கி.ஆ.பெ.விசுவநாதம் வெளியிட்ட ‘தமிழர்நாடு’ – நூல் வெளியீடு

காவியா பதிப்பகம் தமிழ்க்கலை இலக்கியப் பேரவை தொகுப்பும் பகுப்பும் : பேரா.கோ.வீரமணி ஐப்பசி 21, 2046 / நவ.07, 2015 மாலை 05.00 சென்னை   நூல் விலை உரூபா 1300/- அரங்கத்தில் உரூபா 800/ மட்டுமே

திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் – ஆய்வுரை 1. : இலக்குவனார் திருவள்ளுவன்

1     உலகப் பொதுநூலாம் திருக்குறள் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல். ஆதலால் உலக அறிஞர்களின் பாராட்டிற்குரிய நூலாகவும் திகழ்கிறது. திருக்குறளை அவரவர் நோக்கில் ஆராய்வதற்கு இடம் தரும் வகையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை யாத்துள்ளார். இதனால் சிலர் தாங்கள் சார்ந்துள்ள கருத்தியத்திற்கு ஏற்றாற்போல் திருக்குறளுக்குத் தவறான விளக்கம் அளித்துள்ள சில நேர்வுகளும் உள்ளன. எனினும் ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட திருக்குறள் இன்றைக்கும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. எப்பாலோரும் பாராட்டும் முப்பாலாம் திருக்குறள் வாழ்வியல் நூலாக, அறநூலாக, தலைமைக்கு வழிகாட்டும் நூலாக,…

நூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் – தொல்காப்பியர்

நூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் சிதைவெனப் படுபவை வசையற நாடின், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருள்இல் கூறல், மயங்கக் கூறல், கேட்போர்க் குஇன்னா யாப்பிற் றுஆதல், தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனம்கோள் இன்மை, அன்ன பிறவும் அவற்றுவிரி ஆகும். தொல்காப்பியர், தொல்காப்பியம், மரபியல்: 110

யாவினும் புண்ணியம் கல்வியறிவித்தலே!

யாவினும் புண்ணியம் கல்வியறிவித்தலே! வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளனவூர்கள் நகர்க ளெங்கும் பலபல பள்ளி தேடு கல்வியி லாதொ ரூரைத் தீயி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர் … …. … இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைக ளியற்றல் அன்ன சத்திர மாயிரம் வைத்தல் ஆல யம்பதி னாயிர நாட்டல் … …. அன்ன யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல். பைந்தமிழ்த் தேர்ப்பாகன்…

ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை! – பாரதியார்

ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை!  அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். “கான்பரென்சு’ என்றும் “மீட்டிங்’ என்றும் கூட்டங்கள் கூடிவிடிய விடிய வார்த்தைகள் சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமலிருக்கிறார்களே! பாரதியார்: தேசியக் கல்வி (கனடாவில்  பாரதி தமிழ்க்கல்வி தொடக்க விழாவில் எடுக்கப்பட்ட படம், தினகரன்,  24.07.15)

தன்மொழியைப் புறக்கணிப்பவன் ஆயிரம் மடங்கு குற்றம் புரிந்தவன் – பாரதியார்

தேசத்தின் உயிர், மொழியே!   ஒரு தேசத்திற்கு உயிர் அத்தேசத்தின் மொழியாகும். சுய பாசையைக் கைவிடுவோர் மூடத்தனமாகவோ பைத்தியம் பிடித்தோ தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். தற்கொலை செய்து கொள்ள யத்தனித்தால் அரசாங்கச் சட்டத்தின் படி குற்றமாகுமானால் தன்னையும், தன்னுடைய சன சமூகத்தையும் கொல்ல ஆரம்பித்து, தேச மொழி உதாசீனம் செய்பவன் ஆயிரம் மடங்கு அதிக குற்றங்களைப் புரிபவனாகிறான். சுப்பிரமணிய பாரதியார்

நிறைநலம் மரபு மருத்துவமனை தொடக்க விழா – மரு.வ.நா.தன்மானன்

ஐப்பசி 13, 2046 வெள்ளி அக்.30, 2015  காலை 9.00 அம்மன்கோயில் மேற்குத் தெரு, வடபழனி, சென்னை [தி.இரா.நினைவு(எசு.ஆர்.எம்.) மருத்துவமனை அருகில்]

சாதி வெறி அரசியல் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு மாநாடு

மா.இலெ.பொதுவுடைமைக்கட்சி மக்கள் விடுதலை இரசியப் புரட்சி நாள் ஐப்பசி 21, 2046 சனி  நவ.07, 2015 பிற்பகல் 2.30 – இரவு 9.00 மாதவரம், சென்னை தோழரே! வணக்கம். நவ -7 சென்னை, மாதவரத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! மீ. த. பாண்டியன் (Mee.Dha. Pandian)  

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 04 : ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015 தொடர்ச்சி) 4   தமிழர் மானத்தோடு வாழ வழிகாட்டியவர் தன் மதிப்பு இயக்கத்தலைவர் பெரியார் ஆவர். அதனால் இலக்குவனாருக்குப் பெரியாரிடம் பற்று ஏற்பட்டது. தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவனார்க்கு ஆசிரியர். இவர் சொல்வன்மை படைத்தவர். மாணவரிடையே தூய தமிழ்ப் பற்றை வளர்த்து வந்தார். தன்மதிப்பு இயக்கப் பற்றாளராக விளஙகினார். அதனால் ஆசிரியரைப் பின் பற்றி மாணவராகிய இலக்குவனாரும் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அதன் வழி நடந்தார்.   நீதிக்கட்சி பிராமணரல்லாதாரை எல்லா…

1 2 13