எழுத்தாளர் மு.முருகேசுக்குப் பாராட்டும் பரிசும்

வந்தவாசி எழுத்தாளர் மு.முருகேசுக்கு நெய்வேலி புத்தகக்காட்சியில் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன!        வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேசுக்கு நெய்வேலி புத்தகக்காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன.   நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது. 18-ஆவது ஆண்டு புத்தகக்காட்சி நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி அரங்கில் ஆனி 19, 2046/ சூலை 04, 2015 அன்று தொடங்கியது. வரும் ஆனி 27 /சூலை 12-ஆம் நாள்வரை பத்து நாள்கள் நடைபெறவுள்ள…

ஒப்பில்லா இன்பத்தமிழ் உலகில் முதன்மொழியே! – அ.க.நவநீதக்கிருட்டிணன்

தமிழர் திருநாடே தாரணியில் முதல் தோற்றம் அமுதமொழி கண்டார் அருந்தமிழர் அந்நாளில் இயற்கையோ டியைந்தமொழி இன்பம் நிறைந்ததமிழ் நயங்கள் நிறைந்தமொழி நல்லறிஞர் கண்டதமிழ் எப்போ பிறந்ததென்று எவரும் அறிந்ததில்லை ஒப்பில்லா இன்பத்தமிழ் உலகில் முதன்மொழியே! குமரியின் தென்திசையில் குளிர்ந்த வளநாடு தமிழர்திருநாடு தழைத்தோங்கி இருந்ததையோ! அந்நாட்டில் தென்மதுரை அழகான நன்னகரில் தென்னன் தமிழ்ச்சங்கம் திறம்பெறவே அமைத்திட்டான்! கன்னித்தமிழ்மொழியைக் கருத்தாய் வளர்த்திட்டான் பன்னூறு புலவரதில் பழந்தமிழை ஆய்ந்திட்டார் பின்னர்க் கபாடபுரம் பெரியதொரு தமிழ்நகரம் மன்னு தமிழ்ச்சங்கம்மறுபடியும் அமைத்திட்டான் அதிலும் பலபுலவர் அருந்தமிழை ஆய்ந்திட்டார் மதிநுட்ப நிறைபுலவர்…

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 2: மறைமலை இலக்குவனார்

(சூன் 28, 2015 தொடர்ச்சி)2  போராரவாரம்:   பேராரவாரம் மிக்க சூழல்களையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய சங்கச் சான்றோர்கள் போராரவங்களையும் பதிவு செய்துள்ளனர். புறப்பாடல்களைவிட மிகுதியாக அகப்பாடல்களில் இவை நுவலப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊரார் அலர் தூற்றலின் கொடுமையால் துன்புறும் தலைவியும் தோழியும், அலரினால் எழுந்த ஆரவாரம் போராரவாரத்தைக் காட்டிலும் பெரிதாக விளங்கியதாக எடுத்துக்கூறும் வகையில் இப் பாடல்கள் அமைந்துள்ளன.   “அன்னி என்பவன் குறுக்கைப் போர்க்களத்தில் திதியன் என்பவனது தொன்மையான புன்னை மரத்தின் பெரிய அடியை வெட்டித் துண்டித்தபொழுது கூத்தர் அவனைப் போற்றிச் செய்த…

சிரியுங்கள் – வெ.அரங்கராசன்

சிரியுங்கள்         [ இடுக்கண் வருங்கால் நகுக –  திருக்குறள் 063:  0621 ]  சிரியுங்கள்…சிரியுங்கள்…. சிந்தை குளிரச் சிரியுங்கள்…. சந்திப்புத் தொடரவே சிந்தித்துச் சிரியுங்கள்…. சிரித்தாலும் சிரியுங்கள்—பிறர் சிரிக்காத போதும் சிரியுங்கள்…. சிரிப்புக்காகச் சிரிக்காமல் சிரிப்பதற் கென்றே சிரியுங்கள்…. மனத்தால் மனம்சேரச் சிரியுங்கள்….. மனத்தை மதித்துச் சிரியுங்கள்….. மனம்விட்டுச் சிரியுங்கள்…. மனம்மகிழ்ந்து சிரியுங்கள்….. நோய்விட்டுப் போக வாய்விட்டுச் சிரியுங்கள்….. காய்விட்டுக் கனிதொட்டுத் தேன்சொட்டச் சிரியுங்கள்…. நொந்துபோன நெஞ்சினிலே வந்துவாழும் நோய்கள் எல்லாம் வெந்து வீழ்ந்து சாகும்படி முந்தி வந்து சிரியுங்கள்….. யாழிசை மழலையின் ஏழிசைச் சிரிப்பே போல வாழும் காலம் எல்லாம் கோலம் கொள்ளச் சிரியுங்கள்….. முதல்நாள் சிரிப்பது போலவே முப்பதாம் நாளும் சிரியுங்கள்…. மூலதனமாய்ச் சிரிப்பும் அமைவதால், முழுமை மனத்துடன் சிரியுங்கள்….. சோகப் பயிர்கள் சாகும்படி சிரியுங்கள்…. சுகம்மிகு பயிர்கள் செழிக்கும்படி சிரியுங்கள்…. சந்தி சிரிக்காமல் இங்கிதம் தெரிந்து சந்தமாய்ச் சிரியுங்கள்…. சந்தனமாய்ச் சிரியுங்கள்…. ஒப்புக்குச் சிரிக்காமல் உண்மையாய்ச் சிரியுங்கள்…. எண்ணத்தில் குழிஏதும் விழாமல் கன்னத்தில் குழிவிழச் சிரியுங்கள்….. ஆணவச் சிரிப்பின் வேரினை அறுத்தெறிந்து பாரினை வென்றிடப் பணிவோடு சிரியுங்கள்…. அசட்டுச் சிரிப்புக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் இடம்அறிந்து— வெல்லும் தடம்அறிந்து சிரியுங்கள்….. விரக்திச் சிரிப்பினை விரட்டிவிட்டு—நல்ல நம்பிக்கை வந்[து]உதிக்கத்…

திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் 2 – வெ.அரங்கராசன்

(சூன் 28, 2015 தொடர்ச்சி)2 11.0. வல்லுநர் கருத்து அறிதல் [EXPERT OPINION]     ஒரு தொழிலை / வணிகத்தை / நிறுவனத்தை நடத்தும் போது, எதிர்பாராத விதமாகச் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்றும். அவற்றைச் சரி செய்வதற்கு, அவற்றின் உள்ளும் புறமும் உள்ள அனைத்தையும் படித்த – ஆராய்ந்த – பட்டறிந்த – வல்லுநர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பயன்கொள்ளலாம். இதுவும் ஒரு வணிக நடைமுறையே. இதையும் திருவள்ளுவப் பெருந்தகையார் தெளிந்துள்ளார்; தெரிவித்துள்ளார். இதனைச்,         செய்வினை செய்வான் செயல்முறை, அவ்வினை…

மகளுக்குத் தந்தையின் மடல் – இளையவன்-செயா

  பெரியார் ஆண்டு 135  தொ. ஆ. 2880 தி.ஆ. 2046        ஆடவை ( ஆனி )  13          28–06–2015 அன்பு மதுமலர்க்கு வணக்கம். நலம். நாடலும் அதுவே.        கடந்த  22ஆம் நாள்  உங்கள்  புகழுரையை  மின்னஞ்சல் மூலம் படித்தேன். அதனை அப்படியே  ஏற்றுக்கொள்கிறேன். நான் இளைஞர்களிடம் பேசும்போது  ” உன்னை  அறிவாளி  யாரேனும்  பாராட்டும்போது  உடனே ” ஆம்  நான் அறிவாளிதான் ” என்று ஒப்புக் கொள்.  காரணம்  அந்தப்…

கோஅனா பள்ளியில் தமிழ்க்கல்வி தேவை!

கோஅனா பள்ளியில் தமிழ்க்கல்வி தேவை! அனைவருக்கும் இனிய வணக்கங்கள். சப்பான் தமிழ்ச்சங்கத்தின் மொழிவளர்ச்சித் துறையின் சார்பாகச் சப்பான் நாட்டின் கவாசாகி நகரில் இயங்கிவரும் கோஅனா பள்ளிக்குச் (Kohana international school) சென்றிருந்தோம். இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பள்ளியின் முதல்வருமான திருமதி.பிரியா அவர்கள் நம்மை அன்புடன் வரவேற்றார். கோஅனா பள்ளி பன்னாட்டுப் பொதுச் சான்றிதழ்க் கல்விக்கான  (IGCS என்னும்) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளியாகும். இந்தப்பள்ளியில் நம்முடைய தமிழ்ப்பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து ஒன்றாகக் கல்வி கற்கிறார்கள் மேலும் கவாசாகி நகரிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நம்முடைய தமிழ்ச்சொந்தங்கள்…

குமுக வளர்ச்சி 2 – முனைவர் இராம.கி.

(சூன் 28, 2015 தொடர்ச்சி) முனைவர் இராம.கி.   குமிந்துகூடிச் சேர்ந்துவாழும் மக்கள்கூட்டத்தையே குமுகமென்று சொல்கிறோம்.  குமுகமென்பதை வடமொழி உச்சரிப்போடு சமூகமென்று சொல்லியே நாமெல்லாம் பழகிவிட்டோம். ஆங்கிலத்தில் இதை society என்பார். “People bound by neighborhood and intercourse aware of living together in an ordered community” ஆகக் குமுகமென்பது வெறுங் கும்பலல்ல. பல்வேறு வகைப்பட்ட மக்கள் ஓரிடத்திற் சேர்ந்து குடியிருந்து, கட்டொழுங்கோடு வாழும் அமைப்பாகி, ஒருவருக்கொருவர் இணங்கி, எல்லோருக்கும் நலனும் வளர்ச்சியும் ஏற்படும்வகையில் உறவாடிக் கொள்வதே குமுகமாகும். இக் குமுக உறுப்பினருக்குத் தனிப்பொறுப்புகளும், குடும்பப்…

தாய்த்தமிழும் மலையாளமும் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

தாய்த்தமிழும் மலையாளமும் 1   தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்ந்தாலும் தமிழ் நாட்டு வரலாறு போன்று தமிழ் மொழியின் உண்மையான வரலாறும் அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தப்படவில்லை. போதிய சான்றுகள் இருப்பினும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவது போன்று தமிழின் தொன்மைபற்றியும் நாம் பேசி வருகிறோம்; பேசும் அளவைவிடக் குறைவாக எழுதி வருகிறோம். நடுநிலை ஆய்வறிஞர்களால் தமிழ்மொழி வரலாறும் தமிழ்க்குடும்ப மொழிகளின் வரலாறும் தமிழ்மொழியின் தாய்மை வரலாறும் எழுதப்பெற்று அனைத்து மொழிகளிலும் பெயர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் இங்கே முழுமையாக ஆராயாவிட்டாலும் தமிழுக்கும்…

தமிழர் அழிவது யாராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்

எவராலே? ஈழம் சிதைவது எவராலே?             தமிழர் அழிவது யாராலே? கொடுஞ்சிறை வதைமுகாம் பிறவற்றில்             தமிழர் மடிவது எவராலே? உணவும் நீரும் சிறிதுமின்றி             மருந்தும் உடையும் கிட்டாமல் நாளும் ஒழியும் சூழலுக்குத்             தள்ளப்பட்டது யாராலே? கற்பும் பொற்பும் சிதைப்பவரை             ஓட ஓட விரட்டாமல் அஞ்சி அஞ்சிச் சாகும்நிலை             வந்தது இன்று எவராலே? தமிழர் அழுவது யாராலே?             இந்தியம் சிரிப்பது எவராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்

கருகும் பிஞ்சுகள் – பாவலர் கருமலைத்தமிழாழன்

கருகும் பிஞ்சுகள்  பகர்கின்ற கட்டாயக் கல்விச் சட்டம் பறைசாற்றும் குழந்தைத்தொழி லாளர் சட்டம் முகம்காட்டும் கண்ணாடி போல யிங்கே முன்னிருந்தும் கண்மறைக்கும் வறுமை யாலே அகரத்தை எழுதுதற்கே கனவு கண்டு அன்புத்தாய் நீவிவிட்ட அரும்வி ரல்கள் தகதகக்கும் கந்தகத்து மருந்தில் தோய்ந்து தயாரித்துத் தருகிறது நெருப்புக் குச்சி ! சீருடையில் அழகொளிரச் சிரிப்பு திர்த்துச் சிற்றுந்தில் அமர்ந்தபடி கைய சைத்துப் பேருவகை தருமென்று கனவு கண்டு பெருமன்பில் நீவிவிட்ட பிஞ்சு விரல்கள் சீருடையில் தொழிற்சாலை பெயர்வி ளங்க சீறிவரும் வெடிமருந்து வாசம் வீசும் பேருந்தில்…

பேரா.வெ.அரங்கராசனின் திருக்குறள் அறுசொல் உரை – கு.மோகன்ராசு

 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையும் இணைந்து திருவள்ளுவர் ஆண்டு தைத் திங்கள் 2—ஆம் நாள் [16 –- 01 – 2015] அன்று நடத்திய திருக்குறள் எழுச்சி மாநாட்டில், திருக்குறள் தூயர் பேராசியர் முனைவர் கு. மோகனராசு அவர்கள முன்னிலையில், திருக்குறள் பண்பாட்டுச் சிற்பி கோ. பார்த்தசாரதி அவர்கள் பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்கள் எழுதிய திருக்குறள் அறுசொல் உரை என்னும் நூலை வெளியிட்டார்கள். முதல் படியைக் கவிமாமணி க. குணசேகரன் அவர்கள். பெற்றார்கள். அந்நூலில் இடம் பெற்ற மதிப்புரை வருமாறு:…