கொழும்பு கம்பன் விழா 2016

    அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கொழும்பு கம்பன் விழா 2016 இரண்டாம் நாள் இரண்டாம் (26) அமர்வில் விருந்தினராகக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். இந் நிகழ்வில் படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் என்ற இராமயண நாடகமும், மேல் முறையீட்டுப் பட்டிமன்றமும் நடைபெற்றன. பா.திருஞானம் – 0777375053

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! – 2 : தமிழரசி

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! தொடர்ச்சி கதைப்பாத்திரங்கள்:  சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர் [திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு தளர் நடை நடந்து வந்த நாரதருடன் அவர்கள் உரையாடல் தொடர்கிறது]. முருகன்: வேதம் என்னும் தமிழ்ச்சொல் ‘வே’ என்பதன் அடியாகப் பிறந்தது. அது வேர் என்பதன் மூலமாகும். ‘தம்’ என்பது பெயர் விகுதி. எனவே தமிழில் வேதம் என்பது மூலநூல் எனப்பொருள் தரும். வடமொழியில் வேதம் என்ற சொல் வித்து – அறிவு…

பாலனின் சிறப்புமுகாம், மொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு சிறுமியின் பார்வை : திவ்வியா பிரபாகரன்

    ஈழத்து மண்ணில் சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலைகளில் இருந்து தப்பி நல்வாழ்வு இல்லாவிட்டாலும் “உயிராவது வாழும் வாழ்வு கிடைக்குமா?” என்ற ஏக்கத்தோடும் வழி தேடும் நோக்கோடும் தமது வீட்டையும் உறவுகளையும் பிறந்து வளர்ந்த மண்ணையும் பிரிந்து “இந்தியா எங்களைக் காப்பாற்றும்”, “தமிழ் நாடு எங்களை அரவணைக்கும்”, “தமிழர்கள் எமக்காக உள்ளார்கள்” என நம்பித் தமிழகம் சென்று பாதுகாப்பு தேடிய எம் ஈழ உறவுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 110 க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் விலங்குகளைப்…

நா.கணேசன் சிறப்புச்சொற்பொழிவு – சென்னைப்பல்கலைக்கழகம்

  பங்குனி 19, 2047 /ஏப்பிரல் 01, 2016  பிற்பகல் 3.00 தமிழ்த்துறை   விண்கலங்கள் ஆய்வறிஞர் முனைவர் நா.கணேசன்: சங்கக்காலக்கலைகளில் மழுவாள் நெடியோன் தலைமை : முனைவர் அ.பாலு

11 ஆண்டு கடந்தும் முழுமை பெறா புதுமயில் தோட்ட வீடமைப்புத் திட்டம்

வீடுகள் எரிந்து 11 ஆண்டுகள் கடந்தும் முழுமை பெறாத  புதுமயில் (New Peacock)தோட்ட  மக்களின் வீடமைப்புத் திட்டம்  நேர்ச்சிகள்(விபத்துகள்), பேரழிவுகள், எதிர்பாராமல் நேர்பவை, இவற்றால் பாதிக்கப்பட்டு வீடுகள், உடைமைகளை இழந்தவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தாலும் ஏனைய அமைப்புகளாலும் பல்வேறு உதவிகள்,  துயரீடுகள் வழங்கப்படுகின்றன.  மலையகத்திலும் பல்வேறு  பேரழிவுகள்பேரழிவு, நேர்ச்சிகள் ஏற்படுகின்றன. எனினும் தோட்ட மக்களை  துயரீட்டுப்பொருள்கள்,  உதவிகள் உரிய வகையில் சென்றடைவதில்லை.  பேரிடர்கள், நேர்ச்சிகள் ஏற்படுகின்ற  சூழல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்குப் பலதரப்பட்ட உதவிகள்,  துயரீடுகள் கொடுக்கப்படுகின்றன என்பதை மறுப்பதில்லை. எனினும் பாதிக்கப்பட்டவர்கள்  நிலையாக…

குழித்தண்டலை, குழித்தலை ஆயிற்று!

குழித்தண்டலை, குழித்தலை ஆயிற்று!   சோலையைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல் தண்டலை என்பதாகும். அது தண்டரை எனவும், தண்டலம் எனவும் வழங்கும்.   திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த குழித்தலை என்னும் ஊர் குழித்தண்டலை என்று முன்னாளில் வழங்கிற்று. காவிரிக் கரையில், பள்ளத்தாக்கான ஓர் இடத்தில், செழுஞ் சோலைகளின் இடையே எழுந்த ஊரைக் குழித்தண்டலை என்று அழைத்தனர் பண்டைத் தமிழர்.   இன்னும் தொண்டை நாட்டில் பூந்தண்டலம், பழந்தண்டலம், பெருந்தண்டலம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் சோலை சூழ்ந்த ஊர்களாக முற்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும்.   –…

இமயம் முதல் குமரி வரை வெற்றி கொண்ட நெடுஞ்சேரலாதன் – சீனி.வேங்கடசாமி

இமயம் முதல் குமரி வரை வெற்றி கொண்ட நெடுஞ்சேரலாதன்   நெடுஞ்சேரலாதன் இமயமலையில் தன் சேரர் குடிச் சின்னமாகிய வில்லைப் பொறித்துவிட்டு மீண்டான் எனப் பதிகம் கூறுகிறது. பதிகம், பதிற்றுப்பத்தைத் தொகுத்தவரால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. பாடல் தோன்றிய காலமே அந்தந்த அரசர்களுக்குரிய காலம். இவன் காலத்தில் பாடப்பட்ட இரண்டாம் பத்துப் பாடல்களில் இமயத்தில் வில் பொறித்த செய்தி கூறப்படாமையை எண்ண வேண்டியுள்ளது.   குமட்டூர்க் கண்ணனார் நெடுஞ்சேரலாதன் மீது பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பித்த காலத்தில் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில்லைப் பொறித்த நிகழ்ச்சி நடைபெறவில்லை….

பாலுமகேந்திரா விருது 2016 : குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன – தமிழ்ப்பட நிலையம்

பாலுமகேந்திரா விருது 2016 – (குறும்படங்களுக்கு மட்டும்) நண்பர்களே இயக்குநர் பாலுமகேந்திரா  நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அவரது  நினைவுநாளான மே 19 அன்று, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்கத் தமிழ்ப்படநிலையம்(ஃச்டுடியோ) ஏற்பாடு செய்திருக்கிறது. விருதுத் தொகை: உரூபாய் 25000/-   தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும்,  பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.   கலந்துகொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும்….

தாள்சுவடிகள் பாதுகாப்பு – ஆவணப்படுத்தல் பயிலரங்கம்

  பங்குனி 16, 2047 / மார்ச்சு 29, 2016 காலை 11.00 தஞ்சாவூர் பேரா.சு.இராசவேலு அரிய கையெழுத்துச் சுவடித்துறை தமிழ்ப்பல்கலைக்கழகம் rajavelasi@gmail.com

மத்திய அரசின் பாறை எரிவளித் திட்டம் : போராட்டம் வெடிக்கும்! – வைகோ எச்சரிக்கை

மத்திய அரசின் பாறை எரிவளித் திட்டத்துக்குத் தமிழக அரசு துணைபோனால் போராட்டம் வெடிக்கும்! – வைகோ எச்சரிக்கை   “பாறை எரிவளித் திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டும் மத்திய அரசுக்குத் தமிழக அரசு துணைபோனால், சோழ மண்டல உழவர்களும், பொதுமக்களும் பெரும் சீற்றத்துக்கு ஆளாகி, கிளர்ந்து எழுந்து பெரும் போராட்டத்தை நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள்” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதிகளை முற்றாக அழிப்பதற்கு மத்திய…

உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைச் சிறையில் அடை !

உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடை ! உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்கு ! தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு  ஆர்ப்பாட்டம்!    உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும், உழவர் தற்கொலைகளைத் தடுக்கத் தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமெனக் கோரியும், தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், 11.03.2047 / 24.03.2016 காலை, உழவர் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. உழுபொறி எந்திரத்தை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில், பாப்பாநாட்டில் உழவர் பாலன் மீது கொடுந்தாக்குதல் நடத்திய…

தமிழாராய்ச்சிக்குதவும் தமிழ் முனைவர் குழுமம்

தமிழ் முனைவர் குழுமம் வணக்கம். தமிழில் உயர்கல்வியை மேம்படுத்தும் பொருட்டு ஒரு முகநூல் குழுவைத் தொடங்கியுள்ளேன். குழுவின் நோக்கம்: 1) தமிழகக் கல்லூரிகளில் உள்ள முனைவர், ஆய்வுநிறைஞர் (எம்.பில்.) பட்ட வகுப்பு மானவர்கள் ஆய்விற்கு உதவுதல் 2) பல்வேறு கல்லூரி, பல்கலைகழகப் பாடத் திட்டங்களை மேம்படுத்த நெறியுரை வழங்குதல் 3) தமிழகத்தில் ஆய்வுகள் அடிப்படையிலான உயர்கல்வி அமைய முயற்சி செய்தல்   குழுவில் இணையப் பின்வரும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகிறார்கள்!   1) முனைவர் பட்டம் பெற்றவர்கள். 2) இயற்பியல், பொறியியல், தமிழ்,…