அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!   மதுரை மக்களுக்கு அங்கே ஓர் அரசியல் மாநாடு நடைபெறும் என்ற அறிகுறியே காணப்படவில்லை. மதுரைத் தெருக்களை அணிசெய்தவை திருமலை நாயக்கர் விழா, தொடர்பான அம்மாவிற்கு நன்றி அறிவிப்பு. அழகிரியின் பிறந்தநாள், தாலின் வருகை முதலான சுவரொட்டிகளே! இருநாள் முன்னர் நடைபெற்ற தமிழ்த்தேசியப்பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாடு பற்றிய 1000 சுவரொட்டிகள் இருந்த இடம் தெரியா அளவிற்கு மேற்குறித்த சுவரொட்டிகள்தாம் இருந்தன. அதுபோல், மதுரையில் மக்கள் நலக்கூட்டணி மாநாடு 26 /…

மக்கள்நலக்கூட்டணியின் மதுரை மாநாட்டுப் படங்கள் – முதல் பகுதி

12.01.2047 / 26.01.2016 (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் – பகுதி 2

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் பேரா.மறைமலை வானொலி உரை

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் பேரா.மறைமலை வானொலி உரை பேரறிஞர் அண்ணா  நினைவுநாளை முன்னிட்டுத் தை 20, 2047 / பிப்.03,2016 அன்று  இரவு 7.00 மணிக்கு – சென்னை, மதுரை,  திருச்சி, கோவை, திருநெல்வேலி முதலிய – அனைத்துத் தமிழக  வானொலி நிலையங்களிலும் பேரா.முனைவர் இலக்குவனார் மறைமலை நினைவுரை ஒலிபரப்பாகிறது.

திருவண்ணாமலைத்தமிழ்ச்சங்கத்தின் முவ்விணை விழா

  தனித்தமிழ் இயக்கம் 100 மொழிப்போர் 50 மொழிஞாயிறு பாவாணர் 114 தலைமை:  முனைவர் வே.நெடுஞ்செழியன் முன்னிலை: பேரா.இரா.சங்கர் வரவேற்புரை: மா.க.சிவக்குமார்  நன்றியுரை:  கி.பூவேந்தரசு சிறப்புரை: இலக்குவனார் திருவள்ளுவன் அழைத்து மகிழ்நர்  : தலைவர் :அருள்வேந்தன் பாவைச்செல்வி செயலர்:  கே.கே.சா பொருளர் : சி.எசு.துரை

பழந்தமிழர் கணிதம் தேடுவோம் வாரீர்! – அழைக்கிறார் தமிழ்த் தொண்டர் பொள்ளாச்சி நசன்!

தமிழர் கணக்கியல் – பழந்தமிழர் கணிதம். தேடுவோம் வாரீர்!   தமிழ் எண் உருக்கள்தாம் கடல் கடந்து சென்று தேய்ந்து, உருமாறி நாம் இப்பொழுது பயன்படுத்துகிற எண்களாக மாறி நம்மை அடைந்துள்ளன. ஒன்று முதல் எட்டு வரையிலான எண்கள்தாம் முதலில் காணப்பட்டன. சுழியம், தொன்பது என்பவை தொடர்ச்சிக்காக இணைக்கப்பட்டவை. தமிழர் கற்றிருந்த ௬௪ (64) கலைகளிலும் இந்த எண்ணுருக்களின் அடிப்படை அமைந்திருக்கலாம். ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’ என்பதன் வழி எண்ணுக்கான நூல்கள் நிறைய இருந்திருக்கலாம். அவை அனைத்தும் இப்பொழுது இல்லை. கணக்கதிகாரம்…

மொழிபெயர்ப்பறிஞர் ம.இலெ.தங்கப்பா – தேவமைந்தன்

மொழியாக்க அறிஞர் ம.இலெ.தங்கப்பா   ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப்பவர்கள் தமிழுலகில் மிகுந்துள்ளனர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், அதைவிட அதிகமாகத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் ம.இலெ. தங்கப்பா.   மொழிபெயர்ப்பு என்று மட்டும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் இப்பொழுது மொழியாக்கம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொண்டு விட்டனர். எல்லாம் ஆங்கிலத்தின் தாக்கத்தால்தான். ‘Translation’ என்பதற்கு ஈடாக மொழிபெயர்ப்பு என்ற சொல்லையும், ‘Trans-creation’ என்பதற்கு ஈடாக மொழியாக்கம் என்ற சொல்லையும் இன்று புழங்குகிறார்கள். இதிலும் இன்னொரு வேறுபாட்டைப் படைத்திருக்கிறார்கள். மொழியாக்கம், மொழிபெயர்ப்பை விடவும் தரத்தால் உயர்ந்தது…

மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பொது மருத்துவ முகாம்

காப்புறுதிக்கழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாம்   தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்தியக் காப்புறுதிக்கழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான திங்கள் பொது மருத்துவ முகாம் நடை பெற்றது.    முகாமிற்கு வந்திருந்தோரை பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ . சொக்கலிங்கம் வரவேற்றார். காப்புறுதிக்கழகத்தின் கிளை மேலாளர் மோகன சுந்தரம் தலைமை தாங்கினார். காப்புறுதிக்கழகத்தின் வளர்ச்சி அதிகாரிகள் தமிழரசு ,பெரியசாமி முன்னிலை வகித்தனர்.மருத்துவர் ஏழுமலை பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் ஆய்வுசெய்தனர். மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களைக் கண்டுபிடித்து அவற்றை…

அனைத்துத் தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்! – அறிஞர் அண்ணா

  நான் கூற விரும்புவது இதுதான். காலப் போக்கில் இந்தி மொழியை நாட்டின் சட்டப்படியான இணைப்பு மொழியாக ஆக்குவதைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் முன், உண்மையிலான இணைப்பு மொழியாக இந்தியை ஆக்கும் வழியில் நீங்கள் செயல்படவேண்டும். எனதருமை நண்பர் வாசுபேயி தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு அதில் இருக்கும் தமிழ் இலக்கியத் தேனை ஆழ்ந்து பருகினாரானால், நிச்சயம் அவர் தமிழ் மொழியைத்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாகத் தேர்ந்தெடுப்பார் என்று கூறிக்கொள்கிறேன். அனைத்துத் தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்!    அதனால், நமது பதினான்கு…

சார்சா இரோலா பகுதியில் முதல் வாரந்தோறும் பல்மருத்துவ முகாம்

  சார்சா இரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்வகை மருத்துவமனையில் பல் மருத்துவ   இலவச முகாம் அனைத்து மாதமும் முதல் வாரம் நடைபெற இருக்கிறது.   இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சிராசுதீன் பற்களுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைகள் குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர், 06 – 5685 022 , 0562861120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   அனைவரும் பயன்பெறும் வகையில்…

மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3

மதுரையில் தை 10, 2047 / சனவரி 24, 2016 அன்று தமிழ்த்தேசியப்பேரியக்கம் நடத்திய மொழிப்போர் 50 மாநாட்டின் ஒளிப்படங்கள் தொகுப்பு 3 (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 1 மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2 இலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்    

மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2

மதுரையில் தை 10, 2047 / சனவரி 24, 2016 அன்று தமிழ்த்தேசியப்பேரியக்கம் நடத்திய மொழிப்போர் 50 மாநாட்டின் ஒளிப்படங்கள் தொகுப்பு 2 (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 1 மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3

பரிசுபெற்ற மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணாக்கர்க்குப் பாராட்டு!

பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி அரசு உதவி பெறும் மாணவர் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வெற்றி பெற்றதற்குப் பாராட்டு   ஈகியர்(தியாகிகள்) நாள்விழா : கே.எம்.எசு..கல்வி அறக்கட்டளை சார்பில் நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் வி.வசந்த குமார் முதல் பரிசை வென்றார்.   இதே பள்ளியின் மாணவர் கண்ணதாசன், மாணவி தனம் ஆகியோர் சிறப்புப் பரிசுகள் பெற்றனர்.   பொற்கிழிக்கவிஞர் அரு.சோமசுந்தரன், குன்றக்குடி மடத்தின் ஆதீனப்புலவர் பரமகுரு…

1 2 16