கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

2   கணிணியியலில் ஆங்கில ஒலிபெயர்ப்பிலேயே கலைச் சொற்களும் தலைப்பெழுத்துச் சொற்களும் எண்ணிலடங்கா அளவு கையாளப்பட்டுத் தமிழ் மொழி சிதைந்து வருவதைப் பலரும் உணரவில்லை. ‘மணிப்பிரவாளம்’ என்ற பெயரில் மொழிக்கொலை புரிந்து பாழ்பட்ட நிலையிலிருந்து அண்மைக் காலத்தில் மீண்டுவரும் வேளையில் ஆங்கிலக்கலப்பு விளைவிக்கும் தீங்கைப் பெரும்பான்மையர் புரிந்து கொள்ளவில்லை. பிற அறிவியல் துறைகளில் நிகழும் சொல்லாக்கத் தவறுகள்தாம் கணிணியியலிலும் நடைபெறுகின்றன. ஆனால், பிற துறைகளுடன் ஒப்பிட முடியாத அளவு கணிணியியலில்தான் ஆங்கில ஒலிபெயர்ப்புச்சொற்கள் மிகுதியாகக் கையாளப்படுகின்றன. இவை முற்றிலும் உடனடியாகக் களையப்பட வேண்டும். சுருக்கக்…

சண்டாளக் காடையர் குடி யழிப்போம்!

சாக்காடு நாள்வரை யாம் மறவோம் ! கூடி எம் நாட்டில் களித் திருந்தோம் குடும்பமாய் நன்றாய் மகிழ்ந் திருந்தோம் முற்றத்தில் ஆடிக் கதைத் திருந்தோம் முழுநிலவு கண்டே வாழ்ந் திருந்தோம் அக்கையும் அன்னையும் சார்ந்திருந்தோம் அழகுத் தமிழை யாம் கற்றிருந்தோம் அம்மம்மா சொல்லும் கதை கேட்டோம் அம்மப்பா ஊட்டும் நெறி கண்டோம் ஒற்றுமை யோடே வாழ்ந் திருந்தோம் ஓர்நிலம் ஈழம் நினைந் திருந்தோம் மாவீர ரீகம் வணங்கி நின்றோம் மாயீழ விடுதலை பெற்றி ருந்தோம் தேசியத்தலைவரை வாழ்த்தி வந்தோம் தேசமே உயிரென்றே களி கூர்ந்தோம்…

சாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்

 சாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000  கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்     தன் சொந்த நாட்டில் குடியுரிமை, சாதிச்சான்றிதழ் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் சமூகங்களில் ஒன்று மலைவேடன் சமூகம். இந்தியாவில் சாதியை வைத்தே அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள். அதே வேளையில் சாதிச்சான்றிதழுக்காகவும் அலைக்கழிக்கப்படுகிறது ஒரு சமூகம். தேனி மாவட்டத்தில் பரசுராமபுரம், மீனாட்சிபுரம் அதன் அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு முதலான பகுதிகளில் மலைவேடன் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் மலைவேடன் சமூகத்திற்காக ஒரு வகுதியும்(வார்டும்) ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும்…

பனுவல் வரலாற்றுப் பயணம் 4 : திருக்கோவிலூர்

பனுவல் வரலாற்றுப் பயணம் 4 : கீழ்வரும் திருக்கோவிலூர் சுற்றியுள்ள பகுதிகள் திருவெண்ணெய்நல்லூர் 2. கிராமம் 3.திருக்கோவிலூர் சண்பை(சம்பை) – விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் ஜம்பை உள்ளது. இக்கல்வெட்டு உள்ள இடத்திற்குத் தாசிமடம் என்று பெயர். இது 198இல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. காலம்: பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டு (தோராயமானது ) மொழி: தமிழ் எழுத்து: தமிழி (சங்க காலத்தமிழ் எழுத்து) வழிகாட்டி : ஆய்வாளர் பேரா. பத்மாவதி, மங்கைஇராகவன் நாள் : புரட்டாசி 17, 2046 / அக்டோபர் 4,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 062. ஆள்வினை உடைமை

(அதிகாரம் 061.  மடி இன்மை தொடர்ச்சி)  02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 062. ஆள்வினை உடைமை ஏற்றுக் கொண்ட செயல்முடிக்க, இடைவிடாது செய்யும், நல்முயற்சி   “அருமை உடைத்(து)”என்(று), அசாவாமை வேண்டும்;       பெருமை, முயற்சி தரும்.        “முடியாதது” என்று, மலைக்காதே;          முயற்சி, பெருமையாய் முடியும். வினைக்கண், வினைகெடல் ஓம்பல்; வினைக்குறை      தீர்ந்தாரின், தீர்ந்தன்(று) உலகு      அரைகுறையாய்ச் செயல்கள் செய்யாதே;        செய்தால், உலகமும் கைவிடும். தாள்ஆண்மை என்னும், தகைமைக்கண் தங்கிற்றே,      வேள்ஆண்மை என்னும், செருக்கு….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 061. மடி இன்மை

(அதிகாரம் 060. ஊக்கம் உடைமை தொடர்ச்சி) 02.  பொருள் பால் 05.  அரசு இயல்  அதிகாரம் 061.  மடி இன்மை                          குடும்பத்தையும், குடியையும்  உயர்த்த முயல்வார் விடவேண்டிய சோம்பல்   குடிஎன்னும் குன்றா விளக்கம், மடிஎன்னும்       மா(சு)ஊர, மாய்ந்து கெடும்.       சோம்பல்தூசு படிந்தால், அணையாக்           குடும்ப விளக்கும் அணையும்.   மடியை, மடியா ஒழுகல், குடியைக்,       குடியாக வேண்டு பவர்.         குடியை, உயர்ந்த குடியாக்க         விரும்புவார், சோம்பலை விலக்குக.   மடிமடிக் கொண்(டு)ஒழுகும், பேதை பிறந்த       குடி,மடியும்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 060. ஊக்கம் உடைமை

(அதிகாரம் 059. ஒற்று ஆடல் தொடர்ச்சி) 02.  பொருள் பால் 05.  அரசு இயல் அதிகாரம் 060. ஊக்கம் உடைமை எவ்வகைச் சூழலையும் கலங்காது, எதிர்கொண்டு சமாளிக்கும் மனஉறுதி   ‘உடையர்’ எனப்படுவ(து) ஊக்கம்; அஃ(து)இல்லார்,       உடைய(து) உடையரோ மற்று?         ஊக்கம் உடையாரே, ‘உடையார்’;         மற்றையார், உடையார் ஆகார்.   உள்ளம் உடைமை, உடைமை; பொருள்உடைமை,       நில்லாது; நீங்கி விடும்.         ஊக்கமே, நிலைக்கும் பெரும்செல்வம்;         பொருள்செல்வமோ நில்லாது; நீங்கும்.   ”ஆக்கம் இழந்தேம்” என்(று), அல்லாவார்,…

வலைமச் சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

     கணிப்பொறி தொடர்பாகவும் பிறஅறிவியல் தொடர்பாகவும் மிகுதியான கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டி உள்ளன. அறிவியல் கலைச்சொற்கள் அவ்வப்பொழுது சொல்லாக்க ஆர்வலர்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. மேலும் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்கள் தேவை. இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட கலைச்சொற்களைக் கட்டுரையாளர்களும் நூலாசிரியர்களும் பயன்படுத்தினால்தான், இவற்றால் பயன் விளையும். இல்லையேல் விழலுக்கு இறைத்த நீர்தான்.   இனியேனும் படைப்பாளர்கள் தமிழ்க்கலைச் சொற்களையே பயன்படுத்தும் வேண்டுகோளுடன் கட்டுரையைத் தொடருகிறேன். கணிணிச் சொற்களில்  வலைப்பணி(Network) சார்ந்த கலைச் சொற்களைக் காணலாம்.   கலைச்சொல்லாக்க நெறிமுறைகள் குறித்துக்,‘கணிணியியலில் நேர்பெயர்ப்புச் சொற்களும்ஒலிபெயர்ப்புச் சொற்களும்’ என்னும் (செருமனியி்ல்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 059. ஒற்று ஆடல்

(அதிகாரம் 058. கண்ணோட்டம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 059. ஒற்று ஆடல் உள்,வெளி நாடுகளில், எல்லா நடப்புக்களையும், உளவு பார்த்தல்   ஒற்றும், உரைசான்ற நூலும், இவைஇரண்டும்,       தெற்(று)என்க, மன்னவன் கண்.         உளவும், உளவியல் நூல்தெளிவும்         ஆட்சியரிடம் அமைதல் வேண்டும்.   எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்       வல்அறிதல், வேந்தன் தொழில்.         எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்பவற்றை,         ஆட்சியான் உளவால் ஆராய்க.   ஒற்றினான் ஒற்றிப், பொருள்தெரியா மன்னவன்      …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 058. கண்ணோட்டம்

(அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 058. கண்ணோட்டம்  உயிர்கள்மீது கண்களின் ஓட்டம், அதனால் விளையும் இரக்கம்.   கண்ணோட்டம் என்னும், கழிபெரும் காரிகை,       உண்மையான், உண்(டு),இவ் உலகு.         இரக்கம் என்னும், பேரழகுப்         பண்பால்தான், உலகம் இருக்கிறது. 0572, கண்ணோட்டத்(து) உள்ள(து), உல(கு)இயல்; அஃ(து),இன்றேல்,       உண்மை நிலக்குப் பொறை.         இரக்கத்தால் உலகுஇயல் உண்டு;         இரக்கம்இலான் பூமிக்குச் சுமை. . பண்என்ஆம்? பாடற்(கு) இயை(பு)இன்றேல்; கண்என்ஆம்?      …

நான் – காரைக்குடி பாத்திமா அமீத்து

    நான் ஏதோசில கற்பனைகள் என்னுள்ளே எப்போதும்! மனிதவாழ்வே வேண்டா மரமாய்ப்பிறக்க வேண்டும்நான்! இளைப்பாறநிழல் கொடுத்து இனியகனிகள் அளித்து, பறவைகள் கூடமைத்துவாழ பாதுகாப்பளித்திட வேண்டும்நான்! நீராகநான்மாறி உயிர்களின் வேட்கைதீர்த்திட வேண்டும்நான்! காற்றாகமாறி அனைவரின் மூச்சாக வேண்டும்நான்! கல்லாகமாறி உளியால் சிலையாக வேண்டும்நான்! அலையாகமாறிப் பெருங்கடலில் சங்கமிக்க வேண்டும்நான்! மலராய்ப் பிறந்து மணம்தந்து உதிரவேண்டும்நான்! நிலவாய் உதித்து வளர்ந்து தேயவேண்டும்நான்! கடவுளோர்நாள் வந்தென்னிடம் கண்முன்னே தோன்றினால், ஈசலாகப் பிறந்து ஓர்நாளில் பிறந்துமடியும் வரமொன்று கேட்பேன் நான்…..நான்! நான், காரைக்குடி பாத்திமா அமீத்து, சார்சா தரவு…