சென்னை திரிசூலம் பகுதியின் உண்மையான பெயர்? – இரா.பி. சேது(ப்பிள்ளை)

சென்னை திரிசூலம் பகுதியின் உண்மையான பெயர்?   தோப்பு   மரஞ் செடிகள் தொகுப்பாக வளரும் இடம் தோப்பு என்று அழைக்கப்படும். தோப்பின் அடியாகப் பிறந்த ஊர்களும் உண்டு. மந்தித் தோப்பு என்னும் ஊர் நெல்லை நாட்டிலும், மான்தோப்பு இராமநாதபுரத்திலும், நெல்லித் தோப்பு தஞ்சை நாட்டிலும், வௌவால் தோப்பு தென்னார்க்காட்டிலும் விளங்குகின்றன. சுரம் சுரம் என்பது காடு. தொண்டை நாட்டில் உள்ள திருச்சுரம் இப்பொழுது திரிசூலம் என வழங்குகின்றது. அந்நாட்டில் உள்ள மற்றோர் ஊரின் பழம் பெயர் திருவிடைச்சுரம். அது திருவடிசூலம் எனத் திரிந்துவிட்டது….

புதுவைத் தமிழ்ச் சங்க மகளிர் விழா

  புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக  மகளிர் விழா,  புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.   விழாவில்  பேராசிரியர் இரா.விசாலாட்சி தலைமையில் ‘மகளிர் எழுச்சி‘ எனும் தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது. கல்லூரி, பல்கலைக்கழக மாணவியர் பதின்மர் கவிதை வாசித்தனர்   புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்   துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச்செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு  துணைச்செயலர்…

முனைவர் க.சிரீதரனுக்குத் தமிழ்ச்சான்றோர் விருது – வாழ்த்துப்பா

  தமிழகப்புலவர்குழு   கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர்  முனைவர் க.  சிரீதரனுக்குத் தமிழ்ச்சான்றோர் விருது வழங்கியது.     பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016 அன்று  நடைபெற்ற தமிழகப் புலவர் குழுவின்  107ஆவது  கூட்டத்தை முன்னிட்டுப்பிற்பகல் கருத்தரங்கம் நடைபெற்றது.  சங்க இலக்கியங்களில் அறம், வீரம்,  காதல்,  நட்பு, போன்ற  பல்வேறு தலைப்புகளில்  தமிழ்ச்சான்றோர்கள் உரையாற்றினர்.   முனைவர் மறைமலை இலக்குவனார்,  கவிஞர்  பொன்னடியான் வாழ்த்துரையாற்றினர். கி. ஆ. பெ.வி. கதிரேசன்  நன்றி நவின்றார். இந்நிகழ்வின் பொழுது . கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் …

தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் : தீர்மானங்கள்

  முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களால் 1958-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழகப் புலவர் குழுவின் 107-ஆவது கூட்டம் பங்குனி 07, 2047 /  மார்ச்சு 20, 2016 அன்று திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் – திருவில்லிப்புத்தூர் தீர்மானம் – 1 :  நன்றியும் பாராட்டும்         தமிழகப் புலவர் குழுவை அழைத்துச் சிறப்பித்து இந்த 107 -ஆவது கூட்டத்தைச் சிறப்புற அமைத்துத் தந்த கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் முனைவர்.க.சிரீதரன் அவர்களுக்கு…

தமிழகப் புலவர் குழு – புதிய பொறுப்பாளர்கள்

  தமிழகப் புலவர் குழுவின்  107 ஆவது  கூட்டம்  கிருட்டிணன்கோவில் நகரில் உள்ள  கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில்,  கோலாகலமாக  நடந்தேறியது. பங்குனி 07, 2047 /  மார்ச்சு 20, 2016 காலை  10.00 மணியளவில்  தமிழ்த்தாய் வாழ்த்துடன்  கூட்டமானது  தொடங்க, கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் க.சிரீதரன் வரவேற்புரையாற்றினார்.   புலவர் குழுவின் செயற்குழுக் கூட்டத்தில்  தலைவர்,  செயற்குழு உறுப்பினர்கள், பொறுப்பாண்மைக்குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புலவர் குழுவின் தலைவராக முனைவர் சிலம்பொலி செல்லப்பன், துணைத்தலைவராக இதுவரை செயலாளராகப்பணியாற்றிய, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,  செயலாளராக  முனைவர்  மறைமலை இலக்குவனார்,…

தங்கர்பச்சானின் ‘சொல்லத்தோணுது’ நூல் வெளியீடு

  பங்குனி 13, 2047 / மார்ச்சு 26, 2015 காலை 10.30 வெளியீடு:  உ.சகாயம் இ.ஆ.ப. பெறுநர்:  மேனாள் நீதிபதி சந்துரு   ஆண்டு முழுவதும் நான்  தமிழ் ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய அரசியல்,சமூகக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா;  தங்கள் வருகை எனக்கு மகிழ்வைத்தரும். மிக்க நன்றி! -தங்கர்பச்சான்

சி.இலக்குவனார் – சில நினைவுகள் : தீக்கதிர்

சி.இலக்குவனார் – சில நினைவுகள் “ஆறடி வளர்ந்த நல்ல ஆண்மையர் தோற்றம் விஞ்சம் மாறனோ ஆரன் தானோ மற்றெனின் சேரர்கோனோ வீறுடன் நீண்டமேலாடை வீசுகை முழந்தாள்தோய ஏறுபோல் நிமிர்ந்து செல்லும் இலக்குவனார்…” என்னும் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் நயமிகு பாடலடிகள் இலக்குவனாரை உள்ளத்திரையில் பதியவைக்கும். இலட்சுமணன் எனத் தமது பெற்றோரால் பெயரிடப்பட்டிருந்தவர், பள்ளிப்பருவத்தில், தமது தமிழாசான் சாமி. சிதம்பரனார் வழங்கிய அறிவுரையால், இலக்குவன் எனத் தமிழ்மணம் கமழும் பெயராக மாற்றிக் கொண்டார். “இராமனை ஏற்றுக்கொள்ளாத கருஞ்சட்டைக்காரனாகிய நீ இலட்சுமணன் எனப் பெயர் வைத்துக்கொள்வதேன்?” எனத்…

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! – பாரதிதாசன்

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே! வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே வீரனின் வீரமும், வெற்றியும் நீயே! தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ? தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ? சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ? செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே! நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! முந்திய நாளினில் அறிவும் இலாது மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது செந்தாமரைக் காடு பூத்தது போலே செழித்தஎன்…

தமிழகக்கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் ஐம்பெருவிழா

  பங்குனி 13, 2047 / மார்ச்சு 26, 2015  மாலை 6.00 இராயப்பேட்டை, சென்னை 14   பேரா.முனைவர் சி.இரத்தினசபாபதி பவளவிழா  பவளவிழா மலர் வெளியீட்டு விழா நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணன் பிறந்தநாள் விழா முனைவர் ப.முருகையன், முனைவர்  வச்சிரவேலு நூல்  வெளியீட்டு விழா பேரா. முனைவர் சீவா வச்சிரவேலு  பணிநிறைவு பாராட்டு விழா  

“சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் – புதுச்சேரி

  பெருந்தகையீர்! வணக்கம். புதுவை நடுவண் பல்கலைக்கழகத் தமிழியற்புலம், பல்கலைக் கழக நல்கைக்குழுவின் ஆதரவோடு(UGC), “சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம்   பங்குனி 11,12 & 13 மார்ச்சு 24, 25 & 26. 2016 வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடைபெறவிருக்கின்றது. தங்கள் பங்கேற்பை விரும்பி அழைக்கின்றோம். அறிவன்புடன் திட்ட ஒருங்கிணைப்பாளர். நன்றி!

பெண்ணை மடல் மா – உருத்ரா இ.பரமசிவன்

பெண்ணை மடல் மா பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌ எருக்கம் சூடி உருக்கம் பயின்று ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌ இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே! தகரக்கூந்தல் கனலன் குரலென‌ கூரிய வீசும் அவள் நிலை அறியா புல்லியக்கல்லா நெடுமகன் போல மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌ அவள் பயிர் மடமே உணரா நின்று உகுத்தனை என்னே விரிஉளை அலரி. தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி. குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள் செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை நெடுமா தொலைச்சிய‌ செல்தி!…