிலக்கணவியலில் உள்ள மாலைமாற்று என்னும் கலைச்சொல் பொருத்தமாக அமைகிறது. பிற மொழிகளில் அத்தகைய சொற்களைத்தான் பார்க்க முடியும். தமிழில் தொடர்களும் பாடல்களுமே உள்ளன. அத்தகைய பாடலுக்கு மாலை மாற்று எனப் பெயர். அதுவே இரு வழியாகவும் அமையும் சொல்லிற்கான பெயராக இங்குக் குறிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய இயல்பு மீறிய பேரச்சம் மாலைமாற்று வெருளி-Aibohphobia கலைச்சொல்…

கலைச்சொல் தெளிவோம்! 153. பெருவெளி வெருளி-agoraphobia

கலைச்சொல் தெளிவோம்! 153. பெருவெளி வெருளி-agoraphobia  மனைஅறிவியல், மருந்தியல், ஆகியவற்றில் agoraphobia திறந்தவெளி அச்சம் எனப் பயன்படுத்துகின்றனர். திறந்த வெளி என்பதை விடப் பெரு வெளி என்பதே பொருத்தம். திறந்த பெரு வெளியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் பெருவெளி வெருளி-agoraphobia கலைச்சொல் தெளிவோம்! 154. பேய் வெருளி-Phasmophobia/Spectrophobia  மாணா விரல வல் வாய்ப் பேஎய் (நற்றிணை : : 73: 2) ”பேஎய்க் கொளீஇயள்” இவள் எனப்படுதல் (குறுந்தொகை : : 263:5) பேஎய் அனையம், யாம்; சேய் பயந்தனமே. (ஐங்குறுநூறு…

கலைச்சொல் தெளிவோம்! 150. பூண்டு வெருளி-Alliumphobia; 1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia;152. மகவு வெருளி-Kiddophobia

கலைச்சொல் தெளிவோம்! 150. பூண்டு வெருளி-Alliumphobia பூண்டு(7) வகை பற்றி ஏற்படும் தேவையற்ற பேரச்சம் பூண்டு வெருளி-Alliumphobia   கலைச்சொல் தெளிவோம்!1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia  பெண்(18), பெண்கோள்(1), பெண்டிர்(63), பெண்டிரேம்(1), பெண்டினை(1), பெண்டு (18), பெண்மை(6) எனப் பெண் என்னும் சொல்லைப் புலவர்கள் 108 இடங்களில் கையாண்டுள்ளனர். பெண்களைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பெண் வெருளி-Gynephobia/Gynophobia கலைச்சொல் தெளிவோம்! 152. மகவு வெருளி-Kiddophobia குழவி என்னும் சொல் 41 இடங்களில் வந்திருந்தாலும், இளங்குழந்தையரையே பெரிதும் குறிப்பதால் பொதுவான சொல்லாகக்…

பார்ட்லி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மொழி விழா

சிங்கப்பூர்: தமிழ் மொழி விழாவையொட்டி பார்ட்லி உயர்நிலைப் பள்ளி “தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்”- நாம் கற்றதும்,பெற்றதும் என்ற நிகழ்ச்சியை சித்திரை 11, 2046 / ஏப்பிரல் 24, 2015 அன்றுநடத்தியது. அந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேசியக் கல்வி நிலையத்தில் தமிழ் ஆசிரியர்கள் எப்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் என்றும் கணினிகளில் தமிழின் அறிமுகத்தைப் பற்றியும் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. மறைந்த திரு நா.கோவிந்தசாமி, இணையத்திற்கு தமிழை அறிமுகப்படுத்தியது நினைவுகூரப்பட்டது. [மென்பொருட்ளைக் கொண்டு தமிழ் கற்றல், கற்பித்தல் எப்படி என்பதைப் பற்றி மாணவர்கள் உரையாற்றுகின்றனர்.]…

தொல்காப்பியர் சிலை – கால்கோள்விழா- காப்பிக்காடு ஊரில்

சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொல்காப்பியர் ஆய்வு மையம் அறக்கட்டளை அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கம் தமிழ் அமைப்புகள் தமிழாலயம், சாமித்தோப்பு, குமரிமாவட்டம் தலைமை: கு.பச்சைமால் முன்தொகை அளிப்பவர் : வள்ளல் கு.வெள்ளைச்சாமி தொடக்கவுரை: புலவர் த.சுந்தரராசன் சிறப்புரை: பேராசிரியர் ஆறு அழகப்பன் பேராசிரியர் பொன்னவைக்கோ இலக்குவனார் திருவள்ளுவன்  

புழுதிவாக்கம் தமிழ்இலக்கிய மன்றத்தின் மே நாள்

சித்திரை 20, 2046 / மே 03, 2015 புலவர் செம்பியன் நிலவழகன் தலைமையில் கவியரங்கம் புலவர்  கோ.பார்த்தசாரதி நடுவராக உள்ள பட்டிமன்றம் அழைக்கிறார் த.மகாராசன்

ஒலிபெயர்ப்பு தொடர்பான முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடல்

    தமிழ்ப்பின்னங்கள், சிறப்புக்குறியீடுகள் ஆகியவற்றின் ஒலிபெயர்ப்பு, தொடர்பான முன்மொழிவுகள்   பற்றிய கலந்துரையாடல் கூட்டம் தமிழக அரசின் சார்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எப்.50 கூடம், முதன்மைக் கட்டடம், சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம், சென்னை 600 005 இல் சித்திரை 16, 2046 / ஏப்பிரல் 29,2016 காலை 10.30 முதல் நடைபெற உள்ளது. இதில் பங்குபெற்று கருத்து தெரிவிக்க விரும்புவோர், தங்கள் கருத்துகளையும் பங்கேற்கும் விழைவையும் மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டும்.   அல்லது ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் மணிகண்டன் (044 2844 9537), முனைவர் பாலாசி…

நேபாளத்தில் சீற்றமடா ! – சி. செயபாரதன், கனடா

  இமயத் தொட்டிலில் ஆட்டமடா !  இயற்கை அன்னை சீற்றமடா !  பூமாதேவி சற்று தோள சைத்தாள் !  பொத்தென வீழும் மாளிகைகள்  பொடி ஆயின குடி வீடுகள் !  செத்து மாண்டவர் எத்தனை பேர் ?  இமைப் பொழுதில் எல்லாம் இழந்தவர் எத்தனை பேர் ?  கட்டிய இல்லம், சேமித்த செல்வம்  பெட்டி, படுக்கை, உடுப்பு,  உணவெல்லாம் மண்ணாய்ப் போச்சு !  அந்தோ !  வேனிற் கால வாடைக் காற்றில், அழும் சேய்க ளோடு  தெரு மேடையில் தூங்குகிறார் !  வானமே கூரை…

1 2 9