நல்வழியின் சொல்வழியே… சந்தர் சுப்பிரமணியன்

நம்மை அணுகி நலங்காப்போம் நாமென்றே நிம்மதியாய் நிற்கும் நிழற்சுற்றம் – வெம்மைவரின் கோதுவேர்த் தாகமறக் கொட்டுமழை போன்றதுவே தீதொழிய நன்மை செயல் செயற்கண் நுணங்கித் திறஞ்சேர்த்துப் பின்னர் அயல்நின்றாங்(கு) ஆர்குறைகள் ஆயும் – இயல்பதனைத் தட்டாதார் வெல்வார், தகவிலார்க்(கு) ஏதுசெயம் பட்டாங்கில் உள்ள படி படிக்கும் பொருளுணர்ந்து பட்டறிவோ டுள்ளம் துடிக்குநிலை கொண்டோர் தொழிற்செய்! – விடுத்ததனை அஞ்சுமனம் கொண்டே அறிவில்லா மூடராய்த் துஞ்சுவதோ மாந்தர் தொழில் தொழிற்சிறக்கப் போராடித் தொல்லைபல பெற்றும் உழைப்பினுல கென்றும் உதவும் – குழியடிகாண் கல்லை உடைக்கின்நீர் காட்டும்…

பேரின்பம் நல்குமாம் தாய்மொழி – கவிக்கோ ஞானச்செல்வன்

  தாய்மொழி என்பது சிந்தனைக்கோ ஊற்றுக்கண் சீர்மைக்கோ நாற்றங்கால் வந்தனைக்கோ சீர்தெய்வம் வாழ்க்கைக்கோ உயிர்நாடி முந்திவரும் நல்லறிவு மூளுகின்ற மெய்யுணர்வு வந்துலவும் பூந்தென்றல் வழிகாட்டும் ஒளிவிளக்கு தாய்மொழி என்பது தாய்முலைப் பாலதாம் ஊட்டம்மிகத் தருவதாம் உரமூட்டும் வரமதாம் வலிமையைச் சேர்ப்பதாம் வல்லமை வளர்ப்பதாம் பிணியெலாம் அகற்றுமாம் பேரின்பம் நல்குமாம் நந்தமிழ் வண்டமிழ் செந்தமிழ் பைந்தமிழ் இன்தமிழ் பொன்தமிழ் சொற்றமிழ் நற்றமிழ் சுகத்தமிழ் அகத்தமிழ் சங்கத்தமிழ் தங்கத்தமிழ் பொங்குதமிழ் தங்குதமிழ் கன்னல்தமிழ் கட்டித்தமிழ்! – கவிக்கோ ஞானச்செல்வன்

தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு

அன்பான தோழருக்கு வணக்கம்!  சிதம்பரத்தில் வரும் பங்குனி 24, 2046 / ஏப்பிரல் 7 செவ்வாய் அன்று நடைபெறவுள்ள “தமிழ்த்தேசச் சூழலியல் மாநாட்டில்” கலந்து கொள்ளவும், மாநாட்டு அழைப்பிதழை தங்கள் நண்பர்கள், சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்ளவும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்! தங்கள் முகநூல் பக்கங்களில், மாநாடு குறித்துத் தாங்கள் எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்!  நன்றி! தோழமையுடன், க.அருணபாரதி தலைமைச் செயற்குழு உறுப்பினர், பேசி:  9841949462 தலைமைச் செயலகம், தமிழ்த் தேசியப் பேரியக்கம்  பேசி: 7667077075, 9047162164 ஊடகம்: www.kannotam.com இணையம்: tamizhdesiyam.com