ஆரியக் கலாம் – முகிலன்

ஆரியக் கலாம்     (குறிப்பு: இறந்தவரை பற்றித் தூற்றும் எண்ணம் கொண்டு நான் இந்தக் கட்டுரையை வடிக்கவில்லை. கலாம் போல் இன்னும் பல அடிமைகள் உள்ளனர். அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில்தான் என் பணி செய்கிறேன்) “பிறர்க்கென வாழ்ந்து மடிவது மலையை விடக் கடினமானது, தனக்கென வாழ்ந்து மடிவது இறகை விட எளிதானது”. என்பார் மாபெரும் மக்கள் தலைவர் தோழர்.மாசேதுங்கு.   கடந்த ஆடி 11, 2046 /27-07-2015இல் இந்திய ஒன்றியத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இறந்து விட்டார். அதையொட்டி இந்திய…

வலைமச் சொற்கள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015) 5 ஐ.) இலி /இன்மை(null) நல்(null)  என்றால் வெறுமை அல்லது ஏதுமற்ற என்று பொருள்.  நல் என்னும் தமிழ்ச்சொல்லிற்கு நல்ல என்று பொருள்.  ஆனால், ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தினால் நல்ல என்னும்  பொருந்தாப் பொருள் அல்லவா தோன்றும். நல் என்று தமிழ்வரிவடிவிலேயே பயன்படுத்திவிட்டு நல் என்றால் நல்ல அல்ல என்று சொல்வதால் பயனில்லை. அந்த இடத்தில் வேண்டுமென்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கலைச் சொற்களைப் பயன்படுத்தும் இடங்களில் படிப்போர் தவறாகவே எண்ணுவர்….

இலக்கியவீதியின் மறுவாசிப்பு – இரா.கி.இரங்கராசன்

பாரதியவித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம் ஐப்பசி 13, 2046 வெள்ளி அக்.30, 2015 மாலை 6.30, சென்னை இலக்கிய அன்னம் விருது: மது.இராசேந்திரன் வணக்கம். ‘இலக்கியவீதி’யின் – ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த மாதம், ‘மறுவாசிப்பில்  இரா. கி.இரங்கராசன்’. தொடர்ந்து தங்கள் வருகையால் இலக்கியவீதி அமைப்பைப் பெருமைப்படுத்தும்  தங்களைனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.

தமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றியும் வேண்டுகோளும்

தமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றியும் வேண்டுகோளும்   எழும்பூர் ஆல்சு சாலையின் பெயரைத் ‘தமிழ்ச்சாலை’ என மாற்றி அதற்கான  பெயர்ப் பலகையைக் கடந்த திங்கள் முதல்வர் திறந்து வைத்தார்.   நாம் இதற்காக நன்றியையும் மேற்கொண்டு வேண்டுகோளையும் தெரிவிக்கிறோம்.   திரு மா.சுப்பிரமணியன் சென்னை மாநகரத் தலைவராக இருந்த பொழுது, பெயர்ப்பலகைகள் தமிழில் அமைய நடவடிக்கை எடுத்தார். அத்துடன் நீண்ட காலமாகத் தமிழமைப்பினர் வேண்டுகோள் விட்டவாறு தெருக்களுக்குத் தமிழறிஞர்கள் பெயர் சூட்டவும் முயற்சி மேற்கொண்டார்.  அப்பொழுது, அவருக்குத் ‘தமிழ்க்காப்புக்கழகம்’ சார்பில் பின்வரும்…

தமிழில் தேசியக் கல்வி – பாரதியார்

தமிழில் தேசியக் கல்வி   தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் மொழியில் நடத்த வேண்டுமென்பது பொருள்.   ஆரம்ப விளம்பரம் தமிழில் பிரசுரம் செய்யப்பட வேண்டும் பாடசாலைகள் தாபிக்கப்பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமின்றி பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலேயே பெயர் சொல்ல வேண்டும்.  ‘ஃச்லேட்டு’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது. பாரதியார் : ஞானபாநு, செப்டம்பர் 1915

“மொழிப்போர் – 50 மாநாடு” – தமிழ்த் தேசியப் பேரியக்கம்!

“மொழிப்போர் – 50 மாநாடு” மதுரையில் நடத்துகிறது தமிழ்த் தேசியப் பேரியக்கம்! பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்!     தஞ்சை மாவட்டம் – பூதலூர் வட்டம், ஆச்சாம்பட்டியில், தனியாருக்குச் சொந்தமான இயற்கை வேளாண் தோட்டமான ”செம்மை வனத்தில்”, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், ஐப்பசி 05, 2046 / அக். 22, 2015 காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.   தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில், பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் வந்து கலந்து கொண்டனர்.   சென்னையிலிருந்து, க. அருணபாரதி, பழ.நல். ஆறுமுகம், மதுரையைச் சேர்ந்த அ.ஆனந்தன், இரெ. இராசு, தஞ்சை…

கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த பழந்தமிழகம் – முனைவர் ப.கிருட்டிணன்

கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த பழந்தமிழகம் கல்வியாளர்கள் ‘நல்லிசைப் புலவர்’      ( தொல்.பொருள் 313.14) ‘புலன் நன்குணர்ந்த புலமையோர்’   (தொல்.பொருள் 12:3) ‘வாய்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.387:2) ‘நூல் நவில் புலவர்’   (தொல்.பொருள்.467:2) ‘உயர்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.482:3) ‘தொன்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.550:3) ‘நுணங்கு மொழிப் புலவர்’   (தொல்.பொருள்.653:5) என இனம் குலம் சுட்டாமல் பொதுப்படையாகப் பாராட்டப் பெற்றனர். மிக எளிய குலத்தில் பிறந்த பாணர்கள் கூடத் தம் கலைச் சிறப்பால், ‘முதுவாய் இரவலர்’     (சிறுபாண். 40; புறம் 48:7)…

குல வேறுபாடில்லை; கற்றவர்க்கே சிறப்பு

பழந்தமிழ் நாட்டில் குல வேறுபாடில்லை; கற்றவர்க்கே சிறப்பு   நாடு தழுவிய ஒரே பண்பாடு. ஓரினப் பான்மை உருவாவதற்குக் காரணமாக இருந்தவற்றில் முதலானது பரந்து விரிந்துபட்ட கல்வியாகும். தமிழ்நாட்டில் நிலையான வருண வேறுபாடு அதன் காரணமாக ஏற்படும் உயர்வு தாழ்வு ஆகியன சங்கக் காலத்தில் வலுவாக இருந்ததில்லை. ஏன்? தமிழ்நாட்டு வரலாற்றில் எந்தக் காலத்திலுமே இருந்ததில்லை. காரணம், அப்பண்பு தமிழ்நாட்டுக்குரிய பண்பே அன்று. எக்குலத்தவராயினும் ஒருவர் கல்வியில் உயர்வு பெற்றிருந்தால் அவருக்குச் சமுதாயத்தில் மிகுந்த மதிப்பு இருந்தது. எந்த மன்னனின் அவைக்கு வேண்டுமாயினும் சென்று…

உணர்த்துவோம் பகைக்கு! – பரணிப்பாவலன்

எந்நாளோ? உனக்காய்ப் பேசா உயிரிலா இந்தியம் உடைந்து வீழ்ந்திடும் உயிர்நாள் என்றோ தனக்காய் உலவிடும் தடியர் கும்பல் தலையிலா கிடந்திடும் திருநாள் எதுவோ சினத்துடன் இம்மண் சீறியே கிளர்ந்து சிறைகளை உடைக்கும் சீர்நாள் அதுவே எனக்கு விடுதலை என்பேன் முதுபெரும் எம்மினம் மகிழ்ந்திடும் இன்பநாள் உரைப்பேன் கணக்கிலா சாவுகள் களத்தில் கண்டும் கயவரின் பிடியில் காண்பதா நாடு மணக்கும் தாய்மண் மரிக்கும் நிலையில் மடையர் கைக்குள் மாயினம் இருப்பதா? பணம்தான் பெரிதெனப் பிணமாய் வாழ்ந்திடும் பண்பிலா விலங்கே பறைவாய் இங்கே வணங்கும் தமிழ்நிலம் வடவர்…

களப்பால் குமரனின் கல்வி மொழிகள்

  எவை எவை கற்க அவைஅவை கற்றபின் அவை அஞ்சாமை தோன்றும் களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:1: பக்கம்.7 + + + அவைஅஞ்சி ஒழுகும் பேதையர்முன் பொய்யா புகழ் பெறுவர். களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:3: பக்கம்.7 + + + பொருந்தப் பொருளுரைக் கூற, அவையோர் பொறுமை காத்தல் இழிவு. களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:7: பக்கம்.7 + + + பிணம் பறிக்கும் பயிற்சி நல்கும் தொழில் பிணம் தழுவிப் பெறும்…