திருக்குறள் அறுசொல் உரை – 065. சொல்வன்மை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 064. அமைச்சு தொடர்ச்சி) 02. பொருள் பால்        06. அமைச்சு இயல் அதிகாரம் 065. சொல்வன்மை     கேட்பார் உள்ளம் கொள்ளும்படி, சொற்களைச் சொல்லும் வல்லமை.   நாநலம் என்னும் நலன்உடைமை, அந்நலம்,     யாநலத்(து) உள்ளதூஉம் அன்று.           எல்லாத் திறன்களுள்ளும் மிகச்சிறந்த         வெல்திறன் பேச்சுத் திறனே.   ஆக்கமும், கேடும், அதனால் வருதலால்,      காத்(து)ஓம்பல் சொல்லின்கண் சோர்வு.           வளர்ச்சியும், வீழ்ச்சியும், தரும்பேச்சைத்,         தவறு இல்லாது பேசுக.   கேட்டார்ப் பிணிக்கும்…

இனிதே இலக்கியம் 5 ‐ இறையே ஏற்பாயாக! : மாணிக்கவாசகர்

5  இறையே ஏற்பாயாக! மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே!   மாணிக்கவாசகரால் எழுதப் பெற்ற உவட்டாமல் இனிக்கும் திருவாசகத்தில் வரும் பாடல் இது. பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகம்.   “அருள் உடையவனே! நறுமணம்( விரைஆர்) நிறைந்த உன் திருவடிகள்பால்(கழற்கு), முழுமையாக…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு : 01: ம. இராமச்சந்திரன்

    முன்னுரை   செந்தமிழ்ப் பற்றும் சீர்திருத்தக் கொள்கையும் ஒருங்கே பெற்றவர் பேராசிரியர் இலக்குவனார். தமிழ்ப் புலமையும் தமிழ்த் தொண்டும் வாய்க்கப் பெற்றவர். தமிழ் வளர்ச்சியே தம் உயிர் எனக் கருதி வாழ்ந்தவர். வறுமை வந்து வாட்டியபோதும் செம்மை மனம் உடையவராய்த் திகழ்ந்தார். விருந்தோம்பும் பண்பை அயராது போற்றினார். தவறு கண்டபோது அஞ்சாது எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றார். இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர் இவர் என்று கூறலாம்.   அண்ணாவின் நட்பையும் பெரியார் ஈ. வே. ரா.-வின் பகுத்தறியும் பண்பையும் இனிதெனப் போற்றினார். இந்தி…

திருக்குறள் அறுசொல் உரை – 064. அமைச்சு : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 063. இடுக்கண் அழியாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 064. அமைச்சு அமைச்சர்தம் தகுதிகள், பண்புகள், ஆளுமைத் திறன்கள். செயற்பாடுகள்.   கருவியும், காலமும், செய்கையும், செய்யும்     அருவினையும், மாண்ட(து) அமைச்சு.           செய்கருவி, காலம், செயல்கள்,         செய்முறைகளில் சிறந்தார், அமைச்சர்.   வன்கண், குடிகாத்தல், கற்(று)அறிதல், ஆள்வினையோ(டு)     ஐந்துடன் மாண்ட(து) அமைச்சு.           கல்வி, குடிஅறிவு, குடிகாத்தல்,           முயற்சி, உறுதி அமைச்சியல்.   பிரித்தலும், பேணிக்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி – பேரா.சி.இலக்குவனார்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி   உலகினிற் சிறந்த வுயர்கலா புரியில்                 வணிக னொருவன் வான் பெருஞ் செல்வனாய்ச் சீருடன் வாழ்ந்து செல்லுங் காலை புதல்வர் மூவரும் புதல்வி யொருத்தியும் 5.     எச்சமாய் நிற்க இச்சையி னீட்டிய                 அருநிதி துறந்து ஆவி நீத்தனன் பெற்றோ ரீட்டிப் பேணிய பொருளை மைந்தரைப் போலவே மகளிர் தமக்கும் உரிமை யாக்கும் ஒருவிதி நினைந்து       தந்தை மாய்ந்தபின்தனயர் மூவரும் பொருள்மீ துற்ற பெருவேட் கையினால் தம்முடன் பிறந்த தங்கை நன்மணம் பெறுவா ளென்னிற் பெரும்பொருள்…