தொந்திக் கரைசல் கண்டேன்! நொந்தேன்! – அரங்க கனகராசன் கனகு

தொலைக் காட்சியில் கண்டேன் … நொந்தேன்… கரைத்தாயிற்று கடலில்… வேதிக் கலவைகளும் கலக்கின கடல்தனை! தொந்தி உருண்டையை – ஏதோ வெல்லக்கட்டியென நினைத்து சுள்ளெனக் கடித்துத் தின்னவே வந்தனவே மீன்கள்! வேதிக் கலவையது – மீனின் பேதியானது! நோயின் வலையில் சிக்கி -பின்னர் மீனவன் விரித்த வலையில் மாண்டனவே! நோயுற்ற மீனை விலைக் கொடுத்துண்ட மாந்தரும் சிக்கினரே நோய்தனில்! அலைநீரில் வாழும் மீனவர் வாழ்வதும் பாழாகாதோ! பாழும் வேதிக் கலவை – விநாயகன் உருவில் ஆழ் கடல்தனில் கலந்திட்டால்? சிந்திப்பாருண்டோ – சந்தி சிரிக்காதோ…

தமிழ்வழிக்கல்வி குறித்து செய்திகள் 7 தொ.கா.வில் நான். . . .

  புரட்டாசி 11, 2046 / செப்.28, 2015 செய்தி 7 தமிழ்த் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு : இரவு 9.00 – 10.00 மணி கேள்விநேரம் நிகழ்ச்சியில் தமிழ்வழிக்கல்வி  குறித்து உரையாடுகிறேன். உடன் தோழர் தியாகுவும் உரையாடுகிறார். மறு ஒளிபரப்பு 12.01 இணையத்தில் காண : http://ns7.tv/ta நிகழ்ச்சியாளர் : செந்தில்;  ஒருங்கிணைப்பாளர் : அமீது அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

துலுக்கப்பயலே! 5 – வைகை அனிசு

(அகரமுதல 97, புரட்டாசி 3, 2046 / செப். 20, 2015 தொடர்ச்சி) 5 இராவுத்தர் கோயில்   தஞ்சாவூர் அருகே உள்ள திருவோணம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பாதிரங்கோட்டை என்ற ஊர். அங்கு இராவுத்தர் கோயில் உள்ளது. அக்கோயிலின் நுழைவு வாயிலில் எட்டடி உயரமுள்ள பிரமாண்டமான குதிரைச் சிலையும், அதன் அருகில் ஐயனார் சிலையும் உள்ளன. கையில் பெரிய வீச்சரிவாள், பெரிய மீசை பயமுறுத்தும் கண்களுடன் ஐயனார் காட்சியளிக்கிறார்.   ஐயனார் சிலையின் தலையில் முசுலிம்கள் அணியும் குல்லா உள்ளது. இவரைப் பெரிய இராவுத்தர்…

“முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” – அறிமுகம்

“முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 34   நாளிதழ்கள், இணைய இதழ்களில் வந்த ஆசிரியரின் காலத்திற்கேற்ற கட்டுரைகளே “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” என்ற கட்டுரைத் தொகுப்பாக வந்துள்ளது. இத் தொகுப்பின் ஆசிரியரான நா.முத்துநிலவன் உலகறிந்த பட்டிமன்றப் பேச்சாளர், பாடகர், கவிஞர், கட்டுரையாளர், சமூகச் சிந்தனையாளர், வலைப்பதிவாளர், கருத்தரங்குகளில் மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் முழங்குபவர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தாலும் பள்ளி ஆசிரியர் என்ற அவரின் தகுதிதான் இந்த நூலை இன்னும் வேகமெடுத்து…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 063. இடுக்கண் அழியாமை

(அதிகாரம் 062. ஆள்வினை உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 063. இடுக்கண் அழியாமை துன்புறினும், மனம்கலங்காது, வென்று நின்று, இன்புற்று வாழும்திறன்.   இடுக்கண் வரும்கால், நகுக; அதனை,       அடுத்(து)ஊர்வ(து), அஃ(து)ஒப்ப(து) இல்.         எத்துன்பம் வந்தாலும், இகழ்ந்து         சிரித்தலே அத்துன்பத்தை வெல்லும்வழி.   வெள்ளத்(து) அனைய இடும்பை, அறி(வு)உடையார்,       உள்ளத்தின் உள்ளக், கெடும்.      வெள்ளம் போன்ற பெரும்துயரும்,         சிந்தனை உறுதியால் சிதையும்.   இடும்பைக்(கு) இடும்பை, படுப்பர்; இடும்பைக்(கு)     …

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 11 இலக்குவனார் திருவள்ளுவன்

(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 10 தொடர்ச்சி) 46-64.] பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவற்றுள் 19 நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நாலடியார், நான்மணிக்கடிகை, கார்நாற்பது, களவழிநாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திணைஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, இன்னிலை ஆகிய நூல்களின் உரைப்பக்கத்தின் பொருளடக்கப் பக்கத்தில் உள்ள தேடுதல் பகுதியைச் சொடுக்கினால், பக்கம் தேடல், சொல் தேடல் வருகின்றன. பக்கங்களில் பக்க எண் தேடல் மட்டும் உள்ளது….

இனிதே இலக்கியம்! 4 – முத்தொழில் ஆற்றுநரே தலைவர் : – இலக்குவனார் திருவள்ளுவன்

  4   முத்தொழில் ஆற்றுநரே தலைவர் உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகி லா விளை யாட்டுடை யார், அவர் தலைவர்! அன்னவர்க் கேசரண் நாங்களே!   கவிப்பேரரசர் கம்பர் தம்முடைய இராமகாவியத்தில் எழுதிய தற்சிறப்புப்பாயிரம்.   “உலகங்கள் யாவற்றையும் தாம் உள்ளவாறு படைத்தலும் அவ்வுலகங்களில் உள்ள அனைத்து வகை உயிர்களையும் நிலைபெறச்செய்து காத்தலும் அவற்றை நீக்க வேண்டிய நேரத்தில் நீக்கி அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் இடைவிடாமல்(நீங்கலா) அளவற்ற(அலகுஇலா) திருவிளை யாடல்களாகப் புரிபவர் யாரோ, அவரே எங்கள்…

கண்ணியக் காவலர் குலோத்துங்கன் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழகம் மறக்கக்கூடாதவர்களுள் ஒருவர்!  தமிழக மக்கள், அரசியல் துறையில், இலக்கிய உலகில், கலைப்பணியில், என வெவ்வேறு வகைப்பாடுகளில் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய தகைமையாளர்கள் பலர் உள்ளனர். அத்தகையோருள் குறிப்பிடத்தக்க ஆன்றோர் கண்ணியம் ஆ.கோ.குலோத்துங்கன் ஐயா அவர்கள்.  “அன்று குலோத்துங்கனுக்காகக் கலிங்கத்துப்பரணி பாடினார் செயங்கொண்டார். இன்று செயங்கொண்டத்தில் குலோத்துங்கன் தமிழ்ப்பரணி பாடுகிறார். எழுத்துத் துறையில் நாளை ஒரு வேந்தனாகத் திகழ்வார்” என்று பேரறிஞர் அண்ணா இவரின் எழுத்துப்பணியைப் பாராட்டி உள்ளதே இவரின் சிறப்பினை அடையாளப்படுத்தும்.   தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர் தொழிலாளர்களின் உற்ற தோழனாக,…

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 8 – இலக்குவனார் திருவள்ளுவன்

8  ஙூ.) தமிழ்நாடு இணையத்தமிழ் மன்றம்:   இணையம் வழியாகத் தமிழ் வளர்ப்பதற்குக் கணிணியில் தமிழ்ப்பயன்பாடுகள் பெருக வேண்டும். இதற்கெனத் தமிழக அரசே, ‘தமிழ்நாடு இணையத்தமிழ் மன்றம்’ ஒன்றை அமைக்க வேண்டும்.   ‘தமிழ்நாடு இணையத் தமிழ் மன்றம்’ / ‘தமிழகக் கணித் தமிழ் மன்றம்’ என்ற ஏதேனும் ஒரு பெயரில் இணைய வழியிலான அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கென ஓர் அமைப்பு இன்றியமையாது வேண்டப்படுகின்றது.   ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ என்னும் அமைப்பு இருக்கும்பொழுது வேறு தேவையா என்ற எண்ணம் எழலாம். அந்த அமைப்பு…