இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி இலக்குவனார் – இரா. இளங்குமரன்

  “தமிழ் மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்” எனும் உயிர்ப்போடு எழுந்தது தமிழ்க் காப்புக் கழகம். “தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயிலுக!” என்னும் நான்மணிகளைச் செயற்படுத்தும் செம்மாப்புடன் நான்மாடக்கூடல் திருநகரில் ஆடி 22, தி.பி. 1993 / 06.08.1962 இல் எழுந்தது தமிழ்ப்பாதுகாப்புக் கழகம். அதன் தலைவரும் நிறுவனரும் பேராசிரியர் சி. இலக்குவனார். . . . .                                …

எனக்குப் பிடித்த திருக்குறள் – இலக்குவனார் திருவள்ளுவன்

எனக்குப் பிடித்த திருக்குறள்   எந்நாட்டவருக்கும் எக்காலத்தவருக்கும் ஏற்ற   உலகப் பொது நு}லாம் திருக்குறளில் ஏதேனும் ஒரு குறளை மட்டும் சுட்டிக் காட்டி நமக்குப் பிடிக்கும் என்று கூற இயலாது. இருப்பினும் நாம் அடிக்கடி நினைவு கூர்கின்ற திருக்குறள்கள் பல இருக்கும். அவ்வாறு நான் நினைவு கூர்கின்ற திருக்குறள்களில் முதன்மையான ஒன்றைக் கூற விழைகிறேன்,   திருவள்ளுவர் தம் தாய்நாடாகிய தமிழ்நாட்டையோ தாய் மொழியாகிய தமிழ்மொழியையோ எவ்விடத்தும் குறிப்பிடாமல் மக்கள் கூட்டத்திற்காகவே திருக்குறள் நூலைப் படைத்துள்ளார். இருப்பினும் உலக மக்கள் தோன்றிய தென்பகுதியில் வாழ்ந்தோரைக்…

திருவள்ளுவரைப் போற்றி இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்!

திருவள்ளுவரைப் போற்றி இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்! தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியம், சங்க இலக்கியம், குறள்நெறி ஆகியவற்றைப் பரப்புவதையும் தமிழ்க்காப்புப் பணிகளையும் தம் வாணாள் தொண்டாகக் கருதிப் பாடுபட்டவர்; தம் மாணவப்பருவத்தில் இருந்தே இப்பரப்புரைப் பணிகளிலும் காப்புப் பணிகளிலும் ஈடுபட்டவர்; தாம் பணியாற்றிய இடங்களில் எல்லாம் திருவள்ளுவருக்கு விழாக்கள் எடுத்தும் திருக்குறள் வகுப்பு நடத்தியும் குறள்நெறி பரப்பிய சான்றோர்; குறள்நெறி முதலான இதழ்கள் மூலமும் திருவள்ளுவர் புகழ் போற்றிய ஆன்றோர்.   “இன்றைய சூழ்நிலையில் மக்கள் அமைதிவாழ்வு பெறவும், பசி, பிணியற்று இன்புற்று…

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க!   தமிழ், தமிழர்களுக்கான கல்விமொழியாகவோ, ஆட்சிமொழியாகவோ, அலுவலக மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ, வணிக மொழியாகவோ, கலை மொழியாகவோ இல்லை என்பது இக்காலத்தில் வாழும் நம் அனைவருக்கும் இழிவு சேர்க்கும் நிலையாகும். இவை எல்லாவற்றிலும் மோசமான துயர நிலை என்பது தமிழ் தமிழர்களின் பேச்சுமொழி என்ற நிலையையும் இழந்துவருவதுதான்.   தமிழ், தமிழ்நாட்டின் மொழியாக நிலைப்பதற்குக் குறைந்தது மக்களின் பேச்சுமொழியாகவாவது இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் தமிழில் பேசுவோர் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘‘தமிழை வீட்டில் பேசுகிறோமே! எதற்குத் தமிழ்மொழிக்…

அருவினை ஏதுமில்லை – சொ.பத்மநாபன்

அருவினை ஏதுமில்லை அசைவிலா ஊக்கம் பெற்றால் திருவினை யாய்முடியும் திருக்குறள் நூல் கற்றால்! – அருவினை விதிசதி எல்லாம்சாயும் மதிவழி நாம்உழைத்தால் கதிஎன வள்ளுவத்தைக் கருத்தினில் நாம்பதித்தால்! – அருவினை பிரிவினை உணர்வகற்று உறவினை வளர்ப்பதற்கே நிறப்பகை தனையகற்று அறப்பகை செழிப்பதற்கே! உதிக்கின்ற செங்கதிர்போல் உலகிற்கே ஒளியூட்டும் நதிநீரைப்போல் நடந்து நமக்கெல்லாம் பயன்கூட்டும்! – அருவினை உருவத்தில் அறிவுமில்லை உயரத்தில் உயர்வுமில்லை பருவத்தில் பூப்பதெல்லாம் பயன்தரும் என்பதில்லை! சிரிப்பதும் அழுவதுவும் செயற்கையா? இயற்கையன்றோ! பிறக்கிறோம் பெண்வயிற்றில் பிறகிங்கு வேற்றுமை ஏன்? – அருவினை -திருக்குறள்…

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு      காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள் உருவாக்கப்படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும் வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே.      ஆரியத்தின் சாதியக்கருத்தைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஞாலப் புலவர் திருவள்ளுவரும் அவர் வழியில் பொதுமை நலன் நாடுவோரும் மறுத்து வருகின்றனர்.      “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்      உயிர் செகுத்து உண்ணாமை…

விண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்

ஆவணி 25, 2046 / செப்.11, 2015 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு விண் தொலைக்காட்சி – WIN TV ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று இந்திக்கு எதிரான குத்துகளைப் பதிய இருக்கிறேன்   http://wintvindia.com/   இணையத் தளத்திலும் காணலாம். மறு ஒளிபரப்பு செப்.11 இரவு – அஃதாவது செப்.12 வைகறை 1.00 மணி.   வாய்ப்புள்ளவர்கள் காண்க.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

கவிஞர் முடியரசன்- இ.மறைமலை

  கனி தமிழ்க் கவிதைபுனைந்த கரங்கள் கயிறு திரிக்கத் தொடங்கிவிட்ட இன்று, மக்கள் வாழ்வாம் கடலியக்கும் சுவைப்பாட்டாம் கண்ணான செந்தமிழைக் கட்டாயத் திணிப்பால் கடுகிவரும் காட்டுமொழியாம் இந்தி அழித்து வரும் இடுக்கண்ணான வேளையிலே, தமிழ் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தலையாய கவிஞர், தன்னுயிரை நல்குதற்கும் தயங்காது மொழிப்போரில் பங்கு கொண்ட பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கட்குப் பாவின்பம் நல்கிவரும் பாவலர் முடியரனேயாவார் என முட்டின்றிச் சொல்லவியலும். மறைமலையடிகளாரின் மாண்புடைத் தனித்தமிழ் இயக்கத்தைத் தகர்த்தெறிய முற்பட்ட, தீந்தமிழில் திரைக்கவிகளை எழுதித்திரட்டிவிட்ட சில தான்தோன்றிகளைப் போலன்றித், தமிழாலே உயிர் வளர்த்தும்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 043. அறிவு உடைமை

(அதிகாரம் 042. கேள்வி தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 043. அறிவு உடைமை கல்வி, கேள்விகளால் பெறுஅறிவின், இலக்கணமும், பன்முகப் பயன்களும்.   அறி(வு),அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்,       உள்அழிக்கல் ஆகா அரண்.   அழிவை நீக்கும் அறிவுக்கருவி, அழிக்க முடியாத உள்பாதுகாப்பு.   சென்ற இடத்தால் செலவிடாது, தீ(து)ஒரீஇ,       நன்றின்பால் உய்ப்ப(து), அறிவு.   அறிவு, நெறிப்படுத்தும்; தீது நீக்கும்; நல்லவற்றுள் சேர்க்கும்.   எப்பொருள், யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்,       மெய்ப்பொருள் காண்ப(து),…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 042. கேள்வி

(அதிகாரம் 041. கல்லாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 042. கேள்வி கற்றார் சொல்கேட்டு, அறியாதன அறிதற்கு, எளிமைமிகு நல்வழி.   செல்வத்துள் செல்வம், செவிச்செவம்; அச்செல்வம்,       செல்வத்துள் எல்லாம், தலை.        செல்வங்களுள் எல்லாம், தலைசிறந்த         செல்வம், கேள்விச் செல்வமே.   செவிக்(கு)உண(வு) இல்லாத போழ்து, சிறிது,       வயிற்றுக்கும், ஈயப் படும்.        காதுக்குக் கேள்வி நல்உணவு         இல்லாப்போதே, வயிற்றுக்குச் சிற்றுணவு.   செவிஉணவின் கேள்வி உடையார், அவிஉணவின்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 041. கல்லாமை

(அதிகாரம் 040. கல்வி தொடர்ச்சி)     02. பொருள் பால்  05. அரசு இயல்    அதிகாரம் 041. கல்லாமை           கல்விஅறிவு இல்லாமையால் உண்டாகும்,              பல்வகைத் தீமைகளும், இழிவுகளும்.   அரங்(கு)இன்றி, வட்(டு)ஆடி அற்றே, நிரம்பிய       நூல்இன்றிக், கோட்டி கொளல்.   நூல்அறிவு இல்லாது பேசுதல், அரங்குஇல்லாது சூதுஆடல் போல்.   கல்லாதான், சொல்காம் உறுதல், முலைஇரண்டும்      இல்லாதாள், பெண்காம்உற்(று) அற்று.    கல்லான் பேசவிரும்புதல், மார்பகம் இல்லாதாள் பெண்மை விரும்பல்போல்.   கல்லா தவரும்,…