அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 7 தொடர்ச்சி – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி)   தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 7 தொடர்ச்சி (புத்தக வெளியீட்டு முயற்சி-3)   ஒரு புத்தகத்தை உண்மையான ஆர்வத்துடனும் ஆய்வு நோக்கத்துடனும் அணுகுகிறவர்களுக்கு நுழைவாயில் இரண்டு இடங்களில்: பொருளடக்கத்தில் (Table of Contents) + சொற்களைத் தேடும் குறிப்புப் பட்டியலில் (Index). படிக்கிறவர்களுக்குப் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றித் தெரியாது, இல்லையா, அவர்களுக்கு உதவி செய்யத்தான் இந்த இரண்டும்.    எங்கள் வரலாற்று மொழியியல் பேராசிரியர் என்றி ஓஎனிகுசுவால்டு (Henry…

கலைச்சொல் தெளிவோம்! 162. வெகுள்பு வெருளி-Angrophobia; 163. வெள்ள வெருளி-Antlophobia

கலைச்சொல் 162. வெகுள்பு வெருளி-Angrophobia  வெகுண்டனள்(1), வெகுண்டு(6), வெகுள்(1)வெகுள்வர்(1), வெகுள்வாய்(1), வெகுள்வோள்(1), வெகுளி(4), வெகுளும்(1) என்பன வெகுள்வதை அடிப்படையாகக் கொண்ட சங்கச் சொற்கள் உள்ளன. வெகுளி பற்றிய இயல்பு மீறிய பேரச்சம் வெகுள்பு வெருளி–Angrophobia கலைச்சொல் 163. வெள்ள வெருளி-Antlophobia   சங்க இலக்கியங்களில் வெள்ளம் என்பதுசில இடங்களில் பேரெண்ணைக் குறிக்கும் வகையில் வந்துள்ளது. வெள்ளப்பெருக்கு குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் வெள்ள வெருளி-Antlophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 160. விலங்கு வெருளி-Zoophobia; 161. வீழ்பு வெருளி-Basophobia/Basiphobia

கலைச்சொல் 160. விலங்கு வெருளி-Zoophobia  விலங்கு என்றால் குறுக்காக அமைதல் என்று பொருள். மக்கள் இனம் போல் நேராக இல்லாமல் குறுக்காக அமைந்த உயிரினமே விலங்கு எனப்பட்டது. விலங்கு என்பதன் மூலப் பொருளிலும் விலங்கினம் என்னும் பொருளிலும் ஆக 38 இடங்களில் விலங்கு என்னும் சொல்லைச் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர். விலங்குகள், பறவைகள் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய விலங்கு வெருளி-Zoophobia கலைச்சொல்  161. வீழ்பு வெருளி-Basophobia/Basiphobia  சங்கப்பாடல்களில் விழு(85) சிறப்பினைக் குறித்தாலும், வீழ்வதையும் குறிக்கின்றது. விழுந்த மாரிப் பெருந் தண் சாரல…

கலைச்சொல் தெளிவோம்! 157. மெலிவுவெருளி-Blennophobia; 158.வம்பலர் வெருளி-Katikomindicaphobia;159. வானிலை வெருளி-Astraphobia

கலைச்சொல் தெளிவோம்! 157. மெலிவுவெருளி-Blennophobia/Myxophobia மெலி(1), மெலிக்கும்(2), மெலிகோல்(1), மெலிந்த(2), மெலிந்தார்(1), மெலிந்திட்ட(1), மெலிந்திலள் (1), மெலிந்து(9), மெலிய(3), மெலியர்(2), மெலியா(2), மெலியாது(1), மெலியும்(1), மெலிவு(5) என மெலிவு தொடர்பான சொற்கள் சங்கப் பாடல்களில் வருகின்றன. மெலிவு பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் மெலிவுவெருளி-Blennophobia/Myxophobia   கலைச்சொல் தெளிவோம்! 158. வம்பலர் வெருளி-Katikomindicaphobia  வம்பலன்(1), வம்பலர்(33), வம்ப மாக்கள், வம்ப மாந்தர் ஆகியன அயல்நாட்டில் இருந்து வந்து தங்கும் புதியோரைக் குறிக்கின்றது. அயல் வாழ்நர் (அயல்நாட்டில் இருந்து இங்கு வந்து வாழ்நர்) மீதான…

தொல்காப்பியர் கால்கோள் விழா – ஒளிப்படங்கள்

  குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!  

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 22 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி) காட்சி – 22 அங்கம்    :     கவிஞர், அன்பரசன் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (இன்றைய நாட்டு நிலையை நன்றே கவிஞர் செப்புகின்றார்) அன் :     கவிஞரே! கருத்துப் பெட்டகமே! புவியின் உண்மை நிலைதான் என்ன? கவி  :     இன்றைய நாட்டின் நிலைமைதனை நன்றே உரைக்கிறேன்! கேட்டு விடு! சிந்தனை எல்லாம் சோற்றிற்கே – நாளை செலவிட வேண்டும் இந்நாட்டில் – சோறு வெந்ததும் சோற்றுப் பந்திக்கே – நாம் முந்திட…

தமிழ் சொந்த மொழி ஆரியம் வந்த மொழி

தமிழ் சொந்த மொழி ஆரியம் வந்த மொழி “தமிழ் இந்நாட்டு மொழியே; ஆரியம் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் வழங்கிய மொழி பழந்தமிழே” என்று நிலை நாட்டுவதற்கு ‘நன்னெறி முருகன்’ என்று தம்மைக் கூறிக் கொள்ளும் சுனித்குமார் சாட்டர்சி இயற்றியுள்ள “வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூல் பெரிதும் துணைபுரிந்துள்ளது. – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்,   பழந்தமிழ்

காலப்பொறி படைத்தவர் தமிழரே!

காலப்பொறி படைத்தவர் தமிழரே!   “யாண்டும், மதியும், நாளும், கடிகையும்” எனவரும் சிலப்பதிகார அடிகளால் நாழிகையை அளவிடும் கருவி ‘கடிகை’ என அழைக்கப்பட்டதை அறியலாம். இக்கடிகை ‘ஆரம்’ போல் கழுத்தில் அணியப்பட்ட செய்தி “கடிகை ஆரம் கழுத்தில் மின்ன” என்னும் பெருங்கதை வரியால் அறியப்படுகிறது. இக்கடிகை ஆரமே இப்பொழுது கடிகாரம் எனப்படுகிறது.  மேலும், ‘கன்னல்’ என்னும் கருவி மூலம் நேரம் கணக்கிடப்பட்டதை முல்லைப்பாட்டின் மூலம் அறியலாம். நமது நாழிகை வட்டில் பிற நாட்டவராலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பொழுதைய, ஒன்றரை மணி நேர அளவுகொண்ட முழுத்தம் என்பதே…