ஒளிப்பதிவும் மொழிப்பதிவும் ஊடாடும் தங்கர் பச்சான் கதைகள் – பிரேம்

தங்கர் பச்சான் கதைகள் பின்னட்டைக் குறிப்பு     செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர் பச்சான், மண்ணைவிட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர். மனது கனக்கக் காட்சிப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது தங்கர் பச்சானின் உலகம். அவை இல்லாமல் போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வலியும் படிந்த கதைகளும் காட்சிகளும் அவரை மண்சார்ந்த கலைஞராக வைத்திருக்கின்றன. மரபைப் பற்றிய ஏக்கம்,…

ஆதித்தனார் விருது பெற்ற தங்கர் பச்சான் கதைகள் – அறிமுகம்

பகிர்தல்   எப்படி எனக்கு எல்லாத் திரைப்படங்களையும் பார்க்கப் பிடிக்காதோ அப்படித்தான் எல்லா எழுத்துகளையும் படிக்க முடிவதில்லை. போர் மூண்டு விட்டது. இனி வாளினை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனும்போதுதான் அரசனும் வாள் எடுப்பானாம். அதுபோலத்தான் பேனாவை கையில் எடுத்து வெற்றுத்தாளின் மேல் கையைப் பதிக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற் பட்டால் ஒழிய என்னால் எழுதவே முடிவதில்லை.  பல காலங்களில் பல்வேறுபட்ட மனநிலைகளில் எழுதப்பட்ட இந்தக் கதைகளை மொத்தமாக ஒருசேர ஒரே மனநிலையில் படித்துப் பார்க்கின்றபோது இதுவரை எனக்குத் தோன்றாத எத்தனையோ…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 12 : இலக்குவனார் திருவள்ளுவன்

(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 11தொடர்ச்சி)      84.] சங்க இலக்கிய ஓலைச்சுவடிகள் இவற்றுள் குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலலைபடுகடாம் ஆகியவற்றின் ஓலைச்சுவடிகள் இல்லை. அவ்வாறு இல்லை என்பதற்கான குறிப்புகள் இல்லை. பிறவற்றுள் ‘ஓலை எண் தேடுதல்’ பகுதி மட்டும் உள்ளது. சொல் தேடுதல் அமையவில்லை (பட உரு 67).    சிலவற்றுள் மேற்குறித்தவாறு தேடுதல் பகுதி ஓலை எண் வழி அறிவதற்கு உள்ளது. சிலவற்றுள் பின்வரும் வகையில் தேடுதல் பகுதி   அமைந்துள்ளது (பட உரு 68).     “சுவடி உள்ளடக்கம்” எனக்…

உச்சமான தலைவர் சி.பா.ஆதித்தனார்- ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன்

    ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 111- ஆவது பிறந்தநாளும் இலக்கிய பரிசளிப்பு விழாவும் நடைபெற்ற பொழுது மூத்த தமிழ் அறிஞர் விருதும் விருதுத் தொகை உரு..3இலட்சமும் பெற்ற ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார்:-அப்பொழுது அவர் பின்வருமாறு உரையாற்றினார் குடும்ப உறவு   ஐயா சி.பா.ஆதித்தனாரின் உள்ளக்கிடக்கை, வாழ்க்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பற்ற வாழ்வு நெறியாகும். அவரின் உன்னதமான உழைப்பே அவரை உயரச்செய்தது. தொழிலாளருடன், தொழிலாளராக வாழ்ந்து பத்திரிகையை உயர்த்திக்காட்டினார். நான் பார்த்த வரையில், ‘தினத்தந்தி’ குடும்ப உறவுபோல் எந்தப் பத்திரிகையிலும்…

சேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை

சேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை     செங்கை யாழ் என்னும் செங்கோட்டியாழ் அல்லது சகோடயாழை இசைத்த பெரும்பாணனாகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், கி.பி.ஆறாவது நூற்றாண்டில் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” திருஞானசம்பந்தர் காலத்தைச் சேர்ந்தவர். தொல்மரபாகிய யாழ் மரபும் பாணர் மரபும் தொடர்ந்து ஆறாவது நூற்றாண்டு வரை இருந்ததையும் மேலும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் பெருமானும் அம்மரபைப் போற்றிப் பாடியிருத்தலின் அக்காலம் வரை தமிழிசை மரபு அழியாமலே இருந்திருக்கின்றது என்பதையும் அறிகிறோம். –தமிழ்ச்சிமிழ்

மொழி உரிமை மாநாட்டுச் செய்திகள்

பிற படங்களுக்குச் சொடுக்கிக் காண்க: http://thiru2050photos.blogspot.in/2015/09/blog-post_30.html   தொன்மை மொழியான தமிழ் முதலான இந்தியாவின் பல்வேறு மொழிகளின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, பத்திரிக்கையாளரும், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கினைப்பாளருமான     திரு. ஆழி செந்தில்நாதன் அரும்பெரும் முயற்சியாக,   “மொழி உரிமை மாநாடு” சென்னையில் இரண்டு இடங்களில் இரு நாளாக (புரட்டாசி 02 & 03, 2046 / செப். 19 & 20, 2015) நடைபெற்றது,   தமிழ் முதலான பல்வேறு மொழி உரிமைக்கான தீர்மானங்களை உருவாக்குவதற்காகப் பல்வேறு தமிழ் அறிஞர்களும், செயல்வீரர்களும் வல்லுநர்களும், இணைந்து…

தினத்தந்தி தமிழர்களின் சொத்து – தங்கர் பச்சான்

    சி.பா.ஆதித்தனார் 111-வது பிறந்தநாள் மற்றும் இலக்கிய பரிசளிப்பு விழா நேற்று மாலை ராணி சீதை மன்றத்தில் நடந்தது.   சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு உரூ.2 இலட்சம் ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்காகப் பெற்ற தங்கர்பச்சான் ஏற்புரையாற்றினார். அப்பொழுது பின்வருமாறு தெரிவித்தார்:   இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை உயர்த்துவதற்காகத் தரப்படுகின்றன என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன். திரைப்படத் துறையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான். திரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2 புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 – 2015 தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25. கருத்தரங்கம் பற்றி   ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியை எழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற கலையாகவும் தொழில்நுட்பமாகவும் விளங்குவது எழுத்துருவியல் ஆகும். எழுத்துருக்களை ஒழுங்கமைப்பது என்பது, எழுத்துருவின் வடிவங்கள், புள்ளிக் கணக்கில் அவற்றின் உருவளவு, வரியின் நீளம், வரிகளுக்கு இடையேயான…

தமிழனுக்குச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் – வெ. இராமசுப்பிரமணியன்

  90 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழனுக்குச் சிறுதொழில், தன்முன்னேற்றம்பற்றிச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார்.   சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்தநாள் இலக்கியப் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் ஆற்றிய தலைமையுரை வருமாறு:- தமிழனின் அடையாளம்     73 ஆண்டுகளாகத் தமிழர்களின் அடையாளமாகவும், பத்திரிகைத் துறையில் அருந்திறல் புரிந்தும் ‘தினத்தந்தி’ வந்து கொண்டிருக்கிறது. ஒரு நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால் பொதுவாக அதற்கு நல்ல நேரம் இருக்க…

பறை எனும் தகவல் ஊடகம்

  எட்டுத் தொகையில் ஒன்றாகிய பரிபாடல் இசைத் தமிழ்ப்பாடல்களைக் கொண்ட நூலேயாகும். ஒவ்வொரு பாடலிலும் அந்தந்தப் பாட்டுக்குரிய பண் இன்னதென்பது குறிக்கப் பெற்றுள்ளது.   சிலப்பதிகாரத்தில் பல இசைப்பாடல்களும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றிற்கு விளக்கம் கூறும் அடியார்க்கு நல்லார், பல இசை நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அவற்றுள் சில மேற்கோள் எந்தஇசை நூலைச் சார்ந்தன என்று நம்மால் அறிய முடியவில்லை. அடியார்க்கு நல்லார் கூறும் பல இசை நூல்களின் ஆசிரியர் யார் என்பதை அறிய முடியவில்லை.   அவர் இசைநூல்களாக பெருநாரை, பெருங்குருகு,…

வா.மு.சே.திருவள்ளுவரின் ‘கவிவானம்’ வெளியீட்டு விழா

  வா.மு.சே.திருவள்ளுவரின் கவிவானம் வெளியீட்டு விழா   பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 ஞாயிறு மாலை 5.30

தமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர்! விவரம் அனுப்புவீர்! – தமிழ்க்காப்புக்கழகம்

நாம் தமிழரெனில் உறுதி ஏற்போம்! பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே! தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம்.   தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து…

1 2 15