மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா ?

கண்ணாடியைத் தின்னும் வித்தை எப்படி ? மந்திரமா? தந்திரமா ? அறிவியல் நிகழ்ச்சியில் சுவையான நிகழ்வுகள்! காதில் குளிர்பானம் குடிப்பது எப்படி? அறிவியல் உண்மை விளக்கம் தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ‘அறிவியல் அறிவோம் நிகழ்ச்சி!’ வாயிலாகப் பள்ளி மாணவர்களுக்கு  அறிவியல்  வித்தைக்காட்சியும், அதன் தந்திரங்களும் சொல்லப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இலெட்சுமி தேவி தலைமை தாங்கினார் சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர்…

உரைதொடர்ந்து பரவிய விதம்! – இறையனார்

உரைதொடர்ந்து பரவிய விதம்   மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனார் கீரங் கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் தேனூர் கிழார்க்கு உரைத்தார்; அவர் பாடியங் கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் மணலூர் ஆசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேத்தனார்க்கு உரைத்தார்; அவர் செல்லூர் ஆசிரியர் ஆண்டைப் பெருங்குமாரனார்க்கு உரைத்தார்; அவர் திருக்குன்றத்து ஆசிரியர்க்கு உரைத்தார்; அவர் மாதவனார் இள நாகனார்க்கு உரைத்தார்; அவர் முசிறி ஆசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார். இறையனார் களவியல் உரை

ஆர்வத்துடன் கற்க! – பவணந்தி முனிவர்

ஆர்வத்துடன் கற்க! கோடல் மரபே கூறும் காலை பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகி அவர் குறிப்பிற் சார்ந்து இருஎன இருந்து சொல்எனச் சொல்லி பருகுவன் அன்ன ஆர்வத்தனாகிச் சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச் செவிவாயாக நெஞ்சு களனாக கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போத லென்மனார் புலவர் பவணந்தி முனிவர் : நன்னூல்: 40 காண்டிகையுரை   கோடல் மரபு கூறுங்காலை – பாடங் கேட்டலினது வரலாற்றைச் சொல்லும் பொழுது , பொழுதொடு சென்று – தகும் காலத்திலே போய்…

இலக்கிய ஆராய்ச்சி தொன்று தொட்டே சிறப்பாக உள்ளது. – மு.வ.

இலக்கிய ஆராய்ச்சி தொன்று தொட்டே சிறப்பாக உள்ளது.   இலக்கியம் தோன்றியவுடனே ஆராய்ச்சியும் தோன்றியது. தமிழ் இலக்கிய ஆராய்ச்சி பழமையானது. இலக்கிய விருந்தை நம் முன்னோர்கள் வாரி வழங்கியுள்ளனார். தலைதலைமுறையாக வழிவழியாக அதை நாம் பார்த்து நுகர்ந்து வருகிறோம். எழுத்தினால் எழுதி வைக்கும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டதே என்றாலும், ஆராய்ச்சி தொன்றுதொட்டு இருந்துவருகிறது. பாட்டை, ஆராய்ச்சியாளர் புகழ்ந்தனர். உரையாசிரியர்கள் ஒருபடி முன்னே போய் இது தங்கள் கருத்து, இது இதரர் கருத்து என்று காட்டினர். அறிஞர் மு.வரதராசனார்: தமிழ்த்தாத்தா: பக்கம்.6

போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது

சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையத்தருகே போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது   வேளாண் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் இழந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கழுத்தில் தூக்குக் கயிற்றுடன் சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது செய்யப்பட்டனர்.   கடந்த பங்குனி 18, 2047 / ௩௧-௩-௨௦௧௬ (31.3.2016) அன்று இப்போராட்டம் நடைபெற்றது. “பயிர் செய்த நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு விட்டன. ௬௦௦ ஆயிரம் (60 இலட்சம்) தென்னை மரங்கள்…

இயற்கை வேளாண் கருத்தரங்கம், பாலையூர், குத்தாலம்

  தமிழக இயற்கை உழவர் இயக்க தலைவர் திரு. அ.அம்பலவாணன் தலைமையில் நம்மாழ்வார் அவர்களின் 78 ஆவது பிறந்த நாள் விழா பங்குனி 24, 2047 / 06.04.2016 புதன் கிழமை காலை 9.30 மணியளவில் குத்தாலம் வட்டத்தில் உள்ள பாலையுரில் நடைபெற உள்ளது.   இவ்விழாவில் இயற்கை வேளாண்மை குறித்தும் நம்மாழ்வாருடைய கொள்கை – திட்டங்களை எடுத்துச் செல்வது குறித்தும் ஒரு விழாவாக நடத்த திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் நம்மாழ்வார் அவர்களோடு பல ஆண்டு காலம் பணி செய்த முன்னோடிகளும்…

நுவரெலியாவில் இளவேனில் இசைவிழா

  எதிர்வரும் நுவரெலியா  இளவேனில் காலத்தை முன்னிட்டுத் தென்னிந்தியாவின்   புகழ்மிகு இசைக்குழுவான ஆசான்(ஈனோக்கு) இன்பராகம் (Enoch Rhythms) இசைக்குழுவினரின் தென்னிந்தியக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் இன்பஇராகங்கள் இசை நிகழ்ச்சி  சித்திரை 03, 2047 / 16.04.2016 அன்று நுவரெலியா சினிசிட்டா  திடலில்   நடைபெறவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நுவரெலியா மாநகர முதல்வர் மகிந்த தொடம்பே கமகே முன்னிலையில் ஈனோக்குஇசைக்குழுவின் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது. ஆசான் (ஈனோக்கு) இன்பராகம் குழுவினரின் இசை நிகழ்ச்சி எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டு நாளான சித்திரை 01, 2047 / 14.04.2016 அன்று …

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 2.விதியியல் அறிதல்

மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.]  2. விதியியல் அறிதல் 11. வினையின் விளைவே விதியென வந்துறும். நாம் செய்யும் செயல்களின் விளைவே நம்முடைய விதியாகி நம்மிடம் வந்து சேரும். விதிசெய் கர்த்தா வினைசெய் யுயிரே. ஆதலால் விதியைச் செய்யக்கூடிய மூலப்பொருள் செயல்களைச் செய்யக்கூடிய உயிரே ஆகும். மெய்ப்பொருள் வினையை விளைத்துயிர்க் கீயும். இறைவன் வினைகளின் விளைவை உயிர்களுக்குக் கொடுக்கிறோம். தீவினை விளைவிற் சேருவ துன்பம். தீவினைகளால் துன்பமே வந்து சேரும். நல்வினை விளைவி னணுகுவ…

அடிமைப்படக் காரணம் அரசர்களே!

நம் நாடு அடிமைப்படக் காரணம் நம் அரசர்களே! – தமிழ்நாடு அரசு அருங்காட்சியக மேனாள் துணை இயக்குநர்     “நம் நாட்டை ஐரோப்பியர்களுக்கு அடிமைப்படுத்தியவர்கள் நம் அரசர்கள்தாம்” என்றார் தமிழ்நாடு அரசு அருங்காட்சியக மேனாள் துணை இயக்குநர் செ.இராசா முகமது அவர்கள்.   தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற விசயநகரக் காலம் முதல் குடியேற்றஆதிக்கக்(காலனியாதிக்க) காலம் வரையிலான கடல்சார் வரலாறு என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:   “தமிழ்நாட்டில் விசயநகரப் பேரரசின் ஆட்சிக் காலம்…

நீதிமாரே! நம்பினோமே! – நீதியரசர் கே.சந்துரு – நூல் மதிப்புரை

நீதிமாரே! நம்பினோமே! – நீதியரசர் கே.சந்துரு – நூல் மதிப்புரை நூல்: நீதிமாரே! நம்பினோமே!! ஆசிரியர்: கே. சந்துரு வெளியீடு: கவிதா பதிப்பகம், அஞ்சல் பெட்டி எண்: 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டி அங்காடி(பசார்), சென்னை – 600017. பக்கம்: 208 விலை: உரூ.150/-   இந்திய நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கைகள் மெல்ல மெல்லச் சரிந்து வரும் நிலையில், நீதியரசர் கே.சந்துரு எழுதியுள்ள இந்த நூல் நம் குமுகக் (சமூக) கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறது. அத்துடன், நீதித்துறையின் கடமைகளையும் பொறுப்புகளையும் வலியுறுத்தவும் தயங்கவில்லை….