தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – முதலறிவிப்பு

    நண்பர்களே, கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் வருகிற  புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 /அக்டோபர் 17 – 18  ஆகிய இரு நாளும்  சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் “தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – Tamil Typography Conference 2015’’ நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பதிவுகள் – விவரங்கள் கணித்தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் 30–09–2015 அன்று வௌியிடப்படும். கணித்தமிழ்ச் சங்கம் / உத்தமம் / ஆசிரியர் / மாணவர்களுக்கு 50% சலுகைக் கட்டணம் உண்டு. மீண்டும் விரிவான தகவல்களுடன்……

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 057. வெருவந்த செய்யாமை

(அதிகாரம் 056. கொடுங்கோன்மை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை   குடிமக்கள், அஞ்சி நடுங்கும்படி, கொடுமைச் செயல்கள் செய்யாமை   தக்காங்கு நாடித், தலைச்செல்லா வண்ணத்தால்,      ஒத்(து),ஆங்(கு), ஒறுப்ப(து), வேந்து.    தக்கபடி ஆய்ந்து, குற்றம்   மீளநடவாவாறு, பொருந்தத் தண்டிக்க.   கடி(து)ஓச்சி, மெல்ல எறிக, நெடி(து)ஆக்கம்,       நீங்காமை வேண்டு பவர்.         கடுமையாக மிரட்டி, மென்மையாகத்        தண்டிப்பதே, ஆக்க நீதி.   வெருவந்த செய்(து)ஒழுகும், வெங்கோலன் ஆயின்,       ஒருவந்தம்,…

பெருங்கவிக்கோ, தங்கர் பச்சான் ஆகியோருக்கு – சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசுகள்

‘  தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டு தோறும் அவருடைய பிறந்தநாளையொட்டி இலக்கியப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு  ‘சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழ்அறிஞர் விருது’, ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன்  உரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசை ‘‘கலைமாமணி’’ தங்கர்பச்சான் பெறுகிறார்.  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு (உரூ.2 லட்சம்) இவருடைய ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்குவழங்கப்படுகிறது. புரட்டாசி 10,  2046 / செப். 27, 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை…

இனிதே இலக்கியம் 3 விண்போல் பொதுவான கடவுள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 96, ஆவணி 27, 2046 / செப். 13, 2015 தொடர்ச்சி) 3 முத்தே பவளமே மொய்த்த பசும் பொன் சுடரே சித்தே என் உள்ளத் தெளிவே பராபரமே. கண்ணே   கருத்தே   என்கற்பகமே கண்நிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே.    எக்கடவுளரை வணங்குவோரும் போற்றி வழிபட உதவும் தமிழ்ப்பாடல்களுள் தாயுமானவரின் இப்பாடலும் ஒன்று. தாயுமானவர் திருப்பாடலில் உள்ள ‘பராபரக்கண்ணி’ என்னும் தலைப்பில் இடம் பெற்ற பாடல் இது.   விலைமதிப்பற்ற முத்தாகவும் பவளமாகவும் பொன்னொளியாகவும் உள்ளத்தின் தெளிவாகவும் இருக்கின்ற எல்லாவற்றிலும் மேலான…

கேள்விக்குறியாகும் பூட்டுத் தொழில் – வைகை அனிசு

பூட்டுத்தொழிலுக்குப் பூட்டு!  பழைய குடியேற்ற ஆதிக்கத்தின் மறுபெயர்தான் உலகமயமாக்கம். உலகமயம் மிகச் சிலரை இமயத்தில் ஏற்றிவிட்டுக் கோடிக்கணக்கான மக்களை வறுமைப் படுகுழியில், வாழ்வின் அதல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது. உலகமயம் என்னும் கொடுங்கோலன் உலகிலுள்ள ஏழை நாடுகளை அச்சுறுத்தி முதலாளித்துவக் கொள்கைகளை உள்ளடக்கியிருப்பதால் ஏழை மக்களைப் பற்றி அதற்கு அக்கறையில்லை. இதனால் அனைத்து நாடுகளிலுள்ள அடித்தட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களால் ஏழை நாடுகளிலுள்ள அனைத்து வளங்களும் இன்று வரை சுரண்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு சுரண்டப்படுவதால்…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் நூலறிமுக விழா

புரட்டாசி 12, 2046 / செப். 29, 2015 மாலை 6.00 சென்னை முனைவர் சா.பாலுசாமி  பேரா.பழ.முத்துவீரப்பன்  முனைவர் மறைமலை இலக்குவனார்     மணிவாசகர் பதிப்பகம்

கண்ணியம் ஐம்பெரும் விழா

 மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழா கண்ணியம் 45 ஆவது ஆண்டுவிழா கவிதைப்போட்டி – பரிசு வழங்கும் விழா போட்டி நடுவர்களைச் சிறப்பிக்கும் விழா நூல் வெளியீட்டு விழா புரட்டாசி 09, 2046 / செப். 26, 2015 பிற்பகல் 3.00 மாம்பலம் ஆ.சந்திரசேகர் திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை