பிய்த்தே எறிந்திடு நீ சாதியை – நடராசன் கல்பட்டு நரசிம்மன்

முத்தத்தில் இல்லை சாதி இரத்தத்தில் இல்லையது – மனித மனத்தின் பித்தத்தில் உள்ளதது பிய்த்தே எறிந்திடு நீ யதை வைத்தே பார்த்திடு அனைவரையும் சமமாய்! – கல்பட்டார்  

இறையாண்மை என்றால் இதுதான் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 10, 2046, சூலை 26, 2015 தொடர்ச்சி)   நிலப்புற அரசுகளும் (States on exile)  இறையாண்மை உள்ளனவாகக் கருதப்படுகின்றன. சான்றாக இரண்டாம் உலகப்போரின் பொழுது நார்வே, நெதர்லாந்து, செக்கோசுலோவேகியா முதலான நாடுகள் அயலவர் ஆளுகைக்கு உட்பட்டிருப்பினும் இறையாண்மை மிக்கப் புற அரசுகளாக அல்லது புவிசாரா அரசுகளாகக் கருதப்பட்டன.  அயலாட்சி நீங்கியதும் புவிசார்இறையாண்மை மிக்க அரசுகளாகக் கருதப்பட்டன. 1990-91 இல் ஈராக் போரின்பொழுது குவைத்து அரசிற்குப் புவிசாரா இறையாண்மை உள்ளதாகக் கருதப்பட்டது. இவற்றின் அடிப்படையிலும் தமிழ் ஈழம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்ந்தது….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 3 – மறைமலை இலக்குவனார்

(ஆடி 10, 2046, சூலை 26, 2015 தொடர்ச்சி)    பேராசிரியரின் கருதுகோளை இற்றைத் தொல்லியல் வளர்ச்சி நிலையில் மீள்ஆய்வு செய்யவேண்டும். நூலுள் நுவலப்பட்டுள்ள செய்திகள் பண்பாட்டுமானுடவியல்,  கல்வெட்டியல், தொல்லியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வதற்கு ஒரு தூண்டுகோலாகப் பேராசிரியரின் கருதுகோள் விளங்குகிறது. செம்மொழி ஆய்வுக்குச் சிறப்பான ஆற்றுப்படையாகக் கீழ்வரும் இயல்கள் திகழ்கின்றன எனலாம்: பழந்தமிழ் (ப. 26-42) பழந்தமிழ்ப்புதல்விகள் (ப. 65-95), பழந்தமிழ் இலக்கியம் (ப. 96-116), பழந்தமிழ் நிலை (ப. 117-141), பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் (ப. 142-157), பழந்தமிழ்ச் சொல்லமைப்பு (ப….

காசை கொடுத்துக் கருமாந்தரத்தை விலைக்கு வாங்காதீர்கள்!

   அன்றாடம் அதிகாலையில் எழுந்து இரவு வரை ஆங்கில வழிக்கல்வி, பள்ளியில் படிப்புச்சுமை அதன் பின்னர் சிறப்பு வகுப்பு; பெற்றோரின் தூண்டுதலால் தற்காப்புக்கலை(கராத்தே), ஒத்தியம்(ஆர்மோனியம்), நாட்டியம், பரதம், காணொளி ஆட்டங்கள் எனக் கசக்கிப்பிழியப்படல்: வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை விட்டால் கூடச் சிறப்புப் பயிற்சி வகுப்பு என மாணவ, மாணவியர்களுக்கு அடுக்கடுக்கான வேலைகள். இதற்கிடையில் என்றாவது ஒரு நாள் விடுமுறை விட்டால் கூடப் பண்டைய காலத்தில் விளையாடிய கோலிக்குண்டு, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கிட்டிப்புள், மணல் விளையாட்டு, சடுகுடு, நீச்சல் போன்ற எந்த…

இந்தியா என்பது ஒரு நாடல்ல! – ஆ.சு.மணியன்

  பல ஊர்கள் இணைந்தால் ஊராட்சி ஒன்றியம். பல நாடுகள் இணைக்கப் பட்டதால் நாமிருக்கும் நாடு ஒரு நாடல்ல. ஒன்றியமாகும். அதனால்தான் அரசியல் சட்டம்  இந்திய ஒன்றியம் என்கிறது. இன்னும் தெளிவாக ‘ஒன்றிணைக்கப்பட்ட இந்தியா’ என்கிறது. பலருக்கு இச்சொல் புதுமையாகத் தோன்றலாம். இசுலாமானவர்கள்கூட. ‘யூனியன் முசுலிம் லீக்’ என்று பெயரிட்டுள்ளனர். அதன் பொருள் அறிந்து பெயரிட்டுள்ளார்களா என்பது கேள்விக்குரியது.   ‘யூனியன் கேபினட்’ என்கின்றனர். அதன் பொருள் ஒன்றிய அமைச்சரவை / ஒன்றிணைக்கப்பட்ட அமைச்சரவை என்பது. ‘யூனியன்கவர்ன்மெண்ட்’ என்ற சொல்லைக் கேட்டிருக்கலாம் அதன்  பொருள்…

கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இரா.மோகன்

    கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில் சாதனை படைத்தவர். பாரதியாருக்கு அடுத்த நிலையில் புகழ் பெற்று விளங்கியவர் பாரதிதாசன்; பாரதியாருக்கு ஒன்பது ஆண்டுகள் இளையவரான இவர் 73 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர்.    கவிமணி சி.தேசிக விநாயகம் (பிள்ளை) (1876–1954) பாரதியாரை விட ஆறு ஆண்டு மூத்தவர்….

தேவதானப்பட்டியில் அப்துல்கலாமிற்கு இரங்கல் கூட்டம் – சிறப்புத்தொழுகை

  தேவதானப்பட்டியில் முன்னாள் குடியரசு தலைவர் ஆ.ப.சை.அப்துல் கலாம் மறைவையொட்டி நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டது.   கடைகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டுக் கடைகள் அடைக்கப்பட்டன; சட்டைகளில் கருப்புத்துணி அணிந்து துக்கத்தை வெளிப்படுத்தினர். அதன்பின்னர் தேவதானப்பட்டி முசுலிம் சமாஅத்து, வணிகர்கள் சங்கம், அனைத்துக் கட்சிமுன்னணியினர் காந்தித்திடலில் அமைதிவணக்கம் செலுத்தினார்கள். அஞ்சலிக்கூட்டத்தில் தேவதானப்பட்டி பேரூராட்சித்;துணைத்தலைவர் பி.ஆர்இராசேந்திரன், தேவதானப்பட்டி சமாஅத்துத் தலைவர் அப்துல் கபார்கான் முதலான பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஊர்வலமாகப் பள்ளிவாசலை வந்தடைந்தனர்.பள்ளிவாசலில் சிறப்புத்தொழுகையும், வழிபாடும் நிகழ்த்தப்பட்டன. இச்சிறப்பு வழிபாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பாப்புலர் பிரண்ட்டு ஆப் இந்தியா,…

தொட்டால் உயிர் சுடுமெனில் தொடாதே சாதியை! – வித்யாசாகர்

தொட்டால் உயிர் சுடுமெனில் தொடாதே சாதியை – வித்யாசாகர்   துருப்பிடித்த சாதி – அது திருத்திடாத நீதி, துண்டுத் துண்டாகி – இன்று உயிர்களைக் குடிக்கிறது சாதி.. தலைமுறையில் பாதி – அது கொன்று கொன்று விழுவதேது நீதி ? காதல்சருகுகளை – பிஞ்சுகளைக் கொன்று கடும் நஞ்சாய்ப் பரவுகிறது சாதி.. கருப்பு வெள்ளையில்லா ஒரே சிவப்பு இரத்தம், அது சிந்திச் சிந்தி நனைகிறது பூமி, செத்துமடிபவர் கீழெனில் சாகடிப்பவரை மேலென்னுமா சாதி ? “ச்சீ”.. கேட்கவே வெட்கம் செங்கல் வேகலாம், சாதியில்…

ஊர்சுற்றிப் பறவை நூல் வெளியீட்டு விழா

ஊர்சுற்றிப் பறவை (குமரி மாவட்டத்தில் ஒருவரலாற்றுப் பயணம்) நூல் வெளியீட்டு விழா. இடம்: கத்தூரிபாய் மாதர் சங்கக் கட்டடம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நாகர்கோவில். நாள்: ஆடி 24, 2046 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை, மாலை-4மணி வரவேற்புரை: கடிகை ஆன்றனி. தலைமை: முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னிலை: வழக்குரைஞர் ஆர். இராதாகிருட்டிணன், நூல் ஆய்வுரை: குமரி ஆதவன், நூல் வெளியிடுபவர்: காலச்சுவடு கண்ணன், நூல் பெற்றுக் கொள்பவர்: அ.கா.பெருமாள், வாழ்த்துரை :   மலர்வதி, மீரான் மைதீன், சோ.தமிழ்ச்செல்வன், ஏற்புரை: நூலாசிரியர் இராம் (இராமன் என்கிற காந்திராமன்)…