அரைகுறை காப்பீட்டுத்திட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்

     பொதுமக்கள் நன்மைக்காகத் தமிழக அரசு ‘தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெறக் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் “இத்திட்டத்தில் பயன்பெறக் குடும்ப ஆண்டு வருமானம் உரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு உரூ. 1 இலட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உரூ. 4 இலட்சம் உரூபாய் வரை சிகிச்சை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில நோய்களுக்கு…

இன அழிப்பில் நேற்று ஈழம்! இன்று பருமா! நாளை??? – செந்தமிழ்க் குமரன் & செந்தமிழினி பிரபாகரன்

  மரித்துப்போனதா மானுடம் ? சிங்கள இனவாதப் பௌத்த வெறியர்களால் தமிழ் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது அமைதி காத்த அதே பன்னாட்டு மன்பதை, இன்று பருமாவில் பருமிய இனவாதப் பௌத்த வெறியர்களால் கொல்லப்படும் உரோகிங்யோ இன மக்களைக் காக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை ! ஒரு தனித்த தேசிய இனமாகவும் நிலப்பரப்பையும் கொண்டிருந்த ஈழத் தமிழர்களையே கண்டுகொள்ளாத இந்த உலகம் அப்பாவி சிறுபான்மை உரோகிங்கோ இன இசுலாமியர்களையா கண்டுகொள்ளப்போகிறது ? தூய இனவாதம் பேசும் பருமியப் பௌத்தர்கள் அம்மண்ணின் சிறுபான்மை உரோகிங்கோ இசுலாமியர்களை வந்தேறிகள்…

ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் மீண்டும் பணியாற்றும் கொடுமை!

  தேவதானப்பட்டிப் பகுதியில் ஊழல் ஒழிப்புக் காவலரால் கைது செய்யப்பட்டவர்கள் வழக்கு முடியும் முன்பே, மீண்டும் அதே அலுவலகத்தில் பணிபுரியும் சட்ட முரணான நடைமுறை உள்ளது.   தேவதானப்பட்டி, தேனி மாவட்டத்தின் பிறபகுதிகளில் வருமான வரித்துறை, வணிக வரித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை எனப் பல அலுவலகங்களில் தங்களுடைய வேலைகள் சீக்கிரம் முடிக்கவேண்டும் எனச் சிலர் இடைத்தரகர்கள் மூலம் கொடுக்கவேண்டியவற்றைக் கொடுத்துத் தங்கள் வேலையைச் சீக்கிரம் முடிக்கின்றனர். சிலர் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்துக் கையூட்டு கொடுத்துத் தங்களுக்கு வேண்டிய தொழிற்சாலை உரிமம், நிலுவைத்தொகை,…

தேவதானப்பட்டியில் பொதுவுடைமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    தேவதானப்பட்டியில் தனியார் நிறுவனத்தைக் கண்டித்துப் பொதுவுடைமைக் கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம்   தேவதானப்பட்டியில் தனியார் நிறுவனத்தைக் கண்டித்துப் பொதுவுடைமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் இலாசர் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.   திண்டுக்கலில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை ஆந்திராவைச்சேர்ந்த தனியார் நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு போதிய நிதியில்லாததால்…

தமிழ் தேவ தேவ மொழி

வடமொழி தேவமொழியென்னும் காலம் மலையேறிவிட்டது. தமிழ் வடமொழிக்கும் மூலமாதலால் வடமொழியைத் தேவமொழியெனின் தமிழைத் தேவ தேவ மொழியெனல் வேண்டும். – மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர், தமிழ் இலக்கிய வரலாறு : பக்கம் 301

தமிழர் தம்முடைய பண்புகளிலும் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர் – பேராசிரியர் சு. வித்யானந்தன்

  தமிழர் நாகரிகத்தைப் பற்றிப் பல அறிஞர் கொண்ட புதுமையான கருத்துகள் வியப்பைத் தருவனவாகும். மிகப் பழைய காலத்திலும் திராவிடர்(தமிழர்) நாகரிகம் ஆரியர் நாகரிகத்துடன் கலந்திருந்தது எனக் கொண்டு அதற்குச் சான்று காட்ட முயன்றனர் இவர். பார்ப்பனரின் ஆதிக்கத்தனால் திராவிடருக்கு(தமிழர்) உரிய பண்பாடு ஆரியருக்குரிய பண்பாட்டோடு தொடர்பு படுத்தப்பட்டது. இக்காரணத்தால் மிகவும் பழைய தென்னாட்டு நாகரிகத்தை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமாகிவிட்டது. எனினும் பழங்காலத்தில் தென்னாட்டவரின் பண்பாடு ஆரியக் கலப்பு அற்றிருந்ததென ஓரளவுக்கு நிறுவலாம். இப்பொழுது கூடத் தமிழ் நாட்டிலும் ஈழத்தின் வடக்குப் பகுதியிலும் கிழக்குப்…

வெல்க பிறர் நெஞ்சு! – சேலம்பாலன்

இன்தமிழின் நற்கவிஞர் இலக்குவன் திருவள்ளுவன்(ர்)  அன்புடைத் தமிழ்ப்பணிக்கே அடியேனின் வாழ்த்துகள்! தங்கள் பணியெல்லாம் தாய்த்தமிழ் நற்பணியாய் எங்கெங்கும் உள்ளோர் இதயத்தால்-பொங்கிமகிழ் வெய்திடவே எந்நாளும் ஏற்றமுறப் பொங்கட்டும்! நெய்திடுக! வெல்கபிறர் நெஞ்சு! என்றும்தமிழ் அன்புடன் கவிமாமணி சேலம்பாலன், ஈரோடு

தமிழியம் காக்கும் ஆய்தம் இலக்குவனார் திருவள்ளுவன் – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தமிழ்மொழி தமிழினம் தமிழ்நிலம் உயர்வே தம்முயிர் மூச்செனும் திருவள்ளுவன் – செந் தமிழைப் போல தொன்மை மிகுந்த தொண்டறம் செய்யும் திருவள்ளுவன் வள்ளுவம் வழியில் வாழ்வினை ஏற்று வாழு கின்ற திருவள்ளுவன் – திரு வள்ளுவன் குறளை வாழ்வியல் நெறியால் வாழ்ந்து சிறக்கும் திருவள்ளுவன் ஆக்கப் பணிகளை ஆய்ந்தே செய்யும் அன்பர் அறிஞர் திருவள்ளுவன் – தமிழ் நோக்கம் ஒன்றே தம்பணி என்று தளரா துழைக்கும் திருவள்ளுவன் எளியர் தூயர் எப்பணி யாகிலும் எழிலாய் செய்யும் திருவள்ளுவன் – தமிழ்ப் புலியர் வலியர் புடவி…

கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா , சென்னை

    கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா   சென்னை தியாகராயநகர் வாணி மகாலில் வரும் ஆனி 12, 2046 / சூன் 27ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிகழவிருக்கிறது.  கவிதைஉறவு அன்பர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரண்டு வந்து கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறேன். ஏர்வாடி இராதாகிருட்டிணன்

1 2 11