கோதில்லாக் குறிக்கோளும் குலசேகர ஆழ்வாரும் – சொ.வினைதீர்த்தான்

    குலசேகர ஆழ்வாரின் அருமையான உவமைகள் வழியாக குறிக்கோள், குறிக்கோளின்மீதுள்ள தீராப்பற்று, அதனை அடைதல் ஆகியவை குறித்து எண்ணிப்பார்ப்பது இந்தப்பதிவு. எந்தவொரு காதல் பாடலையும் அல்லது தெய்வபக்திப் பாடலையும் வெற்றி அல்லது குறிக்கோளுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். காதல் என்பதும் பக்தி என்பதும் ஒன்றின் மீதுள்ள ஏக்கமும் அடையவேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பமுமே அல்லவா? முருகனின் பக்கலிலுள்ள வள்ளியும் தெய்வானையும் குறிப்பது சிற்றாடை கட்டிய பாவையரையல்ல என்பார்கள். ஞானசக்தியாகிய முருகனை(Goal) அடைய இச்சாசக்தியாகிய (Passion) ஆழ்ந்தவிருப்பமும் கிரியாசக்தியாகிய(Action) செயலும் உடனிருக்கவேண்டுமென்பார்கள். “வெற்றிக்கு அடிப்படை அதைப்பற்றிய சிந்தனை; அதற்கேற்ற…

குமுக வளர்ச்சி – முனைவர் இராம.கி.

  காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் வீடுகட்கு அன்றைக்கு வந்தவெங்கள் அம்மா இலக்குமியே என்றைக்கும் நீங்கா திரு!   இந்த இனிய மாலைப்பொழுதில் இவ்வரங்கிற் கூடியிருக்கும் பள்ளத்தூர்வாழ் மக்களுக்கும் விழா அழைப்பாளருக்கும் முதற்கண் என் வணக்கம். சிவன்கோயிற் தேரையிழுத்து நிலைகொள்ளச் செய்த களைப்போடு எல்லோருங் கூடியுள்ள நிலையில், அடுத்த கோயில்நிகழ்ச்சி தொடங்குமுன் இடைப்பட்ட நேரத்தில், உங்களோடு செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு தந்தமைக்கு என் நன்றிகள். துடிப்பான இளைஞரும், தொழில்முனைப்பாளரும் (industrialist) ஆன அருண் கூப்பிட்டும் இங்கு வராமல் இருக்கலாமா?…

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் 70ஆம் ஆண்டு விழா – ஒளிப்படங்கள்

சென்னை ஆனி 08, 2046 /  சூன் 23, 2015 செவ்வாய் மாலை 5.30 (பெரிதாகக்காணப் படத்தின்மேல் சொடுக்கவும்)

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் -சு.சமுத்திரம்

இலக்கிய வீதி & பாரதிய வித்யா பவன் ஆனி 15, 2046 / சூன் 30, 2015  இலக்கியவீதி அன்னம் விருது வழங்கல்  மறுவாசிப்பில் சு.சமுத்திரம்

பண்டைத்தமிழர்கள் இலக்கிய வளமும் பெற்றிருந்தனர்! – வி.கனகசபை

பண்டைத் தமிழிலக்கியம் பேரளவினது; முன்முறையினது பண்டைத் தமிழிலக்கியம் அகல்பெரும் பரப்புடையது. அதே சமயம் அது முன்னால் வேறு எவர் காலடியும் படாத ஒரு புதுநிலப்பரப்புப் போன்ற இயல்புடையதாகவும் இலங்குகிறது. – அறிஞர் வி.கனகசபை: 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்: பக்கம். 8: மொழிபெயர்ப்பு:  பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் உயர்நாகரிகமும் செல்வ வளமும் மிகுந்திருந்தமையால் பண்டைத்தமிழர்கள் இலக்கிய வளமும் பெற்றிருந்தனர்!   பண்டைத் தமிழ் இலக்கிய ஏடுகளை யான் கூர்ந்து ஆராய்ந்தபோது, எனக்கு ஏற்பட்ட கருத்து ஒன்றே ஒன்றுதான். அவற்றுள் ஒரு பெரும்பகுதி இரண்டாயிர ஆண்டுகளுக்கு…

திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் – வெ.அரங்கராசன்

1.0. நுழைவாயில்                 எல்லார்க்கும் எல்லாமும் [0582] சொல்ல வேண்டியவற்றை நல்ல வகையில்- வெல்லும் வகையில் சொல்லும் சொல்லாற்றல் மிக்கவர் அருந்திறல் பெருந்தகையர் திருவள்ளுவர். தனிமனிதனுக்கும் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் உலகிற்கும் சொல்ல வேண்டிய இன்றியமையா அனைத்தையும் சொல்லியுள்ளார். அவற்றுள் ஒரு தலைப்பே உலகு தழீஇய பொதுமைச் சிறப்பு மிக்க தலைப்பாகிய ‘வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள்’ என்பது. இத் தலைப்பும், திருவள்ளுவர் எத்துணைப் பெரிய பெருமையும் அருமையும் பொலியும் தொலைநோக்குப் பார்வையர் என்பதைப் புலப்படுத்தும். இனி அவை பற்றி நீடு நினைந்து ஆழச் சிந்திப்பது இவ்…

வெல்வோம் நாமென உறுதியெடு! – இரவி இந்திரன்

வெற்றி நமக்கென முழக்கமிடு! வெல்வோம் நாமென உறுதியெடு! வல்லவனே வாழ்வான் வரலாறு சொல்கிறது. வெல்பவனே வாழ்வான் வெளிப்படை உண்மை. கொல்வோம் என்றொரு போர்க்குணம் கொண்டு எல்லையில் நிற்கிறது சிங்களம் இன்று வெல்வோம் நாமென வேங்கைகள் கூட்டம் பகை வென்றே காக்கிறார் எங்களின் தேசம் தருமம் என்றொரு அடிப்படை உண்டு தமிழனின் பக்கம் எப்போதும் உண்டு வெற்றி என்றொறு மந்திரம் உண்டு எங்கள் தலைவனுக்கது சொந்தம் என்றும் இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தம் செய்! இரத்தம் சிந்தும் யுத்த அரசியல் செய்! அப்போது தான் நீ…

இயற்கைப்பின்னணி தமிழுக்கே உள்ள சிறப்பு – நெ.சுப்பையா

அக உணர்வுகளை இயற்கையோடு பின்னிப்பாடும் அருமை, தமிழ் இலக்கியங்களுக்கே உள்ள சிறப்பு   சங்க இலக்கியங்களை அகம் புறமென இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் அகமென்பது மனத்தின்கண்ணே நிகழும் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் சித்தரித்துக் காட்டும் பாடல்களையேயாம். அவை அகப்பாட்டு எனப்படும். இப்பாட்டில் சிறந்த மக்களைப் பற்றியே பேசப்படும். புறமென்பது புறத்தே நடக்கும் காரியங்களை விளக்கிக் காட்டும் பாடல்களையேயாம்; அவை புறப்பாடெனப்படும். தலைவன், தலைவியாகிய இருவர்பால் நிகழும் உணர்ச்சிகளைச் சொல்லோவியமாகக் கவின் பெறக் காட்டினார்கள் நம் சங்கத்துச் சான்றோர்கள். அகத்தே நிகழும் உணர்ச்சிகளை, இயற்கையோடு…

உலகப் பொதுமொழி தமிழே! – கா.அப்பாத்துரை

உலகப் பொதுமொழியாய் முன்பு இருந்ததும் நாளை இருக்கப் போவதும் தமிழே     பண்டு முதிரா நாகரிகமுடைய மிக முற்பட்ட காலத்தில் தமிழ் உலகப் பொதுமொழியாயிருத்தல் வேண்டுமென்று அறிஞர் பலர் உய்த்துக் காண்கின்றனர். அது எப்படியாயினும், வருங்கால உலகப் பொதுமொழியாவதற்குரிய பண்பு அதற்குக் கட்டாயம் உண்டு என்பதில் ஐயமில்லை. வேறு எம்மொழிக்கும் ஆங்கிலம், சீனம், இந்துத்தானி ஆகியவற்றுக்கு இருக்கும் உயர்ப்பண்பைவிட, அதற்குரிய உயர்ப்பண்பின் தகுதி பெரிதாகும். உயர்தனிச் செம்மொழிகள் கடந்த, தாய்மொழிகள் கடந்த இவ்வுயிர்ப்பண்புக்குக் காரணமென்ன? அதுவே தமிழ் வளர்த்துக் கொண்டுள்ள தனித்தமிழ் பண்பு…