தமிழ் வழிக் கல்வியே அறிவுடையோர் கொள்கை – பாரதியார்

  தமிழ்நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானால் சகல சாத்திரங்களும் தமிழ் மொழி மூலமாகவே கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை நமக்குள்ளே அறிவுடையோர் எல்லோரும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை அனுசரணைக்குக் கொண்டு வருவதற்குத் தக்கபடி நமக்குள்ளே சக்தி பிறக்கவில்லை. பைந்தமிழ்த் தேர்ப்பாகன் சுப்பிரமணிய பாரதியார்  

ஆங்கிலக் கல்வியால் பயனில்லை – பாரதியார்

ஆங்கிலக் கல்வியால் பயனில்லை கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர்பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்; அணிசெய் காவிய மாயிரங் கற்கினும் ஆழ்ந்தி ருக்குங் கவியுளம் காண்கிலார்; வணிக முப்பொரு ணூலும் பிதற்றுவார்; வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்; துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள் சொல்லு வரரெட் டுணையப்பயன் கண்டிலார் பாரதியார் பாரதி தன்வரலாறு (சுயசரிதை)

மெய் – முகிலை இராசபாண்டியன்

  வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் முத்தம்மா. நாலு வீட்டுக்குத் துணி துவைத்துப் பிழைக்கும் பிழைப்பும் போய் விடுமோ என்று அவளுக்குக் கவலையாக இருந்தது.   பத்து மணிக்கு வழக்கறிஞர் வீட்டுக்குத் துணி துவைக்கப் போயிருந்தாள். அதன் பிறகு பயிற்றுநர் வீடு, வைப்பக அலுவலர் வீடு என்று பல வீடுகளுக்கும் துணி துவைத்துவிட்டு ஒரு மணிக்குத்தான் திரும்பினாள்.   மற்றவர்கள் வீட்டுத் துணியைத் துவைத்தது எதுவும் அவளுக்கு நினைவில் இல்லை. வழக்கறிஞர் வீட்டுத் துணியைத் துவைத்தது மட்டும்தான் நினைவு வந்தது.   வழக்கறிஞர்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 4 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 101 ஐப்பசி 01, 2046 / அக். 18.10.2015 தொடர்ச்சி) கரையிடை யிட்ட காட்டா றிரண்டு கலந்தொன் றாகிக் கரைகடந் தோட எதிர்ப்படு பொருளெலாம் சிதைப்படு தன்மையின் குலமுங் குடியும் கொடிய சாதியும் உயர்வும் தாழ்வும் உறுமணச் சடங்கும் எல்லாக் குப்பையு மிரிந் தோடினவே இருவருங் கரந்தனர் எய்தின ரின்பம் இரண்டுட லென்பதை யிருவரு மறந்தனர் “மணந்த நிகழ்ச்சி வணிகர் அறிந்திடில் உலற லெய்துவர் ஒருங்கே யழிப்பர்” என்றறிந் திருவரும் எவருங்காணா இயல்பினி லொழுகி இன்பந் துய்த்தனர் இவர்கள் செயலில் எட்டுணை ஐயமும்…

ச.அ. டேவிட்டுஐயா நினைவேந்தல்

தமிழர் தேசிய முன்னணி –  மா.பெ.பொ.க. இணைந்து நடத்தும் ஈழ விடுதலைப் போராளி ச.அ. டேவிட்டு ஐயா அவர்களின் நினைவேந்தல் நாள் :     திருவள்ளுவர் ஆண்டு 2046 துலைத்திங்கள் 14ஆம் நாள் (31-10-2015) காரிக்கிழமை மாலை 5.00 மணி இடம் :     சென்னை, நீலி வீராசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்,  சிவ. இளங்கோ கட்டடம். தலைமை  :     தோழர் வே. ஆனைமுத்து படத்திறப்பு :     ஐயா பழ. நெடுமாறன் வரவேற்புரை    :     திரு. பா. இறையெழிலன் இரங்கலுரை     :     கவிஞானி…

‘திராவிடம்’ அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை – மு.வ.

‘திராவிடம்’ அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை – மு.வ. தமிழ் இலக்கியம் ஏறக்குறைய 25 நூற்றாண்டு் வரலாறு உடையது.# தென்னிந்தியாவின் மற்றத் திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. 8 – ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றியவை. ஆகையால், அதற்கு முந்திய 12 நூற்றாண்டுக் காலத் தமிழ் இலக்கியம் ஒரு கூட்டுக் குடும்பத்தின் முதல் குழந்தை போல் தனியே வளர்ந்து வந்தது. சங்கக் காலத்துக்கும் கி.பி. 7 – நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சமற்கிருதம் கற்ற அறிஞர்களின் உறவு தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது. சைன…

இனிதே இலக்கியம் – 8 எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர்

8 எண்ணுவோர்க்கு எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர் ஒன்றே யென்னின் ஒன்றேயாம் பலவென் றுரைக்கிற் பலவேயாம் அன்றே யென்னின் அன்றேயாம் ஆமே யென்னின் ஆமேயாம் இன்றே யென்னின் இன்றேயாம் உளதென் றுரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா   கம்பரின் இறை வணக்கப் பாடல்களுள் இதுவும் ஒன்று.   “கடவுள் ஒருவரே என நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கடவுள் ஒருவன்தான்; வெவ்வேறு கடவுள்களாக நம்புவோருக்குப் பலவாகத் தோற்றமளிக்கிறார். அஃதாவது கடவுள் எல்லா உயிர்களையும் இயக்கும் ஒரு தனிப் பெரும் ஆற்றல்…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –16 : இலக்குவனார் திருவள்ளுவன்

16 சமய இலக்கியங்கள் அட்டவணை – 04 (தேடுதல் தொடரும்) -இலக்குவனார் திருவள்ளுவன்

குறும்புக் கவிதைகள் – தமிழ்த்தேனீ

குறும்புக் கவிதைகள் – தமிழ்த்தேனீ மின்னூலாக்கம்   உரிமை –  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். “கவிதை “   முகில்களின் இடைவெளிகளில் கதிர் பரப்பி ஒளிக்கதிர்களாய் தோன்றுவது கவிதை. பலகணி வழியே ஒளி வெள்ளமாய்ப் பெருகி வருவது போன்றது கவிதை.   மேற் கூரையின் இடைவெளிகளில் ஊடுருவி வரும் ஒளிக் கோலங்கள்தான் கவிதை.  ஒரு புள்ளியில் தொடங்கி முழுமை பெறும் கோலம் போன்றது கவிதை.  சிற்றுளியின் வண்ணத்தால் சிற்பியின் எண்ணத்தால் கற்பனையால் விளையும் சிற்பம் போன்றது கவிதை. கவிதை எனும் சொல்லிலேயே கற்பனை விதை அடங்கி…

திருக்குறள் அறுசொல் உரை –076. பொருள் செயல் வகை : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 075. அரண் தொடர்ச்சி) 02. பொருள் பால்     09. பொருள் இயல் (கூழ் இயல்) அதிகாரம் 076. பொருள் செயல் வகை. செல்வத்தின் தன்மை, தேவை, சிறப்பு, திரட்டும் வழிமுறைகள்.   பொருள்அல் லவரைப், பொருள்ஆகச் செய்யும்    பொருள்அல்ல(து), இல்லை பொருள்.   மதிப்பு இல்லாரையும், மதிப்பு உள்ளாராக மாற்றுவது செல்வமே.   இல்லாரை, எல்லாரும் எள்ளுவர்; செல்வரை,    எல்லாரும் செய்வர் சிறப்பு.            செல்வம் இல்லாரை, எல்லாரும் இகழ்வார்; உள்ளாரைச் சிறப்பிப்பார்.   பொருள்என்னும் பொய்யா விளக்கம்,…

திருக்குறள் அறுசொல் உரை – 075. அரண் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 074. நாடு தொடர்ச்சி) 02. பொருள் பால் 08. அரண் இயல் அதிகாரம்   075. அரண்  நாட்டிற்குத் தேவையான இயற்கை, செயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்கள். ஆற்று பவர்க்கும், அரண்பொருள்; அஞ்சித், தம்    போற்று பவர்க்கும் அரண்.    போரைச் செய்வார்க்கும், அஞ்சுவார்க்கும் கோட்டையே தக்கதோர் பாதுகாப்பு.   மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல்    காடும், உடைய(து) அரண்.   ஆழ்அகழி, வெட்டவெளி, மலைகள் காடுகள் கொண்டது அரண். உயர்(வு),அகலம், திண்மை, அருமை,இந் நான்கின்    அமை(வு)அரண் என்(று),உரைக்கும் நூல்.  …

திருக்குறள் அறுசொல் உரை – 074. நாடு : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 073. அவை அஞ்சாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 07. நாட்டு இயல்   அதிகாரம் 074. நாடு     நாட்டின் இலக்கணம், சிறப்புகள், நாட்டு மக்கள்தம் பண்புகள். தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்(வு)இலாச்    செல்வரும், சேர்வது நாடு.          தொடர்விளைவு, தக்கார், உயர்மனச்        செல்வர், இருப்பது நல்நாடு.   பெரும்பொருளால் பெள்தக்க(து) ஆகி, அரும்கேட்டால்    ஆற்ற விளைவது நாடு.            பெரும்பொருளால், கேடும் இல்லா        நிறைவிளைவால், அமைவது நாடு.   பொறைஒருங்கு மேல்வரும்கால்…