மீட்டுருவாக்கம் செய்க! – தமிழண்ணல்

மீட்டுருவாக்கம் செய்க  வடமொழிப் பெயர்ப்படுத்தல்- அதாவது எப்பெயரையும் வடமொழிப் பெயராக மாற்றுதல் ஒரு ‘சமக்கிருதமயமாக்கும்’ முறையாகும். அங்கயற்கண்ணி என்பதை, மீனாட்சி என்னும் சொக்கரைச் சுந்தரர் என்னும் மாற்றினர். ‘தமிழகத்திலுள்ள அனைத்துத் திருக்கோயில்களுக்கும் அங்கு குடிகொண்டுள்ள இறைவன் இறைவியர்க்கும் நல்லநல்ல தமிழ்ப்பெயர்கள் வழங்கின. அவை அனைத்தும் பொருள் புரிந்தும் விளங்காமலும் வடமொழிப் பெயர்களாக்கப்பட்டன. இளையாத்தன்குடியை இளையாற்றங்குடி எனத் தவறாக எண்ணிக்கொண்டு, ‘விச்ராந்திபுரம்’ எனப் புராணம் எழுதியதை என்ன சொல்ல? ‘பாலை நிலையம்’ என்பதில் பாலுக்கு எவ்விதத் தொடர்புமில்லாதிருக்கவும், அதை ‘சீரத்தலம்’ எனப் பெயர்த்துச் ‘சில்ப’ சாத்திரமாக்கியதை…

சுரதாவின் தேன்மழை – வேழவேந்தன்

ஆடி 12, 2046 / சூலை 28, 2015  தலை நிமிர வைத்த தமிழ் இலக்கியங்கள் : தீஞ்சுவை கமழும் தேன்மழை  கவிவேந்தர் கா.வேழவேந்தன் தொடர் பொழிவு 16

உவகைதரும் உரையாசிரியர்களின் நடை – தெ.பொ.மீ.

உவகைதரும் உரையாசிரியர்களின் நடை   இறையனார் அகப்பொருள் உரை ஒரு சிறந்த உரைநடைநூல். சூத்திரத்திற்குப் பொருள் கூறுவதோடு சோலை முதலியவற்றைப் பற்றிய புனைந்துரையும் அன்பு முதலியவை பற்றிய தத்துவ விளக்கமும் அங்கு உண்டு. ஆனால், அங்குப் பாட்டு நடை காதில் கேட்காமல் இல்லை. எதுகை மோனைகள் அளவுக்கு மீறி இன்பமூட்டுகின்றன…   தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியரான இளம்பூரணரின் நடை எளிமை வாய்ந்தது. சேனாவரையரின் இலக்கணவுரையில் புனைந்து கூற மிகுந்த இடம் இல்லையாயினும் அவரது நடையில் மிகுந்த பொலிவும் புனைவும் இடம்பெறுகின்றன. திருக்குறள் உரையாசிரியரான பரிமேலழகர்…

நூலாசிரியர்களுக்கு இணையான புலமையாளர்கள் உரையாசிரியர்கள் – கி.வா.சகநாதன்

  தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் மிகப் பழங்காலத் தொட்டுத் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவற்றை இயற்றிய ஆசிரியர்களை நூலாசிரியர்கள் என்பார்கள். நூல்களை விளக்கும் ஆசிரியர்கள் இருவகைப்படுவார்கள். மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி நூல்களை விளக்கும் ஆசிரியர்களைப் பயிற்று (போதக) ஆசிரியர் என்பர். நூல்களின் உரைகளை இயற்றிப் பலருக்கும் பயன்படும்படி வழங்கியவர்கள் உரையாசிரியர்கள். நூல்களை மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியர்களுக்கு உரைகள் துணையாக நிற்கின்றன. நூலாசிரியர்களுக்கு எத்துணை மதிப்பு உண்டோ அத்துணை மதிப்பு உரையாசிரியர்களுக்கும் உண்டு. -கி.வா.சகநாதன், உரையாசிரியர்கள் நூலின் சிறப்புரை

உரையாசிரியர்களால் தெரிய வரும் இலக்கியச் செய்திகள் பல – அ. தாமோதரன்

உரையாசிரியர்களால் தெரிய வரும் இலக்கியச் செய்திகள் பல!   பரிபாடலின் முதற்பாடல் இளம்பூரணார் உரையினாலும், பதிற்றுப்பத்துப் பாடல்கள் சில நச்சினார்கினியர் உரையினாலும், பழமொழியின் முதற்பாடல் மயிலைநாதர் உரையினாலும் கிடைத்துள்ளமை மேற்கோள் ஆட்சியின் பயன் அல்லவா? களவியலில் காணப்பட்ட பாடல்கள் பாண்டிக்கோவையைச் சார்ந்தவை என்பதும், சிற்றடக்கம் எனவும் சிற்றடக்கமெனவும் பிழைப்பட வழங்கப்பட்டுவந்த நூற்பெயர் சிற்றெட்டகம் என திருத்தமுற்றதும் களவியற் காரிகையின் மேற்கோள் ஆட்சியினால் அல்லவா? தரவு, கொச்சகம் முதலிய உறுப்புகளின் பாகுபாடு அறிய இயலாதவாறு சிதைந்த நிலையில் கிடைத்துள்ள பரிபாடலில் இரு பாடல்களுக்காவது, உறுப்பமைப்புக் கிடைத்தது…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 005. இல்வாழ்க்கை

(அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல் தொடர்ச்சி 001 அறத்துப் பால் 02  இல்லற இயல்       அதிகாரம்  005. இல்வாழ்க்கை      குடும்ப வாழ்க்கையின் கடமைகளும்,        அரும்பெரும் பொறுப்புக்களும், சிறப்புக்களும்.   இல்வாழ்வான் என்பான், இயல்(பு)உடைய மூவர்க்கும்,      நல்ஆற்றின் நின்ற துணை.          பெற்றார், மனைவி, மக்களுக்கு,        இல்வாழ்வான் நவவழித் துணைவன்.   துறந்தார்க்கும், துவ்வா தவர்க்கும், இறந்தார்க்கும்,      இல்வாழ்வான் என்பான் துணை.          துறவியார், வறியார், ஆதரவிலார்க்கு,        இல்வாழ்வான்…

நான்மறை என்பது முந்தைய தமிழ்மறையே! – சி.இலக்குவனார்

 ‘அதர்வண வேதம்’ ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டு, நான்கு வேதங்கள் என்ற எண்ணிக்கை கொண்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார். (R.C.Dutt, early Hindus clivilization Page 116) ஆதலின் மிக முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான்மறை என்று சுட்டப்பட்டது ஆரிய நான்கு வேதங்களாக இருத்தல் இயலாது. அன்றியும் தென்னாட்டுத் தமிழர் ஒருவர் வடநாட்டு ஆரிய மொழியில் உள்ள நான்கு வேதங்களையும் முற்றக் கற்றல் அவ்வளவு எளிதன்று. ஆரிய மொழியில் நல்ல பயிற்சியும் புலமையும் உடைய ஆரியரே,…

அரும்பதவுரையாசிரியரால் அறிய வரும் செய்யுட்கள் எண்ணிறந்தன. – மு.அருணாசலம்

அரும்பதவுரையாசிரியரால் அறிய வரும் செய்யுட்கள் எண்ணிறந்தன. அரும்பதவுரையாசிரியர் மேற்கோள் காட்டிய நூல்கள் மிகப்பல. இசைத்தமிழ், நாடகத் தமிழ் பற்றி இவர் காட்டும் மேற்கோள் செய்யுட்கள் எண்ணிறந்தன. இவை எந்த நூல்களில் உள்ளன என்று அறிய வழியே இல்லை. அகத்தியச் சொல்லதிகாரச் சூத்திரம், இசைத் தமிழ் பதினாறு படலத்துள் கரணவோத்து, செயிற்றியனார் என்பன பெயர் குறிப்பிட்டுச் சொல்கிறார்; நூல்கள் இல்லை… பெயர் தெரிந்தும் கிடைக்காத நூல்கள் ஆசிரிய மாலை, வளையாபதி. திருக்குறள் முதலான நூற்கருத்துகளை, நூற்பெயர் குறிப்பிடாமலே தம் உரைநடையில் எழுதிக் கொண்டு செல்வது இவர்…

தூது நூல்கள்

  தூது நூல்களைப் பயில்வதால் அரிய பெரிய செய்திகளைப் பெரும்பாலும் குறளடியாக அமைந்துள்ள தனித்தனிக் கண்ணிகள் வாயிலாக எளிதின் உணர்ந்து கொள்ளலாம். பொதுவாக நோக்கின், நாட்டு வரலாறு, நற்றமிழ் மொழியின் தனிச் சிறப்பு, அம்மொழியின்­கண் தொன்றுதொட்டு இன்றுகாறும் நல்லிசைப் புலவர்களால் யாக்கப்பட்ட நூல்களின் இயல்பு. தெய்வ நாட்டம், தெய்வத்தை வழிபட்டுத் தென்றமிழால் பாடியருளிய மெய்யடியார்களின் வரலாறு, திருக்கோயில் அமைப்பு, ஆங்கு நடைபெறும் நாள்விழா, சிறப்பு விழா, திருவோலக்கம், திருவிழா முதலியன எவ்வெவ்வாறு அமைந்து நடைபெறவேண்டுமென்னும் முறைமையும் பிறவும் திட்பநுட்பமாகவும் தெளிவாகவும் உணர்தல் கூடும். இந்நூல்களில்…

பல்துறையறிஞர் நச்சினார்க்கினியர் – மு.வை.அரவிந்தன்

நச்சினார்க்கினியர் நூலறிவோடு நுண்ணறிவும் உடையவர். “நச்சினார்க்கினியர் நூலறிவோடு நுண்ணறிவும் உடையவர். பல்வேறு கலைகளைக் கற்றுத் துறைபோகிய வித்தகர். பாட்டிற்குச் சொற்பொருள் கண்டு எழுதுவதோடு அவர் நிற்கவில்லை. நூலில் இடம் பெறும் சமயக் கருத்து, இசை, நாடகம் முதலிய கலைகளைப் பற்றிய அறிவு, ஆடை அணிபற்றிய நுண்ணிய விளக்கம், உலகில் உள்ள பல இனத்து மக்களின் பழக்க வழக்கம், பண்பாடு இவற்றை அறிந்தவர். தமிழில் உள்ள இலக்கணம் இலக்கியம் நிகண்டு காவியப் புராணம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர். சோதிடம், மருத்துவம் பற்றியும் கட்டடக்கலை பற்றியும் போதிய…

ஆரியர் வருகையால் கட்டுக்கதைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களும் பெருகின! – இராகவன்

  ஆரியர் வருகையால் பாரத நாட்டில் சமயச்சடங்குகள் வளர்ந்தன. தெய்வங்கள் பெருகின. புரோகிதம் வளர்ந்தது. சாத்திரங்களும், சடங்குகளும் மலிந்தன. அதனால் கலைகளும் கட்டுக்கதைகளும் வளர்ந்தன. குருட்டுப் பழக்கவழக்கங்களும், மூடநம்பிக்கைகளும், சாதிகளும், சாதிக் கட்டுப்பாடுகளும் பயனற்ற மந்திர தந்திரங்களும் பெருகின. தெய்வங்களும் அவற்றின் மனைவி மக்களும், சிறு தெய்வங்களும் பெரிய தெய்வங்களும் அவற்றின் பணியாட்களுமாக ஆயிரம் ஆயிரமாகத் தெய்வங்கள் பல்கிப் பெருக்கெடுத்தன. முப்பத்து முக்கோடி தேவர்களும் அவர்களின் மனைவிமக்கள் பணியாட்களுமாகக் கோடானு கோடி தெய்வங்கள் பல்கிப் பெருகின. -நுண்கலைச் செல்வர் இராகவன்: தமிழ் சங்கக் கலைத்…

நடுநிலை உரை அறிஞர் இளம்பூரணர் – மு.வை.அரவிந்தன்

நடுநிலை உரை அறிஞர் இளம்பூரணர்   இளம்பூரணர் உரை ஆழமான தெளிந்த நீரோடை போன்றது; பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்தி மூத்து முதிர்ந்து காவி உரையுடன் – அருள்பழுத்த நெஞ்சத்துடன் முகம் மலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை இவர் உரை உண்டாக்குகின்றது. ஆரவாரமும் பகட்டும் இவர் உரையில் எங்கும் காண்பது அரிது. மிக மிகச் சுருக்கமாகத் தெளிந்த கருத்தைக் கூறி விளங்க வைக்கின்றார். தாம் கருதியதே சிறந்தது என்று எண்ணும் வகையில் இவர் எவ்விடத்திலும் எழுதவில்லை. பிறர் கருத்தை…