கலக்கமில்லா இலக்குவனார் – கவியோகி சுத்தானந்த பாரதியார்

    அலக்கண் வரினும் கலக்கமின்றி செந்தமிழ்க் கொடியை முந்துறத் தாங்கி தன்மானத்தைப் பொன்னெனக் காத்த நுண்மாண் புலவர்; நூல்பல பயின்று நன்மாணவரை நன்கு பயிற்றி வீரத் தமிழர்வெற்றிப் படையை ஊக்கிய செம்மல் உள்ளத் துடிப்பெலாம் நந்தமிழ் வாழ்கென நடக்கும் புரவலர் இலக்குவனாரின் இலக்கணச சிறப்பும் தனித்தமிழ்க் கொஞ்சும் இனித்த நடையும் நிமிர்ந்த வீறும் அமைந்த சீரும் எண்ணிஎண்ணி ஏத்திடுவோமே! – கவியோகி சுத்தானந்த பாரதியார்

இதழாளர் இலக்குவனார் வலியுறுத்தியவை

இதழாளர் இலக்குவனார் தாம் நடத்திய இதழ்கள் வாயிலாக வலியுறுத்தியவை 1.    இனிய எளிய தமிழ் நடை. 2.    அயல்மொழிக் கலப்பால் தமிழ் நாட்டின் எல்லை சுருங்கியதை உணர்ந்து பிறமொழிக் கலப்பு இன்றியே எழுத வேண்டும். 3.  இந்தி முதன்மை தமிழுக்கே அழிவு. எப்பாடுபட்டேனும்இந்தி முதன்மையைத் தடுத்தல் வேண்டும். 4.   ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்த பின் உயிராம் மொழி வாழ்வது எங்ஙனம்? எனவே இந்திய மொழிகள் அனைத்தும் இந்திமொழியாம் தேவநாகரியில் எழுதப்பட வேண்டும் என விதிக்கும்நடுவணரசின் முயற்சியை எப்பாடுபட்டேனும்…

தமிழ் மறுமலர்ச்சியின் குறியீடு பேராசிரியர் இலக்குவனார்

தமிழ் மறுமலர்ச்சியின் குறியீடு பேராசிரியர் இலக்குவனார்     கல்வித்துறையில் இருந்து போராட்டப் பாதையில் நடைபோட்டுத் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டவர் தமிழ்ப்புரட்சியாளர் பேராசிரியர் இலக்குவனார். இவ்வாரத்தில் பேராசிரியர் இலக்குவனாரின் நினைவுநாளான செப்.3 வருவதால் (கார்த்திகை 01, தி.பி.1940/17.11.1909 – ஆவணி 18, தி.பி.2004 / 03.09.1973) அவரை நினைவுகூரும் வகையில் சில படைப்புகள் இவ்விதழில் வெளிவந்துள்ளன. இதழ்கள், மலர்கள், நூல்கள் முதலானவற்றில் தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார்பற்றி வந்துள்ள கவிதைகள், கட்டுரைகள், கட்டுரைகளின் பகுதிகள்   தரப்பட்டுள்ளன.  வீரத் தமிழர்வெற்றிப் படையை ஊக்கிய செம்மல் எனக் கவியோகி…

மனங்கவர்ந்த செந்தமிழ் மாமணி சி.இலக்குவனார் – பட்டுக்கோட்டை குமாரவேல்

மனங்கவர்ந்த செந்தமிழ் மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார்                 என் மனம் கவர்ந்த ஆன்றோர்களில் முதன்மையானவர் செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் ஆவார். அவரை நான் முதலில் சந்தித்த பொழுதே அவரது உருவம் என் உள்ளத்தில் நன்கு பதிந்து விட்டது. அவரது கருத்துகளும் செயல்களும் எனக்கு உந்து சக்தியாய் விளங்கி என் முயற்சிகளில் நான் வெற்றி பெறச் செய்து விட்டது. என் முன்னோடி அறிஞர் ஆன்றோர் முனைவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களைப் பற்றிய எண்ணத்தைப் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.                 இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு…

‘மௌனத்தின் சாட்சியங்கள்’ புதினம் -அறிமுக விழா, திருப்பூர்

மௌனத்தின் சாட்சியங்கள்   புதினம் அறிமுக விழா திருப்பூரில் வருகின்ற ஆவணி 20, 2046 / 06-09-2015 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரைக்கும் நடைபெற உள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக்கழகம், தாருல் இசுலாம் இயக்கம், தியாகி இமானுவேல் பேரவை, இந்திய மக்கள்மதிப்பு முன்னணி(பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா), திருவள்ளுவர் இளைஞர் மன்றம், பகத்சிங்கு பொதுத் தொழிலாளர் சங்கம், பொதுவுடைமைக் கல்வி இயக்கம், இந்தியக் குமுக மக்களாட்சிக் கட்சி (எசு.டி.பி.ஐ கட்சி), ஆதித்…

கணித்தமிழ் எழுத்தரங்கம்

பன்னாட்டுப் படைப்பாளர் பல்துறை எழுத்தரங்கம் 1. கணித்தமிழ் எழுத்தரங்கம் பதின்மூவருக்குப் பரிசுகள் பங்கேற்பாளர்களுக்குக் கணித்தமிழ் ஆர்வலர் விருதிதழ்கள்   தமிழ்க்காப்புக்கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து ‘அகரமுதல’ மின்னிதழ் மூலமாகப் பன்னாட்டுப் படைப்பாளர் பல்துறை எழுத்தரங்கத்தை நடத்த உள்ளன. ஒவ்வோர் அறிவியல் துறையிலும் பாடநூல் நோக்கில் கட்டுரைகளையும் சொல்லாக்கங்களையும் (நல்ல) தமிழில் எழுதி அனுப்ப வேண்டும். இவை ‘அகரமுதல’ மின்னிதழ்த்தளத்தில் வெளியிடப் பெறும். கருத்தாளர்கள், தத்தம் கருத்துகளை கட்டுரைகளின் பின்னூட்டாகப் பதிய வேண்டும். அதன்பின் கட்டுரையாளர்கள் ஏதும் திருத்தம் இருப்பின் குறிப்பிட வேண்டும். கட்டுரைகளும்…

‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ தொடக்கவிழா – நூல் வெளியீடு

அன்புடையீர் வணக்கம். திஇநி-SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின்கீழ் மாணவர்களின் தமிழ்த் திறன்களையும் தமிழ் சார்ந்த கலைத் திறன்களையும் ஊக்குவிப்பதற்காகவும் அவற்றை அரங்கேற்றுவதற்குரிய மேடை அமைத்துத்தரவேண்டும் என்பதற்காகவும்  ‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ என்ற ஒரு அமைப்பு தொடங்கப்படவுள்ளது. இதன் தொடக்கவிழா ஆவணி 17, 2046 / 03.09.2015 வியாழக்கிழமையன்று  பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் விகடன் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துள்ள கணினித்தமிழ் – Tamil Computing என்ற எனது நூலும்…

தமிழ்அறம்பாடி வந்தஅறிஞன் ! – மா.கந்தையா

யார்  இவர் ? ! ” தமிழைப்  பழித்தவனை  என்தாய் தடுத்தாலும் விடேன் எதிரிகள்  கோடி  இட்டு அழைத்தாலும்  தொடேன் “ வஞ்சினம்  கூறிய  வாதில்புலவன்  பாவேந்தர் வழிவந்த  மறவன்   தமிழ்அறம்பாடி  வந்தஅறிஞன் ! சங்கத்துமது   ரையில்தமிழைப்  பங்கப்படுத்திப்   பேசிய ஓங்குபுகழ்  அறிஞரெனினும்  ஒவ்வாதசொல்  லைத்தாங்காது தமிழைப்  பழித்தவர்க்கு  தக்கறிவூட்டி கருத்தினை உமிழ்ந்து  தள்ளியதற்கு  ஓர்சான்று   உண்டன்றோ ! விடுதலையான  நம்நாட்டில்  கெடுதலையேதரும் பொருள்நிலையை சடுதில்மாற்றி  இந்தியநாடு  சமநிலைகாண  நிதிஅமைச்சராகவும் சர்ச்சிலொடு வாதிட்டுவென்று ‘சர்பட்டம் ‘  பெற்ற ஆர்….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 036. மெய் உணர்தல்

(அதிகாரம் 035. துறவு தொடர்ச்சி) 01.அறத்துப் பால்  03.துறவற இயல் அதிகாரம்  036. மெய் உணர்தல்   எப்பொருள் ஆயினும், அப்பொருளின் உண்மையை ஆராய்ந்தும் அறிதல்.   பொருள்அல்ல வற்றைப், பொருள்என்(று) உணரும்,      மருளான்ஆம், மாணாப் பிறப்பு.         பொய்ப்பொருள்களை, மெய்ப்பொருள்கள் என்று        உணர்தல், சிறப்[பு]இல்லாப் பிறப்பு. இருள்நீங்கி, இன்பம் பயக்கும், மருள்நீங்கி,      மா(சு)அறு காட்சி யவர்க்கு.         மயக்கத்தை நீக்கிய ஞானியார்க்கே,        தூயநல் பேர்இன்பம் தோன்றும். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு, வையத்தின்      வானம், நணிய(து) உடைத்து….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 035. துறவு

(அதிகாரம் 034. நிலையாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 035. துறவு  ஆசைகளை எல்லாம் அகற்றிவிட்டு வாழும், தூயநல் அறவாழ்வு.   யாதனின், யாதனின், நீங்கியான் நோதல்,    அதனின், அதனின், இலன்.   எவ்எவற்றின் பற்றுகளை விடுகிறாரோ,          அவ்அவற்றால் துன்பங்கள் இல்லை.   வேண்டின்உண் டாகத் துறக்க; துறந்தபின்,    ஈண்(டு)இயற் பால பல.     உயர்மதிப்பு வேண்டித் துறப்பார்க்குச்,        சமுதாயக் கடைமைகள் பற்பல.   அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல்வேண்டும்,    வேண்டிய எல்லாம் ஒருங்கு….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 034. நிலையாமை

(அதிகாரம் 033. கொல்லாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.துறவற இயல் அதிகாரம் 034. நிலையாமை   ‘வாழ்வும், செல்வமும், நிரந்தரம் அல்ல’என ஆராய்ந்தும் உணர்தல்.   நில்லாத வற்றை, “நிலையின” என்(று),உணரும்      புல்அறி(வு) ஆண்மை கடை.                                  நிலைக்காத அவற்றை, ”நிலைக்கும்”என        உணரும் அறிவு, கீழ்அறிவு.   கூத்தாட்(டு) அவைக்குழாத்(து) அற்றே, பெரும்செல்வம்    போக்கும், அதுவிளிந்(து) அற்று.          நாடகத்தைப் பார்க்க வருவார்,        போவார்போல், செல்வமும் வரும்;போம்.   அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்,…