இராமாயணப் பூமி இலங்கை! – வே.இராதாகிருட்டிணன்

இராமாயணப் பூமி இலங்கை!   “சிவபெருமானின் ஐந்து திருத்தலங்களைக் கொண்டிருப்பதால் இலங்கையைச் சிவபூமி எனச் சிறப்பிக்கிறார்கள். ஆனால், இலங்கை இராமாயணத்தோடு மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதால் இராமாயண பூமி எனச் சொன்னாலும் தவறில்லை எனத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், இலங்கை இராமாயண பூமியே என்பதை ஆண்டுதோறும் உலகளாவிய தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லவே நமது கம்பன் கழகம் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கம்பனுக்கு விழாவெடுத்து அதனூடாக இராமாயணத்தின் பெருமையைப் பறைசாற்றுகின்றது என என் மனதுக்குப் படுகின்றது” எனக் கூறுகின்றார் கல்வி அமைச்சரும் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின்…

என்று முடியும் ஈழ ஏதிலியர் துயரம்? – இலக்குவனார் திருவள்ளுவன்

செய்தியும் சிந்தனையும் [செய்தி:  நண்பர்  இ.பு.ஞானப்பிரகாசன், மின்னம்பலம் (https://minnambalam.com/k/1459296056 )   தளத்தில் இருந்து பின் வரும் செய்தியை அனுப்பியிருந்தார்: திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் ஏதிலியர்கள் பதினான்கு பேர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொய் வழக்குப் பதிவு செய்து தங்களைச் சிறையில் அடைத்துள்ளதாகவும், தங்களை விடுவிக்கும் வரை காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மார்ச்சு 28, 29 ஆகிய இரண்டு நாட்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள், மூன்றாவது…

மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா? ஆளுங்கட்சிக்குத் தண்டனையா?

மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா? ஆளுங்கட்சிக்குத் தண்டனையா? செய்தியும் சிந்தனையும் [செய்தி : கடந்த மாசி 02, 2047 / பிப்பிரவரி மாதம் 14 அன்று  திருச்சிராப்பள்ளியில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. அங்கு மதுஒழிப்பை வலியுறுத்திப்பேசிய,  மாநாட்டினை நடத்திய மக்கள் அதிகாரம்  இயக்கத்தின் மாநில அமைப்பாளர் சி. இராசு, செயற்குழு குழு உறுப்பினர் காளியப்பன்,  தாவீது இராசு, சென்னை ஆனந்தியம்மாள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்புக் குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு  அரசின் சாராயக்கடை( தாசுமாக்கு) பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்…

கி.மு நான்காம் நூற்றாண்டுச் சங்கக் கால நாணயத்தில் அரிய தகவல்கள்! – இரா.கிருட்டிணமூர்த்தி

கி.மு நான்காம் நூற்றாண்டுச் சங்கக் கால நாணயத்தில் அரிய தகவல்கள்! – நாணயவியல் ஆய்வாளர் இரா.கிருட்டிணமூர்த்தி   “கி.மு நான்காம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட சங்கக் காலப் பாண்டியரின் நாணயத்தில் அரிய தகவல்கள் கிடைத்துள்ளன” எனத் தென்னிந்திய நாணயவியல் ஆய்வு அமைப்பின் தலைவரான தினமலர் ஆசிரியர் இரா.கிருட்டிணமூர்த்தி கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சங்கக் காலப் பாண்டியர் நாணயங்களை அண்மையில் ஆய்வு செய்தபொழுது பல அரிய தகவல்கள் கிடைத்தன. நாணயத்தின் முன்புறப் பகுதியின் கீழ்ப் பகுதியில் யானை ஒன்று வலப் பக்கம் நோக்கி…

புதுச்சேரி, சித்தர் இலக்கியப் பன்னாட்டுக் கருத்தரங்க ஒளிப்படங்கள்

புதுவை நடுவண் பல்கலைக்கழகத் தமிழியற்புலம், பல்கலைக் கழக நல்கைக்குழுவின் ஆதரவோடு(UGC), பங்குனி 11,12 & 13 மார்ச்சு 24, 25 & 26. 2016 வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடைபெற்ற “சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்க ஒளிப்படங்கள் தொகுதி 01   [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல்-தனிப்பாடல் : காளமேகம்

பங்குனி 23, 2047 / ஏப்பிரல் 05, 2016 மாலை 6.30,  சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய  வேண்டுகின்றோம். சென்னைக் கம்பன் கழக மாத நிகழ்வு ; வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.     என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதீய வித்யாபவன்

சித்திரைக் கலைவிழா- போட்டிகள், காட்டுப்பாக்கம், சென்னை

  ” உலகத் தமிழார்வலர்கள் “   தமிழ் பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியம் வரைதல், கதை சொல்லும் போட்டி, இந்தியப்பரம்பரை  உடைகள். தமிழ் மீது ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்

மக்கள் கடன் – களப்பாள் குமரன்

தன்குடிப்பேணித் தன்கிளைதாங்கிச் சுற்றம்தழுவி தந்தை இவரெனப் போற்றப் புரிதல். தலைமைஏற்றித் தக்கன ஆற்றிப்பலர்புகழ் பண்புடைமை தாயெனும் தகைமை யுடையாள் பெற்றோர் மனங்குளிர நடத்தல் நன்றே ஆற்றுதல் மக்கள் கடன். களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 24: 13: பக்கம்.24

இல்லறப் பண்புகள் – சேக்கிழார்

இல்லறப் பண்புகள் காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும் நாவலர்க்கு வளம்பெருக நல்கியும் நானிலத்துள்ளோர் யாவருக்கும் தவிராத ஈகைவினைத் துறைநின்றார் – தெய்வச் சேக்கிழார்

பொருளை உணரவும் உணர்த்தவும் பல்துறை அறிவு தேவை! – வ.சுப.

பொருளை உணரவும் உணர்த்தவும் பல்துறை அறிவு தேவை!  ஒரு நூலின் கருத்தையோ பாட்டின் பொருளையோ காண்பதற்குப் பல அறிவுக் கூறுகள் வேண்டும்.  இது இன்ன காலத்துத் தோன்றிய நூல் என்ற கால அறிவும், இக்காலத்து இச்சொல்லுக்கு இப்பொருள் என்ற சொல்லறிவும், இன்ன காலத்து இருந்த பழக்க வழக்கங்கள் இவை என்ற சமுதாய அறிவும், இத்தொடர் ஓடிக்கிடக்கும் முறை இது என்ற நடையறிவும், இன்ன பிறவும் இருந்தால்தான் பொருளை முரணின்றிக் காண முடியும். முனைவர் வ.சு.ப.மாணிக்கம்: சிந்தனைக் களங்கள்: பக்கம். 213