புறப்படு புறப்படு பேய்மழையே! – மு.பாலசுப்பிரமணியன்

புறப்படு புறப்படு பேய்மழையே! வா வா மழையே என்றழைத்தோம் வந்து கொட்டித் தீர்க்கின்றாய் சாவா வாழ்வா நிலை எமக்கு சற்றே பொறுக்க மாட்டாயா? போய்வா என்றே சொல்கின்றோம் புறப்படு புறப்படு பேய்மழையே! தாய்பிள்ளை முதியவர் தவிக்கின்றார் தாமதம் இனியும் ஏன் மழையே ஊடகம் முழுதும் உன்னாட்சி உயிருக்கு போராடும் நிலையாச்சு நாடகம் ஏனோ பேய்மழையே நலங்கெட பெய்தல் முறையாமோ? எங்கே பேரிடர் என்றாலும் எங்கள் மக்கள் உதவிடுவார் இங்கே வெள்ளம் சூழ்கையிலே எங்கே போவார் எம்மக்கள்? இயற்கையே சீற்றம் குறைத்துவிடு இனியும் வேண்டாம் விளையாட்டு…

புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் சங்கரதாசு சுவாமிகள் விழா

நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் விழா   புதுவைத் தமிழ்ச் சங்கம் நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கார்த்திகை 19அ 2046 / திசம்பர் 05, 2015 அன்றுநடைபெற்றது.   புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து விழாவுக்குத் தலைமை வகித்தார். புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு,பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். புதுவைத் தமிழ்ச் சங்கத்  துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச் செம்மல் சீனு, வேணுகோபால்  பொருளர் தி.கோவிந்தராசு, துணைச் செயலர் பாவலர் கோ.கலியபெருமாள்  ஆகியோர்…

பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் வரலாற்று ஆவணம் – மறைமலை இலக்குவனார்

பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் 3 மறுமலர்ச்சிக் காண்டம் நூலிற்கு முனைவர் மறைமலை இலக்குவனாரின் அணிந்துரை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் நாடறிந்த நற்றமிழ்ப்பாவலர். உலகைப் பலமுறை (49 தடவை) வலம் வந்த ஒரே தமிழறிஞர். ‘கெடல் எங்கே தமிழின் நலம்!அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!’ எனும் புரட்சிக்கவிஞரின் ஆணையைத் தம் வாழ்நாள்பணியெனக் கொண்டு செயலாற்றும் தமிழ்மறவர். கரிகாற்பெருவளத்தானையும் சேரன் செங்குட்டுவனையும் நிகர்த்த தமிழ் மறம் கொண்ட தமிழ் உரிமைப்போராளி. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’என்னும் திருநாவுக்கரசரின் வாக்கையேற்றுத் தமிழ்ப்பகை கடியும் தறுகண்மை மிக்கவர். தமிழுக்குச் செம்மொழித்தகுதிப்பேறு வழங்கவேண்டுமென அற்றைத்…

ஆரியர் தமிழர் தொடர்பால் சமற்கிருதத்தை அமைத்துக் கொண்டனர் – பாவாணர்

இந்திய நாகரிக அடிப்படை தமிழ் நாகரிகமே!   இந்திய ஆரியர் பிற்காலத்தில் தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே, சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய நடை வழக்கை அல்லது பொத்தக மொழியை அமைத்து, அதிற் பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் மொழிபெயர்த்துக் கொண்டனர். இது என் ‘வடமொழி வரலாறு‘ என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும்.   தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள். தமிழ் தோன்றியது முழுகிப்போன குமரிக்கண்டத்தில் 50,000 ஆண்டுகட்குமுன். தமிழ் நாகரிகம் தோன்றியது 20,000 ஆண்டுகட்குமுன். தமிழிலக்கண விலக்கியம் தோன்றியது கி.மு.10,000 ஆண்டுகட்குமுன். இதன்…

உங்கள் ‘தேசிய’த்தில் சென்னை இல்லையா? – வெ.சந்திரமோகன்

உங்கள் ‘தேசிய’த்தில் சென்னை இல்லையா?   மழை எவ்வளவோ அசிங்கங்களை வெளிக்கொண்டு வருவதுபோல ஊடகங்களின் அரசியலையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்தைப் பெருமளவில் பாதித்த – குறிப்பாகச் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் முதலான மாவட்டங்களில் பெய்த – கனமழையும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளமும் சேதங்களும் வட இந்திய ஊடகங்களின் கவனத்துக்குச் சென்றதாகவே தெரியவில்லை.   “வட இந்திய மாநிலங்களில் நிகழும் எந்தச் செய்தியானாலும் பரபரப்பாக வெளியிடும் ஆங்கிலம், இந்தி அலைவரிசைகள், செய்தித் தாள்கள் சென்னை வெள்ளத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. சீனா போரா கொலை…

நெடுந்துயர் அகன்றேயோடும் ! – எம்.செயராமன்

வான்முகில் வளாது பெய்கவென வாயார வாழ்த்துப் பாடி வையத்தில் விழாக்கள் தோறும் மனமாரப் பாடி நிற்போம் வாழ்த்தினைக் கேட்டு விட்டு வானுறை தேவர் எல்லாம் வையகம் வாழ்க எண்ணி மாமழை பொழியச் செய்வர் வறண்டு நிற்கும் பூமியெல்லாம் வான் மழையைக் கண்டுவிட்டால் மகிழ்வு கொண்டு வானோக்கி மனதார நன்றி சொல்லும் வயல்நிறையும் குளம் நிறையும் வயலுழுவார் மனம் மகிழும் தினமும் மழை பெய்கவென தீர்மானம் எடுத்தும் நிற்பார் அகமகிழ வைக்கும் மழை ஆபத்தைத் தந்த திப்போ அனைவருமே மழை பார்த்து அலமந்தே நின்று விட்டார்…

சென்னை வெள்ளம் கடலூரை மூழ்கடித்து விட்டதா? – என்.முருகவேல்

கடலூரில் இடைவிடாத கொட்டும் மழை!   கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாவட்ட மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். நவ.9 பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் கடலூர் மாவட்டத்தை புரட்டிப்போட்டு, 66 உயிர்களை பலிவாங்கியது. இந்த நிலையில் ஆறுதல் தரும் விதமாக மழை சற்று விட்டு விட்டுப் பெய்த நிலையில் துயரீட்டு உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்தன.   இந்த நிலையில் கடந்த ஒருவார காலமாகப் பெய்துவரும் கனமழையால் மாவட்டம் மீண்டும் தத்தளிக்கிறது. கெடிலம், தென்பெண்ணையாறு, பரவானாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது….

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09:   தொடர்ச்சி) இயல் – 4 இலக்குவனார் கவிதைகள் – பகுப்பாய்வு   இலக்குவனார், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களையும் பாடியுள்ளார். ‘ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென    நாலியற் றென்ப பாவகை விரியே’         (தொல்-செய்) என்று பாவகை நான்கென்பர் தொல்காப்பியர். இவை தவிர விருத்தம், கண்ணி, கீர்த்தனை முதலிய பா இனங்களையும் இலக்குவனார் பாடியுள்ளார். கவிஞர் பாடியுள்ள கவிதைகளைக் கீழ்வருமாறு பகுக்கலாம். நெடுங் கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள் கையறுநிலைக் கவிதைகள் அங்கதக்…

சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? – செந்தலை கவுதமன்

ஓடிவந்த கொலைமழையில் ஓடியதோ சாதிமதம் தேடிவந்த உதவிகளில் தெரிந்ததெலாம் மனிதமனம் திறந்துவைத்த கோவில்களில் தெய்வமெலாம் மனிதர்களே மறந்துவிட்ட சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? செந்தலை கவுதமன்

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 2/3 – வாலாசா வல்லவன்

(பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 1/3 தொடர்ச்சி) 2/3 ஆந்திராச் சிக்கல் குறித்து திராவிடர் கழக நடுவண் மேலாண்மைக்குழு 11-1-1953இல் நிறைவேற்றிய தீர்மானம்: (அ) ஆந்திர நாடு பிரிவினையில் ஆந்திரர்கள் பிடிவாதமாக இருப்பதால் ஆந்திரநாட்டைப் பிரிப்பதில் காலதாமதம் செய்யாமல் உடனடியாகப் பிரித்து விடவேண்டுமென்று இக்குழு தெரிவித்துக் கொள்ளுகிறது.   அப்படிப் பிரிப்பதில் ஆந்திரநாட்டினரிலேயே சிலர் பிரிவினைக்கு முட்டுக்கட்டை போடுகிற மாதிரியில் தாங்கள் பிரிந்துபோன பின்பும் எஞ்சியுள்ள சென்னை நாட்டில் தங்களுக்குச் சில உரிமையோ சலுகையோ அதாவது பொது நீதிமன்றம், பொது ஆளுநர் முதலியவை சென்னையிலிருக்க…

இன்றியமையா உணவுப் பொருள்களை இலவசமாக வழங்குக! – கு.இராமக்கிருட்டிணன்

இன்றியமையா உணவுப் பொருள்களை இலவசமாக வழங்குக! – கு.இராமக்கிருட்டிணன்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் இன்றியமையா உணவுப் பொருள்களை நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்க வேண்டும் என்று மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலர் இராமக்கிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாகச் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:   வெள்ளத்தின் காரணமாக ஏராளமானோர் தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி இன்றியமையாப் பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.   இந்த நிலையில், இலவசப் பேருந்து பயண வசதி செய்துள்ளதுபோல…