தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, காஞ்சிபுரம்

மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 மாலை 5.00   எழுச்சி இசை வீரவணக்க நிகழ்வு பாவாணர் விருது வழங்கல் [படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.] தமிழ்த்தேச மக்கள் கட்சி காஞ்சிபுரம்மாவட்டம் வெற்றித்தமிழன் 99768711141, 9751696796

திருக்குறள் இளமையும் புதுமையும் உள்ள நூல் – நாமக்கல் கவிஞர்

திருக்குறள் என்றென்றும் அழியாத இளமையும் புதுமையும் உள்ள நூல்   உலகத்திற்கு தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்று நம்முடைய திருக்குறள். காலம் இடம் நிறம் மதம் என்று வேறுபாடுகளைக் கடந்து எங்கெங்கும் உள்ள எல்லா மனிதருக்கும் எக்காலத்திலும் பயன்தரக்கூடிய அறிவுரை நிரம்பிய அறநூல் திருக்குறள். மனித வருக்கத்தின் இயற்கையமைப்பில் எந்தக் காலத்திலும் மாறுதல் இல்லாதனவாகிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், திருக்குறள் என்றென்றும் அழிவில்லாதிருக்கும். அதுமட்டுமின்றி எப்போதும் இளமையும் புதுமையும் உள்ளதாகவே இருக்கும். மனித சமூகத்துக்கு இன்றியமையாத எல்லா நல்லறிவையும் இப்படித் தொகுத்து வகுத்துத் தந்துள்ள…

ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை ஐந்து ஆண்டுகளில் செய்வேன்! – அன்புமணி

ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை ஐந்து ஆண்டுகளில் செய்வேன்! – அன்புமணி உறுதிமொழி!   “ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை – எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்பேன்” என்று அன்புமணி இராமதாசு கூறினார்.   சென்னை வண்டலூரில்  மாசி 15, 2047 / பிப்பிரவரி 27 ஆம் நாள் அன்று நடைபெற்ற பா.ம.க மாநில மாநாட்டில் மக்களவை உறுப்பினரும், பா.ம.க முதல்வர் வேட்பாளருமான அன்புமணி இராமதாசு பேசியதாவது:   “இது வரலாறு படைக்கின்ற மாநாடு….

தமிழ்க்கருத்துகளை ஆரியமாக ஏமாற்றிய வடமொழியாளர் – பரிதிமாற்கலைஞர்

தமிழரிடத்திருந்த பல அரிய செய்திகளையும் ஆரியர், மொழி பெயர்த்து வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.     வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமைபற்றித் தமிழரது திவ்விய தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்’ என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல…

தேவகோட்டை மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

  தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பள்ளி  மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ  முகாம் நடை பெற்றது.   முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   கண்ணங்குடி அரசு தொடக்க நல்வாழ்வு நிலைய மருத்துவர் வெள்ளைச்சாமி  பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தார். மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களைக் கண்டுபிடித்து எடுத்துக் கூறினார்கள்.   மேலும் சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட…

திருக்குறள் என்றும் அழியாச் சிறந்த பேரிலக்கியம் – இரா.நெடுஞ்செழியன்

திருக்குறள் என்றும் அழியாச் சிறந்த பேரிலக்கியம்   உலக மக்கள் அனைவர்க்கும் பொதுப்படையாக அமைந்த ‘பொதுநூல்’ என்று பெயர் பெற்றது. உலகோர் போற்றிப் புகழுவதற்குரிய ‘பொதுமறைநூல்‘ என்னும் பெருமையுடையது. மக்களின் வாழ்வியலைப் பற்றிக் கூறவந்த ‘வாழ்வியல் நூல்‘ என்னும் சிறப்புடையது. எல்லா மக்களுக்கும் வாழ்க்கை வழிகாட்டியாகத் திகழக் கூடிய ‘வாழ்க்கை வழிகாட்டி நூல்’ என்னும் பெருமை பெற்றது. மக்கள் அனைவர்க்கும் அறநெறி கூறவந்த ‘அறநெறி நூல்’ என்னும் புகழ் பெற்றது. எல்லார்க்கும் அன்புநெறியை அறிவுறுத்த வந்த ‘அன்புநெறி நூல்’ என்னும் சிறப்பு பெற்றது. மக்கள்…

தூய்மையான நகரங்கள் பட்டியலில் மூன்றாம் இடம் திருச்சி!

தூய்மையான நகரங்கள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்குப் பின்தள்ளப்பட்டது திருச்சிராப்பள்ளி!   இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சிராப்பள்ளி மாநகரம் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்த திருச்சிராப்பள்ளி தற்பொழுது ஒரு படி இறங்கியுள்ளது. எனினும், கருநாடகத்தின் மைசூர் நகரம் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.   தூய்மையான நகரங்கள் குறித்து இந்தியத் தர ஆணையம் நடத்திய ஆய்வு முடிவுகளை நடுவண் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கைய(நாயுடு) இன்று வெளியிட்டார்.   அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில்…

மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும்! – வைகோ

மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும்! – வைகோ   ம.தி.மு.க. மாணவரணி மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் எழும்பூரில் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று (மாசி 16, 2047 / பிப்.28, 2016) நடந்தது.   அதன்பின் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகச் சட்டசபைத் தேர்தல் பணிகள் குறித்தும், மக்கள் நலக் கூட்டணி வெற்றி வாய்ப்பு குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடத்துவதற்காக மாணவரணி அறிவுரைக் கூட்டத்தை நடத்தினோம். இதில் பிரமிக்கதக்க வகையில் மக்கள் நலக் கூட்டணிக்குப் பேராதரவு…

ஆளத் தகுதியானவர் யார்?: செயலலிதா சொன்ன குட்டிக்கதை

ஆளத் தகுதியானவர் யார்?: செயலலிதா சொன்ன குட்டிக்கதை   இன்று (மாசி 16, 2047 / பிப்.28, 2016) சென்னை இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் நடந்த விழாவில் முதல்வர் செயலலிதா பேசுகையில் ஆளத் தகுதியானவர் யார் என்பது குறித்து விளக்கக் கூறிய குட்டிக்கதை வருமாறு:–   ஓர் ஊரில் அரசர் ஒருவர் தனக்கு அடுத்தபடியாக நாட்டை ஆளத் தகுதியானவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கென்று சில போட்டிகளை வைத்தார்.   அதில் பல பேர் கலந்து கொண்டனர். கடைசியாக இருவர் மட்டுமே மிஞ்சினர்….

முனைவர் க.இந்திரசித்து நினைவேந்தல் நிகழ்வு – உடுமலைப் பேட்டை

மறைந்த பேராசிரியர்  “முனைவர் க.இந்திரசித்து” நினைவேந்தல் நிகழ்வு!   தி.ஆ.2047, கும்பம் (மாசி):23 / 06.03.2016 ஞாயிறு காலை 9:30மணிக்கு உடுமலைப் பேட்டை, தளிச் சாலையில் உள்ள கிளை நூலகத்தில்  நிகழ உள்ளது! ஐயாவின்பால் தொடர்புள்ள மாணாக்கர்கள் , பேராசிரியர்கள் , பெரியார் தொண்டர்கள் , தமிழறிஞர்கள், தமிழுணர்வாளர்கள் ஆகியோருள் ஒருவராய்த் தாங்களும் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டுகிறோம்! அன்புடன் உடுமலை நூலக வாசகர் வட்டம், உடுமலைப் பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம். 9842091244 9842218014 9486153494

இலக்கு – மார்ச்சு 2016 கூட்டம்

  இலக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது! மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 பிற்பகல் 3.30  தியாகராயநகர், சென்னை அறிவுநிதி விருது பெறுநர்: செல்வி பிரதிக்சா சிறப்புரை : முனைவர் வ.வே.சு. என்றென்றும் அன்புடன் – ப. சிபி நாராயண்  ப. யாழினி

1 2 15