தமிழ்ப்பாடல்களில் அயல்மொழி ஒலிகள் வரக்கூடா!

 ‘தமிழே’ என்பதை, “தமிழாவது வடவெழுத்தொரீஇ வந்த எழுத்தாளனே கட்டப்பட்ட வாக்கியக்கூறுகளும், இயலிசை நாடகங்களும் என்று சொல்லப்படா நின்ற மூன்று தமிழர்களும்’ என்று விளக்குகிறார். அரும்பதவுரைகாரர். தமிழ்பாடல்களில் ஜ, ஸ, ஹ, ஷ, க்ஷ என்ற வடமொழி ஒலிகள் வரலாகாது என்ற நெறி இசையுலகிலும் அன்று கடைப்பிடிக்கப்பட்டது என்பது இதிலிருந்து தெரிகிறது. எனவே ‘ஸம்போ மஹாதேவா’, ‘நாயகர் பக்ஷமடி’, ‘ஜங்கார ஸ்ருதி செய்குவாய்’ என்றெல்லாம் இன்று பாடுவது தமிழிசையிலக்கணத்துக்கு மாறானது என்பது புலனாகிறது. – முனைவர் இரா.திருமுருகன்: சிலப்பதிகாரம்: தமிழன் படைத்த கலைக்கருவூலம்: பக்கம். 23

தமிழ்ப் பெயர் தொலைத்த தமிழர்கள்

  இசைநாடகத் துறைக் கலைச்சொற்கள் அனைத்தும் இன்று வடமொழியாக்கப்பட்டு வழங்குகின்றன. உலகிலேயே முதலில் தோன்றிய மூத்த இசை என்று போற்றப்படும் இசை, தமிழன் கண்ட தமிழிசை, இன்று ‘கருநாடக சங்கீதம்’ என்று பெயர் மாறியுள்ளது. மதிவாணனார் செய்த ‘நாடகத்தமிழ்’ போன்ற நூல்களிற் கூறப்பட்ட தமிழன் கண்ட கூத்து முறை இன்று ‘பரதநாட்டியம்’ என்று பெயர் மாறியுள்ளது. பெயர் மாறிப்போன தன் பிள்ளைகளையே இன்றைய தமிழன், “யாரோ? இவர் யாரோ? என்ன பேரோ?” என்று மயங்கிப் பாராமுகமாய் இருந்து வருகிறான். – முனைவர் இரா.திருமுருகன்: சிலப்பதிகாரம்…

பிற நாடுகளில் யாழ்க் கருவி

  நமது நாட்டிற் போலவே வேறு பல நாடுகளிலும் யாழ்க்கருவி தெய்வமாகப் போற்றப்பட்டது. பண்டை நாளிலே சீரும் சிறப்பும் எய்தியிருந்த மிசிரம் என்னும் எகிப்து நாட்டிலும், பாரசீக கடற்கரையிலிருந்து அழிந்து போன சுமேரியா நாட்டிலும், சோழர் குடியேறினமையாலே சோழதேயம் என்னும் பெயரினை எய்திப் பிற்காலத்திலே மொழிச் சிதைவினாலே சால்தேயா என வழங்கப்பட்ட தொல்பதியினிலும், சேரர் குலத்தார் கலத்திற் சென்று வெற்றி பெற்றுத் தம்மாணை செலுத்திய கிரேக்கத் தீவிலும், அதற்கணித்தாகிய யவனபுரத்திலும், உரோமர் வருவதற்கு முன்பழைய இத்தாலி தேசத்திலும், ஐபீரியா எனப்பட்ட பழைய இஃச்பெயின் சேத்திலும்,…

கலைச்செல்வத்தை மீட்டெடுப்போம்!

  கடல்வாய்ப் பட்டனவும் காலத்தின் மாறுதலினாலே மறைந்து போயினவுமாகிய நூல்கள் மிகப் பல. அந்நூற் பெயர்களைக் கூறிப் பழமை பாராட்டுவதோடு அமைந்திருப்போமா? இல்லை. முன்னிருந்த கலைச் செல்வத்தை மீட்டும் பெறுவதற்கு முயல்வோம். அத்தகைய முயற்சி நமது நாட்டிற்கு ஆக்கமளிக்கும். – விபுலானந்த அடிகள்: யாழ்நூல்: பாயிரவியல்

தமிழிசையே பிற இசைகளுக்குப் பிறப்பிடம்

  தமிழிசையே பிற இசைகளுக்கெல்லாம் பிறப்பிடம். தமிழிசையிலிருந்துதான் பிறமொழி இசைகள் கிளைகளாகப் பிரிந்து சென்றன. தமிழிசைப் பண்களே பிற்காலத்தில் பெயர்மாற்றங்களும் இடமாற்றங்களும் பெற்று வடமொழிப் பெயர்களைப் பெற்றுவிளங்கின என்பதற்கெல்லாம் தக்க ஆதாரங்கள் இங்கு (சிலப்பதிகார வேனிற்காதையில்) நமக்குக் கிடைக்கின்றன. – இசைப் பேரறிஞர் முனைவர் சேலம் செயலட்சுமி : சிலப்பதிகாரத்தில் இசைச் செல்வங்கள் பக்கம். 322

பிரபாகரன் சிலை அகற்றம்: மரு.இராமதாசு கண்டனம்! மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் பிரபாகரன் சிலை நல்லூரில் அகற்றம்: மரு.இராமதாசு கண்டனம்! போராட்டம் வெடிக்கும் எனத் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு  எச்சரிக்கை!   பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்:–  நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கை நல்லூரிலுள்ள கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈழப்போராளி பிரபாகரனின் உருவச்சிலையை காவல் துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர்.  அந்த ஊரில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு பிரபாகரன் சிலையை மட்டும் அகற்றியுள்ளனர். குதிரை சிலை மட்டும் இருக்கும் நிலையில், பிரபாகரன் சிலை…

தேவதானப்பட்டிப் பகுதியில் குழு முறையில் வாடிக்கையாளர்கள் நகை விற்பனை

            தேவதானப்பட்டிப் பகுதியில் கூட்டு முறையில் வாடிக்கையாளர்களின் நகைகள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.   தேவதானப்பட்டிப் பகுதியில் தேசியமயமாக்கப்பட் வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவற்றில் உழவர்கள், பொதுமக்கள் தங்களுடைய அவசரத்தேவைக்காக நகையை அடைமானமாக வைத்து அதன் மூலம் பணம் பெறுகின்றனர். அவ்வாறு பணம் பெறும்பொழுது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வணிகக்கடன், வேளாண்கடன் எனப் பிரித்து வேளாண்கடனுக்குக் குறைந்த வட்டி எனவும் அதற்கு நகையை மீட்டுக்கொள்ள 18 மாதம் எனவும் வரைமுறை வைத்துள்ளது. அதற்குள் நகையைத் திருப்பாவிட்டால் நகை ஏலத்தில் விடப்படும் என்று அறிவிப்பு செய்வார்கள்….

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 27 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 27 அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (பூங்குயில் ஒப்பனை கண்டு அருண் தாங்கா இன்பம் அடைகின்றான்) அருண்    :     பணியாளும் வந்து பல நாழி ஆச்சு! அணியவே இன்னும் நாழிதான் என்ன? பூங்       :     முடியள்ளி முடிக்கும் போதுதான் வந்தான்! துடிப்பதும் ஏனோ? துரிதமே வருவேன்! அருண்    :     ஆகா! என்ன! தேவியே! தேவி! ஓகோ! விண்மீன் வானுடை கட்ட! எங்கும் இன்பம் பொழிகின்ற நிலவாய்! தங்கமுகத்தாலே பார்த்தென்னைச் சிரிக்க! தேவியே! கண்ணே!…

சங்கத் தமிழ் 87 ஆவது மாதக் கூட்ட அழைப்பு

  வைகாசி 30, 2046 / 13-6-2015 சனிக்கிழமை, மாலை 6.00 மணி தலைப்பு- ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் தமிழ்ச் சுவை’ ஆய்வுரை: திரு. சொ. வினைதீர்த்தான். வருக! வருக! இவண் செயலர் த. மு. எ. க. ச. காரைக்குடி.

‘தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இலக்கியச் செல்வாக்கு’ – ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

  ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்  என்னும் அமைப்பு அறுபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஒய்.எம்.சி.ஏ. என்னும் உலகளாவிய அமைப்பின்.சென்னைக் கிளையின் இலக்கியப்பிரிவாக உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் அமைந்துள்ள தொன்மைவாய்ந்தஒய்.எம்.சி.ஏ. கட்ட்டத்தின் முதல் மாடியில் செவ்வாய் தோறும் இங்கே பல துறைகளில் அறிவார்ந்த பொழிவுகள் பல்துறை வித்தகர்களால் நிகழ்த்தப்பெற்று வருகின்றன.   மே திங்களைத் தவிர ஏனைய அனைத்துத் திங்களிலும் செவ்வாய் தோறும் இக் கூட்டங்கள் கருத்துவிருந்து வழங்கி வருகின்றன. வெளியூரிலிருந்து வருபவர்கள்கூடச் செவ்வாய்க்கிழமை பாரிமுனைப் [பகுதிக்கு வந்து விட்டால் இங்கே வந்து பயனடைந்து செல்வது…

புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் சிலப்பதிகார விழா

  தி.பி.2046 வைகாசித்திங்கள் 16ஆம் நாளன்று (30.5.2015) புதுவைத் தமிழ்ச்சங்கம் அதன் தலைவர் வெ.முத்து தலைமையில் சிலப்பதிகார விழாவை நடத்தியது.   செயலர் மு.பா. வரவேற்றார். து.த.கோ.பாரதி முன்னிலையுரை நிகழ்த்தினார்.   தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் சிலப்பதிகாரம் பற்றிய சிறப்புரை நிகழ்த்தினார்.   கலைமாமணி கல்லாடன் தலைமையில் பாட்டரங்கமும் தமிழ்மாமணி கோ. சாரங்கபாணி தலைமையில் வழக்காடு மன்றமும் நடைபெற்றது.   நிறைவாக விசாலாட்சி நன்றி கூறினார்

தன்மதிப்பு வாழ்வியல் சான்றிதழ்ப் பயிற்சி

பெரியார் ஈ.வெ. இரா. –  நாகம்மை இந்திய அயலக மொழிகள் பண்பாட்டு நிறுவனம் சுயமரியாதை வாழ்வியல் சான்றிதழ்ப் பயிற்சி சனி, ஞாயிறு தோறும்ஆடி 16 / ஆகத்து 1 முதல் தொடக்கம் விண்ணப்ப இறுதி நாள்  ஆனி 25, 2045 /  10.07.2015